அமெரிக்கா - இஸ்ரேல் யுத்தவெறி;

ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில், தொடக்கப் பள்ளி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. எவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு.

எந்த சாதியினருக்கு கல்வி இல்லை என்றார்களோ, அந்த சாதியில் பிறந்த நான் உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளேன்.-மேடையில் கண்கலங்கி பேசிய அமைச்சர் கோவி செழியன்.
ஆயத்துல்லா அலி கமேனியின் மரணத்தை அறிவித்தது ஈரானிய அரசு ஊடகம்.ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படுகிறது7 நாட்கள் பொது விடுமுறையையும் அறிவிப்பு.
உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலை ஒரு மாபெரும் குற்றம்; இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என ஈரான் அதிபர் மாளிகை சூளுரை.பழிவாங்கும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என ஈரான் ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 2 (இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழ்நாட்டில் 2(இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தனது சொந்த சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளது. கடந்த தேர்தலில் தான் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் முஸ்லீம் லீக் கட்சி தோல்வியை சந்தித்து குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பாதாம், முந்திரி குடோனில் தீ விபத்து.







அமெரிக்கா - இஸ்ரேல் யுத்தவெறி;  

ஈரான் நகரங்கள் மீது குண்டு மழை!

ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும்  அமெரிக்க ராணுவம் இணைந்து கொடூ ரத் தாக்குதலைத் துவங்கியுள்ளன. 

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது குண்டு களை வீசி குழந்தைகள் உட்பட அப்பாவி  மக்களை கொன்று குவித்து வருகின்றன.

 அமெரிக்கா - இஸ்ரேலின் இந்த போர்  வெறியால், மத்திய கிழக்கு பிராந்தியம்  முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் நேரப்படி சனிக்கிழமை காலை  10 மணியளவில் அமெரிக்கா மற்றும் இஸ் ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கின. 

தலைநகர் டெஹ்ரான், இஸ்ஃபஹான் (Isfahan), கோம் (Qom), கராஜ் (Karaj), கெர் மான்ஷா ஆகிய நகரங்களில் அமெரிக்கா வும் இஸ்ரேலும் குண்டுகளை வீசின. 

பிற் பகல் 3:30 மணியளவில் தலைநகர் டெஹ்ரான் மீது மீண்டும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. 

தலைநகரைக் குறிவைத்து மோசமான தாக்குதல் இஸ்ரேல் தாக்குதலால் பெரும் கட்ட டங்களில் ஏற்பட்ட சிதைவுகள் காரணமாக  தெஹ்ரான் வான்பரப்பு முழுவதையும் கரும்புகை சூழ்ந்தது.

  தலைநகரின் மையப் பகுதியில் உள்ள பல குடியிருப்பு கட்ட டங்கள் இஸ்ரேல் அமெரிக்காவின் ஏவு கணைகளால் குறிவைக்கப்பட்டன. இதில் குழந்தைகள், பெண்கள் என  அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டிருக்க லாம் என அஞ்சப்படுகிறது.  

தலைநகர் டெஹ்ரானில் இருந்து  பொதுமக்கள் அனைவரும் வெளியேறு மாறு, ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன் சில் அறிவுறுத்தியுள்ளது. மோசமான சூழ்நிலை காரணமாக, “முடிந்தவரை, பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

அதே வேளையில், உங்களால் முடிந்தால், வேறு இடங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று விட வேண்டும்” என்று அந்நாட்டின்  பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட  பள்ளிக் குழந்தைகள் பலி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானில்  உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் மீது  குண்டு வீசி 50- க்கும் மேற்பட்ட அப்பாவி  பச்சிளம் குழந்தைகளை படுகொலை செய்துள்ளன.

 தெற்கு ஈரானின் ஹோர் மோஸ்கான் மாகாணத்தில் அமைந்துள்ள  மினாப் நகரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் குண்டு வீசப்பட்டதாக அந்நாட்டு  அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.  

இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் ரோர் ஆஃப் தி லயன்’ (Operation Roar  of the Lion) என்று பெயரிட்டு இஸ்ரேலும்,  ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்று பெயரிட்டு அமெரிக்கா வும் கொக்கரித்துள்ளன. காமேனி பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு .

இந்தத் தாக்குதல்கள் ஈரான் நாட்டின்  மதத்தலைவர் அயதுல்லா அலி காமேனி யின் அலுவலகம் மற்றும் ஈரான் ஜனாதி பதியின் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு மற்றும் ராணுவ நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன.

 இத்தாக்குதலுக்கு முன்னதாகவே ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கி யான் மற்றும் மதத் தலைவர் அயதுல்லா  அலி காமேனி ஆகிய இருவரும் பாதுகாப் பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதல் கள், சர்வதேச சட்டம் மற்றும் ஈரானின் இறையாண்மையை மீறும் செயல் என  ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் அவை  சாசனத் தின் பிரிவு 51 இந்த படி (Article 51), தற் காப்புக்காகப் பதிலடி தாக்குதல் நடத்தும்  உரிமை தங்களுக்கு உள்ளது எனவும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா திட்டம்  இதனிடையே, ஈரான் மீதான தாக்கு தல் தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்ட டிரம்ப், “ஈரான் மீது ‘மிகப் பெரிய போர்த் தாக்குதல்களை’ அமெரிக்கா துவங்கியுள்ளது.

 ஈரான் ராணுவம் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும். இல்லை யெனில் மரணத்தை தான் சந்திப்பீர்கள்.  ஆயுதங்களைக் கைவிட்டால் நீங்கள் நியாயமாக நடத்தப்படுவீர்கள், இல்லை யெனில் நிச்சயம் கொல்லப்படுவீர்கள்” என மிரட்டல் விடுத்துள்ளார். 

“ஈரான் ஒரு  ‘பயங்கரவாத நாடு’ அவர்களால் இஸ்ரே லுக்கு அச்சுறுத்தல் உள்ளது” என்று இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும், ஊளையிட்டுள்ளார். விமானச் சேவைகள் ரத்து இந்தத் தாக்குதலால் வளைகுடா நாடு கள் மற்றும் இஸ்ரேலின் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளன. ‘ஏர் இந்தியா’ மற்றும்  ‘இண்டிகோ’ உள்ளிட்ட பல விமான நிறு வனங்கள் தங்கள் சேவைகளைத் திசை திருப்பியுள்ளன. 

பல சேவைகளை ரத்து  செய்துள்ளன. இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாது காப்புத் துறை அமைச்சர் அமீர் ஹடாமி  நாசிர்சாதே கொல்லப்பட்டதாக இஸ்ரேல்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்  இந்த தகவலை ஈரான் உடனடியாக உறுதி  செய்யவில்லை.

  ஈரான் பதிலடி!

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பதிலடி  கொடுக்கும் வகையில் “உண்மை  வாக்குறுதி-4” (True Promise-4) என்ற  பெயரில் பதிலடி தாக்குதல்களை ஈரான்  துவங்கியுள்ளது. 

முதற்கட்டமாக இஸ்ரேல்  மீதும் அவர்கள் ஆக்கிரமித்துள்ள பாலஸ் தீனப் பகுதிகள் மீதும் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை துவங்கியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC)  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

 ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்க துவங்கியுள்ள நிலையில் இஸ்ரேல்  முழுவதும் பல நகரங்களில் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளன.   ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள மற் றொரு அறிக்கையில் ஜோர்டான் , பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு  அமீரகத்தில் (UAE) உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும், ஆக்கிரமிக்கப் பட்ட பாலஸ்தீன நிலங்களின் மையப்பகுதி யில் உள்ள ராணுவ மறைவிடங்களையும்  குறிவைத்துத் தாக்கியதாக தெரிவித் தது.

 இதனை அந்நாடுகளும் உறுதிப் படுத்தியுள்ளன. பிராந்தியம் முழுவதும் போர்ப் பதற்றம் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ  இலக்குகளும் ‘ஈரானின் ஏவுகணை களின் சக்திவாய்ந்த தாக்குதல்களால்’ தாக்கப்பட்டுள்ளது. 

இந்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நிறுத்தப் படாது. எதிரி தீர்க்கமாக தோற்கடிக்கப் படும் வரை இந்த நடவடிக்கை இடைவிடா மல் தொடரும். மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்க சொத்துக்களும் (ராணுவத்தலங்களும்) ஈரான் ராணுவத்திற்கு சட்டப்பூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  

மத்திய கிழக்கின் பிற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தலங்களின்  மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் மற்றும் சவூதி அரே பியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 

சர்வதேச சட்டப்படி ஈரான் மீது  பதில் தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை  உள்ளது என்று இந்த நாடுகள் கூறி யுள்ளன. இது பிராந்தியம் முழுவதும் போர் உரு வாகுமோ? என்ற பதற்றத்தை உருவாக்கி யுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை