ரெட்டை. தலை பாஐக?

உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.2 மானியம், பாதிப்பை சந்திக்கும் தொழில் துறையினருக்கும் சலுகைகள் அறிவித்தது தமிழ்நாடு அரசு. வணிக LPG எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணமான ஒன்றிய அரசுக்கு கண்டனம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம். கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு. டெல்லியில் மூன்றாவது முறையாக இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்.அமெரிக்கா, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் வரை போரை நீட்டிக்க தயார் என அதிரடிதூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் அதிகாரப்பூர்வமாக “Thoothukudi Airport” என்று மாற்றப்பட்டது.




"வந்தே மாதரம்"

பாஜகவின் இரட்டை நிலைப்பாடு!

மத்தியில் ஆளும் கட்சி, 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நாகாலாந்து மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பினால், வந்தே மாதரம் குறித்த அந்த மாநிலத்தின் கருத்துக்கள் பற்றி மௌனம் காக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.


பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் விரக்தியில் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் பொன்னானதொரு வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறார்கள். 

பள்ளிகள், கல்லூரிகளில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படுவதை காங்கிரஸோ அல்லது வேறு ஏதேனும் ஒரு எதிர்க்கட்சியோ எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்.

தாங்கள் கிறிஸ்தவர்கள் என்றும், அதனால் துர்க்கை, சரஸ்வதி மற்றும் லட்சுமி போன்ற இந்து தெய்வங்களாக உருவகப்படுத்தப்படும் ‘தாய் நாட்டை’ ஏற்க முடியாது என்றும் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூறுவதாக நினைத்துப் பாருங்கள்.

பட்டமளிப்பு விழாவின்போது வந்தே மாதரம் இசைக்கப்பட்டபோது மாணவர்கள் இருக்கைகளை விட்டு எழ மறுத்ததை எண்ணிப் பாருங்கள்.

இவை கற்பனையான சூழ்நிலைகள் அல்ல. கடந்த வாரம் நாகாலாந்தில் இவை உண்மையிலேயே நடந்தன.


பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய தேசியப் பாடலுக்கு இழைக்கப்பட்ட இத்தகைய ‘அவமானத்தை’ பாஜக தலைவர் ஒருவர் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், அது நரக வேதனைக்கு ஒப்பானது.


அதுவும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு இது நடப்பது இன்னும் கொடுமை. வேறு ஒரு சூழலாக இருந்திருந்தால், அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியை தேசவிரோதிகள், அர்பன் நக்சல்கள், ‘முஸ்லிம் லீக்’ என்று பாஜக தலைவர்கள் முத்திரை குத்தியிருப்பார்கள்; அரசாங்கத்தைக் கலைக்கக்கூடக் கோரிக்கை விடுத்திருப்பார்கள்.


ஆனால், இந்த நிகழ்வில் பாஜக தலைவர்கள் வாய் மூடி மௌனமாக இருக்கிறார்கள்; இதைக் கவனிக்காததுபோல் கடந்து செல்கிறார்கள்.

ஏனென்றால், நாகாலாந்தில் இருப்பது காங்கிரஸ் அரசாங்கம் அல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம். நாகாலாந்தின் துணை முதல்வர் ஒய். பாட்டன் பாஜகவைச் சேர்ந்தவர்.

வந்தே மாதரம் பாடுவதை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட ஆளும் கட்சி, பாஜகவின் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணி (NPF). சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேசியப் பாடலுக்கு எதிராகப் பேசிய எம்.எல்.ஏ.க்களும் நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்களே.

மத்தியில் ஆளும் கட்சி, 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நாகாலாந்து மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பினால், வந்தே மாதரம் குறித்த நாகாலாந்தின் கருத்துக்கள் பற்றி மௌனம் காக்க வேண்டிய நிலை உள்ளது.


கடந்த அக்டோபரில், ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி, நாகா மக்கள் முன்னணியுடன் இணைந்தது. மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில் நான்கை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இழந்த பின்னணியில் இது நடந்தது.

மணிப்பூர் இனக்கலவரத்தில் கிறிஸ்தவ குக்கி இன மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மணிப்பூர் வெளித் தொகுதியையும் (Outer Manipur), நாகாலாந்தின் ஒரே ஒரு தொகுதியையும் கைப்பற்றியது.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அந்தத் தேர்தல் முடிவுகளுக்கு “ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களே” காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – நாகா மக்கள் முன்னணி இணைப்பு என்பது, அடுத்த தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடன் உறவை முறிக்க வேண்டியிருந்தால், தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கான பிராந்தியக் கட்சிகளின் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.


எனவே, வந்தே மாதரம் விவகாரத்தில் நாகாலாந்து கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி குறித்து பாஜக அஞ்சுகிறது.

2013இல் 60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டமன்றத்தில் ஒரே ஒரு இடத்தில் வென்ற பாஜக, அடுத்த இரண்டு தேர்தல்களில் தலா 12 இடங்களை வென்றுள்ளது.


88 சதவீதம் கிறிஸ்தவ மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தில், பணமும் அதிகாரமும் தேர்தலைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கும் நிலையில், பாஜகவுக்குக் கூட்டணிக் கட்சிகள் தேவைப்படுகின்றன.


மேற்கு வங்கத் தேர்தலில் ‘வந்தே மாதரம்’ அவர்களின் முழக்கமாக இருக்கும். ஆனால் நாகாலாந்தில் இருக்காது.

பாஜகவின் அரசியலைக் குறிக்கும் பல முரண்பாடுகளில் இது மிக அண்மைக்கால உதாரணம் மட்டுமே. வடகிழக்கு மாநிலங்களிலும் கேரளத்திலும் கிறிஸ்தவ வாக்காளர்களைக் கவர முயலும் அதே வேளையில், மத மாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி கிறிஸ்தவர்கள் தாக்கப்படும்போது அது அமைதி காக்கிறது.

தில்லியில் மீன் விற்பனையாளர்களை மிரட்டவும், பிகாரில் இறைச்சி, மீன் விற்பனை “வன்முறைப் போக்கை” ஊக்குவிப்பதாகக் கூறிக் கல்வி நிலையங்களுக்கு அருகில் அவற்றின் விற்பனைக்குத் தடை விதிக்கவும் பாஜகவால் முடியும்.

ஆனால் கொல்கத்தாவில், மீனைப் பற்றியும் இறைச்சியைப் பற்றியும் பேச முடியாது. 

பிரதமர் மோடி ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ (அனைவருடன் இணைந்து, அனைவரின் நம்பிக்கை) என்று முழங்கலாம், ஆனால் தனது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமைக்கூடச் சேர்க்க மாட்டார்.


அவர் ‘இலவசக் கலாச்சாரம்’ நாட்டிற்கு ஆபத்தானது என்று கண்டிக்கலாம், ஆனால் அவரது கட்சியையே அதைப் பயன்படுத்த அனுமதிக்கலாம்.


குடும்பக் கட்சிகளை இந்திய ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் என்று அவர் சாடலாம், ஆனால் அதே கட்சிகளைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அரவணைக்கலாம்.


பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த், ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். நாடாளுமன்ற மாநிலங்களவைக்குச் செல்லும் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, அவரது வாரிசுத் திட்டத்தை வகுப்பதில் பாஜக ஒரு கருவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.


மகாராஷ்டிராவில், துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி சுனேத்ரா அரசாங்கத்தில் அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.

அவரது மகன் பார்த்த் இப்போது மாநிலங்களவையில் நுழையத் தயாராக இருக்கிறார்.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற குடும்பக் கட்சிகளைப் பாருங்கள்: சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ஜெயந்த் சௌத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம், அனுபிரியா படேலின் அப்னா தளம், எச்.டி. தேவே கவுடாவின் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற), சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (அவர் மத்தியில் அமைச்சராக உள்ளார், அவரது மகன் பிகாரில் அமைச்சராக உள்ளார்), உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (அவரது மனைவி எம்.எல்.ஏ, மகன் பீகாரில் அமைச்சர்), கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி. இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.


பாஜகவின் முரண்பாடுகளின் பின்னணியில் சங்மாவைப் பற்றிச் சொல்வதானால், 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேகாலயாவில் உள்ள சங்மா அரசாங்கம் நாட்டின் ஊழல் மிகுந்த அரசாங்கம் என்று பிரதமர் மோடியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறியிருந்தனர்.


மேகாலயாவில் நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டியும் (NPP) பாஜகவும் தனித்துப் போட்டியிட முடிவெடுக்கும்வரை அந்த அரசாங்கத்தில் பாஜகவின் அமைச்சர் ஒருவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் முடிந்ததும், பாஜக மீண்டும் சங்மா அரசாங்கத்தில் இணைந்து மீண்டும் ஒரு அமைச்சரைப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் பாஜக இந்த முரண்பாடுகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது. கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களிலும் பல சட்டமன்றத் தேர்தல்களிலும் அதன் வெற்றிகளே அதற்குச் சான்று.

இது பிரதமர் மோடியின் ஈர்ப்பினாலும் இருக்கலாம். பாஜக இலக்குகளை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டே இருப்பதால், அதன் அரசியல் எதிரிகள் திகைத்துப்போய் நிற்கிறார்கள்.

தேசியப் பாடலான வந்தே மாதரம் குறித்த அக்கட்சியின் நிலைப்பாடு, அரசியல் ரீதியாக ஒரு பெரிய முரண்பாடு.


குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை வெளிப்படையாக மதிக்கும் ஒரு கட்சி, வங்காளத்தின் இந்த இரு அடையாளங்களும் அங்கீகரித்த தேசியப் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பைக் கண்டிப்பது எப்படி?

2047க்குள் வளர்ந்த இந்தியா பற்றிப் பேசும் ஒரு கட்சி, ஒரு தேர்தலுக்காக, நீண்ட காலத்தில் நாட்டிற்கு மிகவும் ஆபத்தான ஒன்றை எப்படிச் செய்ய முடியும்?


மத்திய உள்துறை அமைச்சகத்தின் வந்தே மாதரம் தொடர்பான உத்தரவைக் கவனமாகப் படியுங்கள். நான் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்:

“அனைத்துப் பள்ளிகளிலும், ஒவ்வொரு நாளையும் தேசியப் பாடலை இணைந்து பாடுவதன் மூலம் தொடங்கலாம்,” என்று அதில் கூறப்பட்டுள்ளதுடன், அதைப் பிரபலப்படுத்துவதற்குப் பள்ளி நிர்வாகங்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


நாகாலாந்தில், பட்டமளிப்பு விழாவின்போது வந்தே மாதரம் பாடப்பட்டபோது மாணவர்கள் அமர்ந்திருந்தனர். ஆளும் கட்சியும் வந்தே மாதரம் பாடுவதைப் பகிரங்கமாக எதிர்த்தது. நாகாலாந்தில் பாஜகவுக்கு அவர்கள் தேவைப்படுவதால் அவர்களால் இதைச் செய்ய முடிந்தது.


கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் அரசு ஊழியர்கள் ஒரு அதிகாரப்பூர்வ விழாவில் எழுந்து நின்று அதைப் பாடவில்லை என்றாலோ, அல்லது பிகார், உத்தரப் பிரதேசம் அல்லது மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்கள் நாகாலாந்து மாணவர்கள் செய்ததைச் செய்தால் பாஜகவின் எதிர்வினை வேறாக இருக்கும்.


ஒரு மாநிலத்தின் அல்லது மாவட்டத்தின் நிர்வாகம் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அரசியல் ரீதியான ஆயுதமாக்க முடிவு செய்தால், வகுப்புவாத பதற்றங்கள் அன்றாட நிகழ்வாகிவிடும். அங்கேயே ‘விக்சித் பாரத் 2047’ முழக்கமும் கனவும் முடிவுக்கு வந்துவிடும். கடந்த வாரம் நாகாலாந்தில் நடந்த நிகழ்வுகளிலிருந்து பாஜகவும் மத்தியில் உள்ள கூட்டணி அரசாங்கமும் பெற வேண்டிய பெரிய செய்தி இதுதான்.


அது இருக்கட்டும். எத்தனை பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களால் திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வமான தேசியப் பாடலை முழுமையாக ஒப்பிக்க முடியும்? பிரதமர் மோடியும் அமித் ஷாவும் மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து அதைப் முழுமையாகப் பாடும் ஒரு விழாவிற்காகக் காத்திருப்போம்.


பின்குறிப்பு: 2015இல், புது தில்லியில் நடந்த ஒரு பிரமாண்டமான விழாவில், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சிலுடன் (Isak-Muivah) இந்திய அரசு ஒரு ‘கட்டமைப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது.


இறுதி உடன்பாடு எட்டப்படாமல் 11 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கட்டமைப்பு காலியாகவே உள்ளது.


இதற்கிடையில், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாகா அமைதிப் பேச்சுவார்த்தையாளர் ஆர்.என். ரவி, இப்போது மேற்கு வங்க ஆளுநராகியுள்ளார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணக்கமாகச் செயல்படும் வழக்கம் அவருக்கு இல்லை என்பதை சென்னை ராஜ் பவனில் அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.


இன்னும் சில மாதங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் வங்காளத்திற்கு அவர் ஏன் கொண்டுவரப்பட்டுள்ளார் என்பது விவாதத்திற்குரிய கேள்வி.

பெருமை தரும் பேச்சில்லை!

திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை, அவர் வகிக்கும் பதவிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. 

அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியான உரையை அவர் ஆற்றவில்லை. பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளர் பேசுவதைப் போல வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளித் தெளித்து பிரதமர் ஆற்றிய உரை கடும் கண்டனத்துக்குரியது.

அ.தி.மு.க.வைக் காவு வாங்கி தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்ற போர்வையில் பா.ஜ.க.வை கொள்ளைப்புறம் வழியாகக் கொண்டு வர நினைக்கிறார் பிரதமர் மோடி அவருக்கு எப்போதும் நேரிய வழி தெரியாது. 

குறுக்கு வழியில் மாநில ஆட்சிகளைப் பிடிப்பதுதான் அவர்களது குணம். அதற்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமியின் கோழைத்தனத்தை முதலீடாக வைத்து வயிறு வளர்க்கப் பார்க்கிறது பா.ஜ.க. இந்த அரசியல் கயமையை மறைக்க தி.மு.க. ஆட்சி மீதான அவதூறுகளை அள்ளி வீசுகிறார் பிரதமர்.

நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமராக வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. மூன்றாவது முறையாக பிரதமர் ஆகி இருக்கிறார். 

கடந்த 12 ஆண்டுகளில் இந்திய நாட்டுக்குச் செய்த நன்மைகளை தனது பேச்சில் சொன்னாரா என்றால் இல்லை. 

தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த திட்டங்களை வரிசைப்படுத்திச் சொன்னாரா என்றால் இல்லை. மாறாக தி.மு.க. அரசு குறித்த பொய்களையே தனது உரையில் அதிகமாகச் சேர்த்து வைத்து வாசித்திருக்கிறார் பிரதமர். இவை அனைத்தும் உண்மைகள் அல்ல, அப்பட்டமான அவதூறுகள்.

ஒரு வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்ற வில்லையாம். பிரதமர் கண்டுபிடித்து இருக்கிறார். தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை தெருவில் இறங்கிக் கேட்கவும். மக்கள் சொல்வார்கள்.

'தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை' என்பதை வலியுறுத்த படாத பாடு படுகிறார் பிரதமர். எந்த அடிப்படையில் இதனைச் சொல்கிறார்? அதற்கு என்ன ஆதாரம்? 

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகம் ஆகி இருக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்துள்ளாரா? பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்துள்ளாரா? ஏதுமில்லை.

“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!

‘தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பெண்களை அச்சமின்றி வாழ வைப்போம்' என்கிறார் பிரதமர். இதை மணிப்பூரில் போய் சொல்லத் தயாரா? 

இதை உ.பி.யில் போய் அவரால் சொல்ல முடியுமா? அந்த மாநிலப் பெண்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் படும் அவஸ்தைகளை!

ஒரு குடும்பத்துக்கான ஏ.டி.எம். மிஷினாக தமிழ்நாடு இருக்கிறதாம். இப்படித்தான் பொறுப்பற்ற வகையில் பிரதமர் பேசுவதா?

 ஒரே ஒரு குடும்பத்துக்கான ஏ.டி.எம். மிஷினாக இந்தியாவை மாற்றியதுதானே பிரதமர் மோடியின் சாதனை?

 ‘எங்கெல்லாம் மோடி செல்கிறாரோ அந்தந்த நாட்டுக்கு எல்லாம் அடுத்து அதானி செல்வார், தொழில் தொடங்குவார்' என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் சொன்னாரே?

 இதுவரை பதில் சொன்னாரா பிரதமர்?

 இதை இன்னும் பகிரங்கமாக டெல்லி சட்டமன்றத்தில் அரவிந்த கெஜ்ரிவால் பேசிய பிறகுதானே அவருக்கு இடைஞ்சல் ஏற்பட்டது? கைது செய்து சிறையில் அடைக்கப்படும் சூழல் வந்தது? ஊழலைப் பற்றி யார் பேசுவது?

ஒரு குறைந்தபட்ச புள்ளிவிபரங்களை சரி பார்த்திருந்தால் கூட பிரதமர் பேச்சு இவ்வளவு அபத்தமாக இருந்திருக்காது.

 'விவசாயிகளுக்கு தானிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்ற-வில்லை' என்று பேசி இருக்கிறார் பிரதமர். அதிகமான சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கியதாக தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கி இருப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசு தான்.

டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. 

100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.350 கோடியில் மேல் கூரையுடன் நெல் சேமிப்புத் தளங்கள் உருவாக்-கப்பட்டுள்ளன.

2011-2021 ஆகிய பத்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த சேமிப்புக் கிடங்குகளின் கொள்ளளவு 7 இலட்சத்து 27 ஆயிரத்து 650 மெட்ரிக் டன். 

ஆனால் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் மற்றும் கட்டப்படவுள்ள கிடங்குகளின் கொள்ளளவையும் சேர்த்தால் 7 இலட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் ஆகும். இந்தப் புள்ளிவிபரத்தைக் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் அவதூறுப் பேச்சு பேசுகி-றார் பிரதமர்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான புல்லட் ரயில் வைத்துள்ளாராம். மோடி சொல்கிறார். மதுரைக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தரவில்லை. திருச்சிக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். 

தரவில்லை. கோவைக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தரவில்லை. சென்னைக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் முழுமையான நிதியைத் தரவில்லை. இந்த லட்சணத்தில் புல்லட் ரயில் விடப் போவதாகப் புளுகுகிறார் மோடி.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியவில்லை. வானம் ஏறி வைகுண்டம் காட்டுவாராம். அப்படித்தான் இருக்கிறது பிரதமர் மோடியின் 'கப்சா' உரைகள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை