ஈரான்-அமெரிக்கா கள( நில)வரம்

தென் மாவட்டங்களில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல். போடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த ஓ.பன்னீர்செல்வமும் இன்றைய நேர்காணலில் பங்கேற்பு.தி.மு.க - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை. இன்றே உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு.ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜினாமா. ஈரானால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் போரை ஆதரிக்க முடியாது என ஜோசப் கென்ட் கருத்து.இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் லெபனானில் இதுவரை 111 குழந்தைகள் உட்பட 912 பேர் உயிரிழப்பு. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் போர்க்குற்றம் என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கண்டனம்.தனக்கு நடிகை நயன்தாரா வேண்டும் என்று சி.வி.சண்முகம் அநாகரீக பேச்சு. பெண்களுக்கு பாதுகாப்பு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சை கருத்து.சி.வி.சண்முகத்தை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் சர்ச்சை பேச்சு. திமுக சார்பில் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி ஆபாசமாக பேசியதால் அதிர்ச்சி.நடிகர் விஜய் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தன்னைப் பற்றி உண்மைக்கு மாறான கருத்தை கூறியதாக ரஜினிகாந்த் கண்டனம். காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்றும் எச்சரிக்கை.கோவை ஆர்ப்பாட்டத்தில் பெண்களை கடிந்து கொண்ட அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன். அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனும் பெண்கள் பற்றி அநாகரீகமாக பேசியதால் சர்ச்சை.கடலூர் ஆர்ப்பாட்டத்தில் என்டிஏ தலைமையில் ஆட்சி அமைப்போம் என முழக்கமிட்டதால் பரபரப்பு. அன்புமணி தரப்பு பாமகவினரின் செயலால் அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் அதிர்ச்சி.தமிழ்நாட்டிற்கு 327 தேர்தல் பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம். தேர்தலை எந்த புகாரும் இன்றி நடத்தி முடிக்க நடவடிக்கை.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழை. சிவகாசி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.மேற்குவங்கத்தின் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி மீண்டும் போட்டி. 291 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் பட்டியல் சமூகத்தினர் 78 பேருக்கு வாய்ப்பு.




ஈரான்-அமெரிக்கா கள( நில)வரம்

ஈரான் விவகாரத்தில் ஒரு பரந்த போருக்குள் ஈடுபட தங்கள் விரும்பவில்லை என்று பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியதை அடுத்து, அதிருப்பதியடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய இராச்சியத்தின் நிலைபாடு தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 16) ஈரானின் தென்கிழக்கு பகுதியான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சாபஹார் தடையற்ற வர்த்தக மண்டலத்திற்கு அருகிலுள்ள இராணுவ வசதிகள் மீது, அமெரிக்க ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் பாரசீக மொழிச் சேவையை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த மண்டலத்திற்குப் பின்னால் உள்ள பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.இராணுவ நடவடிக்கை விரிவடைந்து வருவதால், ஈரானில் இன்னும் ஆயிரக்கணக்கான இலக்குகள் தாக்கப்பட வேண்டி உள்ளது என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை விரும்புவதாக ட்ரம்ப் கூறியதை நிராகரித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சிபிஎஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஈரான் அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரவில்லை என்றும், தாக்குதல்களுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்த எந்த காரணமும் இல்லை என்றும் கூறியுள்ளார். 

சமீபத்திய தகவல்கள்:

அமெரிக்கா தனது தூதரகப் பணியை முன்னெடுக்கும் ஈராக்கின் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டன.

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வளைகுடா நாடுகள் இடைமறித்தல்: பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்ததாகத் தெரிவித்துள்ளன.

லெபனானில் உயிரிழப்புகள் அதிகரிப்பு: இஸ்ரேல் தெற்கு லெபனானில் புதிய தாக்குதல்களைத் தொடுத்து, எல்லையை நோக்கி டாங்கிகள் மற்றும் துருப்புக்களை நகர்த்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக லெபனானில் இதுவரை சுமார் 850 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பற்றாக்குறையும் பாரபட்சமும்

வளர்ச்சி என்பது சீராக அமைந்தால் தான் ஆரோக்கியமானதாகும். இல்லையெனில் அது நோயாகிவிடும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பேச்சளவிலும் பெயரளவிலும் தான். 

இந்தியாவில் தயாரிப்போம் என்பது மாறி இப் போது அமெரிக்காவில் தயாரிப்போம் என்ற நிலைக்கு அம்பானியின் ரிலையன்ஸ் ரீபைன ரீஸ் முன்னேறியிருப்பதுதான் மோடி அரசின் சாதனை. 

எரிபொருள் உற்பத்தியில் அமெரிக்கா  முன்னேற முகேஷ் அம்பானி மூலதனம் போட்டு  தொழில் தொடங்குவதை டொனால்டு டிரம்ப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அம்பானி வளர்ந்தால் இந்தியா வளர்ந்ததாகத் தானே அர்த்தம், ஆர்எஸ்எஸ் பரிவார அகராதியில்.

ஆனால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு மோசமாகிக் கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியப் போரினால் கச்சா எண்ணெய் வரத்து நின்று விட்டது காரணமாகக் கூறப்படுகிறது. 

இந்தியா வின் நீண்டகால நட்பு நாடான ஈரான், இஸ்ரேல், அமெரிக்காவால் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டிக்காமல் இருந்துவிட்டு, அரபு நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்கியதை கண்டித்தது அமெரிக்க, இஸ்ரேல் விசுவாசம் அன்றி வேறென்ன?

ஆனால் எரிவாயு ஏற்றி வந்த இந்தியக் கப்பலுக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதால் ஈரான் அனுமதி தந்துவிட்டது என்று இந்திய வெளியுறவு அதிகாரிகள் கூறினர்.

 உண்மையில், ஈரான் தூதரக அதிகாரி, ஈரான் மக்களுக்கு ஆதரவாக நிற்கும் இந்திய மக்கள் சமையல் எரி வாயு இல்லாமல் துன்பப்படுகின்றனர். அவர்களு க்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித் தோம். அதன் அடிப்படையில் இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழி யாக அனுமதிக்கப்படுகின்றன என்று குட்டை உடைத்தது குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்திய எரிசக்தி துறை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி, எரிவாயு தட்டுப்பாடு இல்லை. போதிய அளவு கையிருப்பு உள்ளது என்று கூறு கிறார். 

எதிர்க்கட்சிகள் தான் பிரச்சனையைப் பெரிதாக்குகின்றன என்கிறார் சுகாதாரத்துறை  அமைச்சர் ஜே.பி.நட்டா. நெருக்கடியான சம யங்களில் கூட அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் நெருக்கடியான நிலை என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். 

ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவா யுத்துறை அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, பற்றாக்குறை பீதியால் முன் பதிவு அதிகமாகி விட்டதால், பதிவு கால இடை வெளியை நகர்ப்புறங்களில் 25 நாட்கள் என்றும் கிராமப்புறங்களில் 45 நாட்கள் என்றும் நிர்ண யித்திருக்கிறோம் என்கிறார்.

 ஏன் பதிவு இடை வெளியில் பாரபட்சம்? எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் என்று சிலிண்டர் விலையை ரூ.60, ரூ.144 என உயர்த்தியது எந்த வகை நியாயம்? ஆனால் பற்றாக்குறையைச் சமாளிக்க கிராமப்புற மக்கள்தான் பலியாடு களா? அவர்கள் இரண்டாம் தரமா?

சென்ற ஆண்டு களவுக்கு

இந்த ஆண்டு. புகார்?

கேரளாவின் கவடியார் அரண்மனையில் கொள்ளை: நகைகள் அரண்மனைக்குள்ளேயே இருக்கும் என்று ராஜகுடும்பத்தினர் நினைத்ததாகக் கூறினர் - காவல்துறை 

இந்தத் திருட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மார்ச் 13-ம் தேதிதான் ராஜகுடும்பத்தினர் முறையாகக் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

 இதன்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) பிரிவு 305-ன் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தின் வசிப்பிடமான திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில், ரூ.2 கோடி மதிப்புள்ள பழங்கால நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தத் திருட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மார்ச் 13-ம் தேதிதான் ராஜகுடும்பத்தினர் முறையாகக் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

 இதன்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) பிரிவு 305-ன் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், “இன்று நாங்கள் அங்கு வசிப்பவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளோம். நிபுணர்கள் குற்ற நடந்த இடங்களிலிருந்து கைரேகைகளைச் சேகரித்துள்ளனர்...

 நாங்கள் விசாரணையை இப்போதுதான் தொடங்கியுள்ளோம்,” என்றார்.

ராஜகுடும்பத்தைச் சேர்ந்த அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் தனது புகாரில், அரண்மனையின் முதல் தளத்தில் உள்ள தனது படுக்கையறையில் உள்ள இரும்பு அலமாரியில் இருக்கும் ஒரு லாக்கரில் இந்த நகைகள் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

 திருடப்பட்ட பொருட்களில் பல தலைமுறைகளாக ராஜகுடும்பத்தின் வசம் இருந்த விலைமதிப்பற்ற உலோகங்கள், கற்கள் மற்றும் நாணயங்கள் போன்ற பழங்காலப் பொருட்கள் அடங்கும்.

ஆரம்பத்தில், முறையான புகார் அளிக்காமல் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று அரண்மனை தரப்பில் விரும்பப்பட்டது.

 ஆனால், கடந்த வாரம் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

புகார் அளிக்க இவ்வளவு தாமதமானது ஏன் என்பது குறித்து ஒரு காவல்துறை அதிகாரி கூறுகையில், “நகைகள் அரண்மனைக்குள்ளேயே எங்காவது தவறுதலாக வைக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் (குடும்பத்தினர்) நினைத்தனர்.

 இந்த மாளிகையில் ராஜகுடும்பத்தால் பணியமர்த்தப்பட்ட ஒரு தனியார் ஏஜென்சியின் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. அதோடு, வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது. ஊழியர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்வோம்,” என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை