அழிவின் பிடியில்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம். 3 ஆயிரத்து 412 மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
அடுத்த முறையும் திமுக வரவேண்டும் என்பது ஆசை அல்ல, தேவை"முதலமைச்சரின் 73வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சுபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி. வெயிலையும் பொருட்படுத்தாமல் திமுகவினர் நேரில் வந்து வாழ்த்தியதாக வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி.
இந்தியாவைக் காக்க திராவிடம் எனும் கவசம் தேவை என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து. திமுக கூட்டணி ஒரு, சித்தாந்தக் கூட்டணி என்றும் பேச்சு.
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு 40 நாட்களில் 9 லட்சத்து 64 ஆயிரம் லேப்டாப்கள் வழங்கல். உலகம் உங்கள் கையில் திட்டம் குறித்து எல்காட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.
ஈரான் மீதான தாக்குதல் 4 வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. இஸ்ரேலும், ஈரானும் மாறிமாறி வான் தாக்குதலை தொடர்வதால் மேற்கு ஆசியாவில் தொடரும் பதற்றம்.
விடுமுறைநாளானஞாயிற்றுக்கிழமையிலும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்வு?இரண்டு நாட்களில் ரூ.7000 அதிகரித்து ஒரு சவரன், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை.அழிவின் பிடியில் மத்தியக் கிழக்கு
ஈரான் நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் ஐநா சாசன விதிகளுக்குப் புறம்பாக, சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.
ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் அணுசக்தி பிரச்சனையில் ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் நிலவியபோதே, அதனை வேண்டுமென்றே குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கருத்துக்கள், அமெரிக்கா ஒருபோதும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அமெரிக்கா இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது தன் விருப்பப்படி போர் தொடுப்பதை வாடிக்கையாக்கி விட்டது.
அண்மையில் வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கியூபா மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களின் தொடர்ச்சி யாகவே இப்போது ஈரான் மீதான இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹார்மோஸ்கன் மாகாணத்தில் ஒரு தொடக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 108 மாணவிகள் உட்பட நூற்றுக் கணக்கான பிஞ்சு உயிர்கள் கொல்லப்பட்டது ஈடுசெய்ய முடியாத போர்க்குற்றமாகும்.
இது ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதான கொடூரத் தாக்குதல்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குச் சென்று தனது பயணத்தை முடித்துத் திரும்பிய சில தினங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்திருப்பது மிகுந்த கவலைக்குரியது.
நமது நீண்டகால நட்பு நாடான ஈரான் மீது நடத்தப்பட்ட இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பை மோடி அரசு வெறும் மௌனத்தாலோ அல்லது ஒப்புக்கு ஒரு அறிக்கையாலோ கடந்துவிடக் கூடாது.
இந்தத் தாக்குதல் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பிராந்திய அமைதிக்கும் விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலாகும்.
எனவே, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை யை இந்திய அரசு எவ்விதத் தயக்கமுமின்றி நிபந்தனையின்றி வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்.
ஈரானுடனான நமது வரலாற்று ரீதியான உறவை முன்னிறுத்தி, உடனடியாகப் போரை நிறுத்தி அமைதியைத் திரும்பச் செய்ய சர்வதேச அரங்கில் இந்தியா குரலெழுப்ப வேண்டும்.
ஆனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி இருக்கிறார்.
அவருக்கு அடிமையாக எடப்பாடி இருப்பதுபோல் மோடி அமெரிக்க அடிமையாக இருப்பது இந்தியாவுக்கு ஆபத்து.











