மேக் இன் இந்தியா?

எரிபொருள் தட்டுப்பாடு பற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒன்றிய அரசுக்கு துணை நின்று மேற்காசியப் போர்ச் சூழலை எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் பேட்டி. ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்தி பரப்பபடுவதாக விளக்கம்.தேர்தல் ஆணையத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் நிறைவு. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி வரும் ஞாயிறு அல்லது திங்கள் வெளியாக வாய்ப்பு.நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு. கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவு இடைவெளிக் காலம் 45 நாட்களாக அதிகரிப்பு.வணிக பயன்பாட்டு கேஸ் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடல், வேலையிழப்பு என அதிகரிக்கும் பாதிப்பு. உணவுப் பொருட்கள், சிற்றுண்டிகளின் விலை உயர்வதால் பொதுமக்கள் பாதிப்பு.வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு என்ற வதந்தியால் பீதி. கரூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலி சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் குவிந்த மக்கள்.மின்சார அடுப்புகள், மின்சார குக்கர்களின் விற்பனை அமோகம்.  பொதுமக்கள் தேடித் தேடி வாங்கியதால், மண் அடுப்புகளுக்கும் தட்டுப்பாடு.மதுரையில் 398 சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்க முயற்சி. இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து நடவடிக்கை.வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்கப்படுவதாக வெளியான அறிவிப்பு. ஓ.பி.சி. வருமான வரம்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு. அரசுப் பணிகளில் ஓ.பி.சி. பிரிவினர் சேர்வதற்கு இருந்த தடைகள் நீங்கியதாக மகிழ்ச்சி.சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு என்ற வதந்தியால் பீதி. கார், இருசக்கர வாகனங்களுடன் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்.

செயற்கையான தட்டுப்பாட்டால் சில பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடல். பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு முன்னுரிமையுடன் விநியோகம் நடைபெறுவதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்.
மக்களை அச்சப்பட வேண்டாம் எனக் கூறும் பிரதமர் மோடிதான் அச்சத்தில் உள்ளார். எப்ஸ்டீன் கோப்பு விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்.
அமெரிக்கா, இஸ்ரேலிய கூட்டுப் படைகளுக்கும், ஈரானுக்கும் 2-வது வாரமாக நீடிக்கும் போர். ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூடி வைத்து, தாக்குதலை தொடர்வோம் என ஈரான் திட்டவட்டம்.



இதுதான் 

‘மேக் இன் இந்தியா?

ரஷ்யாவிடமிருந்து 30 நாட்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள இந்தியா வுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா  திமிர்த்தனமாக கூறுகிறது.

 ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா வின் அனுமதி எதற்கு? என்ற எளிய கேள்வி யாருக்கும் எழவே செய்யும். 

ஆனால் இது நரேந்திர மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று அவரது அடிப்பொடி ஊட கங்கள் புல்லரித்து எழுதுகின்றன.

ஆனால் அதே  நேரத்தில் ஏற்கெனவே வழங்கியது போல மலிவு விலையில் கச்சா எண் ணெய் வழங்க முடியாது என்றும், சந்தை விலைக்கே தரமுடியும் என்றும் ரஷ்யா கூறியுள்ளதை மூடி மறைக்கிறார்கள்.இது ஒருபுறமிருக்க, ஏற்கெ னவே ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டிருந்தால் உள்நாட்டு சந்தையில் அது ஏன் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது

அதற்கான பதில் ரஷ்யாவிடமிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யால் கொழுத்த லாபம் அடைந்தது இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளியான அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரிபைனரிஸ் நிறுவனமேயன்றி இந்திய மக்கள் அல்ல.

 இப்போதும் கூட ரிலை யன்ஸ் நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை பெற்று அதை சுத்திகரித்து இந்திய பயன்பாட்டுக்கு அல்ல, எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் அந்நிய செலாவணியை அள்ளிக் குவிக்கிறது.

எண்ணெய் கொள்ளைக்காக வெனிசுலா தலைவர் மதுரோவையும், அவரது இணைய ரையும் அமெரிக்கா வல்லாதிக்கம் அடாவடி யாக கைது செய்த பின்னணியில் வெனிசுலா ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவிருப்ப தாக தகவல்கள் வெளியாகின.

வெனிசுலாவிலி ருந்து நேரடியாக ரிலையன்ஸ் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா அனு மதி வழங்கியது. இதன்மூலம் ரிலையன்சின் ஜாம் நகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பெரும் லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரூ.27 லட்சம் கோடி முத லீட்டில் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமெரிக்காவில் நிறுவப்பட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி யுள்ளார்.

 இதன்மூலம் டெக்சாஸ் மாகாணத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அமெ ரிக்காவின் எரிசக்தி பாதுகாப்புக்கு அம்பானி யின் முதலீடு உதவும் என்றும் வெள்ளை மாளிகை கருப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை அம்பானி கொண்டு போய் அமெ ரிக்காவில் கொட்டுகிறார். ‘மேக் இன் இந்தியா’ என்பதெல்லாம் பிரதமரின் உதடுகளில் மட்டுமே வழியும் வார்த்தை.

 அவருடைய கார்ப்பரேட் முதலாளிகள் உலகளவில் சேவை செய்யவே  பிரதமரின் ராஜதந்திரம் உதவுகிறது. போர்ச் சூழலின் பாதிப்பு எல்லாம் எளிய மக்களுக்கு மட்டுமே. கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனத்திற்கு அல்ல.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை