விலை ஏன் குறைகிறது?
வேலை இல்லா வல்லரசு!
இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரும் பொருளாதாரம் என்று ஒரு புறம் பெரு மிதப்படுகிறோம்.
ஆனால் மறுபுறம் அந்தப் பெருமிதத்தின் கீழே, ஆழத்தில், ஒரு கசப்பான உண்மை நெளிவது கண்முன் தெரி கிறது.
இந்தக் கொடும் முரண்பாட்டை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ‘இந்தியப் பணிச் சூழல் அறிக்கை 2026’ அம்பலப் படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் 20 முதல் 29 வயதிற்குட்பட்ட 6 கோடியே 30 லட்சம் பட்டதாரிகளில், 1 கோடியே 10 லட்சம் பேர் முழுமையாக வேலை யில்லாமல் தவிக்கிறார்கள். இதில் மிகவும் கவலையளிக்கும் அம்சம் என்னவென்றால், பட்டம் முடித்த ஓராண்டுக்குள் நிரந்தரமான சம்ப ளம் வாங்கும் வேலையில் சேருபவர்கள் வெறும் 7 சதவிகிதம் பேர் மட்டுமே.
மீதமுள்ள 93 சதவிகி தம் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தற்காலிக வேலைகளிலும், தகு திக்குக் குறைவான பணிகளிலும், உணவு விநி யோகம் போன்ற நிச்சயமற்ற வாழ்வாதாரங்க ளிலும் தள்ளப்படுகிறார்கள்.
ஒரு பொறியியல் பட்டதாரி உணவு விநியோகம் செய்வது என்பது அந்தத் தனிநபரின் தோல்வி அல்ல; அது அந்த நாட்டின் அறிவுசார் மூலதனத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியாத அரசின் தோல்வி.
2004-05 முதல் 2023 வரையிலான காலத்தில், ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பட்டதாரிகள் உருவாகினர். ஆனால் வேலை கிடைத்தது வெறும் 28 லட்சம் பேருக்கு மட்டுமே. இதனால் பட்டதாரி வேலையின்மை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்தச் சூழலில், டிரம்ப் நிர்வாகத்துடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தம் பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்கா வின் விவசாய மற்றும் தொழிற்சாலைப் பொ ருட்களைப் “பூஜ்ஜிய வரி” முறையில் அனு மதிப்பது, இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்க ளை (எம்எஸ்எம்இ) நிலைகுலையச் செய்யும்.
இந்தியாவின் 80 சதவிகித வேலைவாய்ப்புக ளைத் தாங்கிப் பிடிக்கும் இந்த உள்நாட்டுத் தொழில்கள் நலிவடைந்தால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் தீவிரமடையும்
இந்தியாவின் இளமைச் சக்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் வாய்ப்பு. 2030-களுக்குப் பிறகு இந்தியாவின் மக்கள் தொகை முதியோரை நோக்கி நகரத் தொடங்கும். அதற்குள் இந்த 93 சதவிகித இளை ஞர்களை முறையான வருமானம் ஈட்டும் சக்தியாக மாற்றவில்லை என்றால், இந்தியா பணக்கார நாடாவதற்கு முன்பே, ஏழை முதிய வர்களின் நாடாகிவிடும்.
இளைஞர்களின் கைகளில் வேலை இல்லாத நாடு, கையில் வெடிமருந்தை வைத்துக்கொண்டு நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இந்தியாவின் எதிர் காலம் அமெரிக்க உடன்பாடுகளில் இல்லை.
இளைஞர்களின் வேலை வாய்ப்பில்தான் இருக்கிறது.
விலை ஏன் குறைகிறது?
உக்ரைன் போர் எதிரொலி: தங்கம் விலை உயர்வு; காசா - இஸ்ரேல் மோதலால் தங்கம் விலை ஏற்றம்!
- இப்படியாக போருக்கும் தங்கம் விலை உயர்வுக்கும் நேரடி தொடர்புடைய தலைப்புச் செய்திகளைத்தான் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அப்படித்தான் பிப்ரவரி 28-ம் தேதியன்று ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திய மறுநாள் மார்ச் 1, தங்கம் விலை எகிறியது. இனி தங்கம் விலை விர்ரென்று ஏறப்போகிறது என்று அஞ்சப்பட்ட நிலையில், சிறிய ஊசலாட்டத்துக்குப் பின்னர் இப்போது நிதானமாக இறங்கு முகம் கண்டு வருகிறது.
தங்கம் விலை மீது மேற்கு ஆசிய போர் பதற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்னவென்பது குறித்து சற்று தெளிவாகப் பார்ப்போம்.
சென்னையில் மார்ச் 17, செவ்வாய்க்கிழமை தங்கம் 10 கிராம் ரூ.1,59,820-க்கு விற்பனையாகிறது. சமீப கால மிரட்டும் உச்சங்களில் இருந்து தங்கம் இந்த இறங்குமுகத்தைக் கண்டுள்ளது. கடந்த 5 வர்த்தக தினங்களில் மட்டும் ரூ.4,000 அளவுக்கு குறைந்துள்ளது.
இந்த இறங்குமுகம் வழக்கத்துக்கு மாறானது. புவி அரசியலில் மோதல்கள் ஏற்படும்போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவிப்பர். ஆனால், இந்த முறை தங்கம் விலை அவ்வாற்று நாடப்பட்டு விலையுயர்வு காணவில்லை.
இந்த நிலைமாற்றம் மிக முக்கியக் கேள்வியை நம்முள் எழுப்பலாம். இத்தகைய நெருக்கடிக்கு மத்தியிலும் தங்கம் விலை குறைவது ஏன் என்ற அந்தக் கேள்விக்கு விடை தேடுவோம்.
தங்கம் தகிக்காதது ஏன்?
மேற்கு ஆசிய மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியும் சேதமடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் எண்ணெய் மற்றும் எல்பிஜி, எல்என்ஜி கப்பல் போக்குவரத்து பாதிப்பு எண்ணெய், எரிவாயு விநியோகச் சங்கிலியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என்பது, உலக நாடுகளில் பணவீக்கத்தை எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் உயர்ந்தே இருக்கச் செய்யும் என்ற அச்சத்தைக் கடத்தியுள்ளது. அந்த வகையில் பணவீக்க அச்சம்தான் தங்கம் விலை சரிவுக்கு முதன்மைக் காரணம் என்று கணிக்கப்படுகிறது.
பணவீக்கம் அதிகமாக இருந்தால், மத்திய வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்காது. மேலும், விலைவாசி ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கவே முற்படும். உலகச் சந்தைகள் இப்போதைக்கு இதை நோக்கியே செல்லக் கூடும். குறிப்பாக, அமெரிக்காவின் மத்திய வங்கியின் நிதிக் கொள்கை என்னவாக இருக்குமென்பதில் நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது. இது தங்கத்தின் மீது நேரடியான தாக்கத்தைக் கடத்துகிறது.
தங்கத்தின் மீதான முதலீடு என்பது நேரடியாக நிலையான வருமானத்தைத் தருவது அல்ல. பாண்ட்கள், டெபாசிட்டுகள் போல் இவை ரிட்டர்ன்கள் தருவதில்லை. அப்படி இருக்கையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிப்பதால் நாட்டின் வங்கிகள் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்களுக்கு நிலையான வருமானம் தரக்கூடிய சொத்துகள் பக்கம் தங்களின் கவனத்தை திருப்புவர். அத்தகைய நேரங்களில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறையும். இதனால் தங்கம் விலை குறையும் எனக் கூறப்படுகிறது.
ப்ராஃபிட் புக்கிங் மீது கவனம்..
இதுதவிர இன்னொரு காரணமும் கூறப்படும். தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே பல்வேறு புதிய உச்சங்களைத் தொட்டுவிட்ட நிலையில், இத்தகைய உச்சத்துக்குப் பின்னர் முதலீட்டாளர்கள் ப்ராஃபிட் புக்கிங் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்கத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் முதலீட்டு கவனத்தைத் திருப்பத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை சமீப நாட்களாக குறைந்து வருகிறது.
இவ்வாறாக, உலகாளவிய சந்தைகள் புவிசார் அரசியல் பதற்றங்களைக் காட்டிலும் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாலேயே தங்கம் விலை குறைகிறது என்றளவில் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.
டாலர் செலுத்தும் தாக்கம்...
பணவீக்கப் பிரச்சினையையும் தாண்டி, மத்திய வங்கிகளின் வட்டி விகித அச்சுறுத்தல்களையும் விட அமெரிக்க டாலர் மதிப்பு நிலவரமும் தங்கம் விலையை நிர்ணயிக்கிறது.
இதுபோன்ற சர்வதேச அளவிலான பொருளாதார நிச்சயமற்ற சூழல்களில், தங்கமும், டாலரும் தான் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால், இப்போதைய சூழலில் டாலர் அதிக புழகத்தை ஈர்க்கிறது. டாலரின் மதிப்பு வலுவாக இருக்கும்போது, தங்கத்தை மற்ற நாணயங்களைக் கொண்டு வாங்குவது என்பது கைக்கு எட்டாத விலையாகிவிடுகிறது.
இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையை குறைக்கிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை குறையும்போது அதுவும் தங்கம் விலை மீது கூடுதல் அழுத்தத்தை செலுத்துகிறது. ஆக, டாலர் மதிப்பின் எழுச்சியும் தங்கம் விலை சரிவுக்கு மற்றொரு காரணம்.
இப்போது தங்கம் வாங்கலாமா?
தங்கம் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் எழும் இன்னொரு கேள்வி... ‘தங்கத்தை இப்போது வாங்கலாமா?’ என்பதுதான்.
தங்கம் இன்றும்கூட பாதுகாப்பான முதலீடு என்ற முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. தற்போதைக்கு சர்வதேச நிகழ்வுகளுக்கு தங்கம் காட்டும் எதிர்வினைகள் மட்டும்தான் மாறியுள்ளது. அதனால், தங்கம் மீதான முதலீடு இப்பவும் பாதுகாப்பானதே.
வட்டி விகிதங்கள், பணவீக்கம் மீதான எதிர்பார்ப்புகள், நாணய வர்த்தகப் போக்கு ஆகியன புவி அரசியல் பாதிப்புகளையும் கடந்து மிகப் பெரிய பங்காற்றி வருகின்றன.
அதனால்தான் மேற்கு ஆசியாவின் இந்த உச்சபட்ச கொந்தளிப்புக்கு இடையேயும் தங்கம் விலை தகிக்கவில்லை.
எனவே, இப்போதைக்கு இந்த புவி அரசியல் பதற்றத்தையும் தாண்டி உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் பிடியில்தான் தங்கம் விலை சிக்கியுள்ளது. வட்டி விகிதங்களில் தெளிவான ஒரு போக்கு ஏற்படும் வரை தங்கம் விலை இத்தகைய குறுகிய வரம்பில் தொடர்ந்து நகரக்கூடும் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடைசி அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்த முறைகேடுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதற்கான முகாந்திரம் இருப்பதால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன் உள்ளிட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது சாலைப் பணிகள், எல்.இ.டி விளக்குகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும், மற்ற அமைச்சர்கள் தங்கள் வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர் (FIR) விவரங்கள் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட குற்றத்திற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற அமைப்புகள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டாலே, அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது மனுதாரரின் வாதமாக உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி, இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதால், அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறைக்கு முறையான புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் அமலாக்கத்துறையின் தலையீடு அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்த மனு, விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குவரும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் குறித்த அதிமுக நிர்வாகிகளின் அநாகரிக பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம். சாதனைகள், கொள்கைகள் இல்லாதவர்கள் ஆபாசங்களை அள்ளி இறைப்பதாக காட்டமான விமர்சனம்.
தேர்தல் பறக்கும் படை சோதனையில் 3 நாட்களில் 43 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல். பூந்தமல்லி அருகே பைக்கில் துணி சுற்றிக் கொண்டு செல்லப்பட்ட 27 லட்ச ரூபாயும் சிக்கியது.
திமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய 2-வது நாளாக நேர்காணல் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். போடி தொகுதிக்கு விருப்ப மனு அளித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்*புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டிலும் தாமதம். வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பே இரு கட்சியினரும் மனு தாக்கல்.
*தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் அலுவல் கடிதம் அனுப்பிய சபாநாயகர். மொழி உணர்வை புண்படுத்தும் செயல் என துரை வைகோ கண்டனம்.
*கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கு. மே 11-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்.
*பெண்களை இழிவாகப் பேசிய சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு கண்டனம். திண்டுக்கல்லில் திமுக மகளிர் அணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்.
*ஓசூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை. வத்தலகுண்டு அருகே 300-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை.
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம். நான்கு ஆண்டுகளில் 29 சதவீதம் உயர்ந்து பிரம்மாண்ட வளர்ச்சி.
கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை வீடு வீடாக கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தல்.
மேற்கு வங்கத்தில் உயரதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்யும் தேர்தல் ஆணையம். நேற்று 13 மாவட்ட ஆட்சியர்கள், 5 டிஐஜிக்கள் பணியிடமாற்றம்.
இந்தூரில் மின்சாரக் காரின் சார்ஜிங் கருவி வெடித்து விபத்து. இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழப்பு. கொல்லப்பட்டதற்கான விலையை இஸ்ரேல் கொடுத்தே ஆக வேண்டும். ஈரான் உச்சபட்சத் தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரிக்கை.
ட்ரம்ப், நெதன்யாகுவிற்கு எதிராக தெஹ்ரானில் ஈரான் மக்கள் போராட்டம். இருவரின் உருவங்களுக்கு தீ வைத்து எரித்து கண்டன முழக்கம்.






