நாற்பது திருடர்களும்?

தேர்தல் களத்தை சந்திக்கவே டெல்லி சம்மதம் வேண்டும் என்ற நிலையில் அதிமுக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.ராமதாஸ்-சசிகலா கூட்டணி மூலம் 5-ஆவது அணி உருவானது. திமுக, அதிமுக, தவெக, நாதக உடன் 5 முனை போட்டி உறுதியானது.புதுச்சேரியில் புதிய கட்சியான ல.ஜ.க.வுக்கு இணையாக அதிமுகவிற்கு 2 தொகுதி ஒதுக்கீடு. புதுச்சேரி அதிமுக-வை, பாஜக கபளீகரம் செய்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து.அதிமுகவின் தலைவரே அமித் ஷா தான் என செல்வப்பெருந்தகை விமர்சனம். தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை, பாஜக உடன் இணைக்க வாய்ப்பு உள்ளதாகவும் சாடல்.கரூர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எரிவாயு சேமிப்பு முனையத்தின் முன்பு டேங்கர் லாரி ஓட்டுனர்கள் போராட்டம்.தென் கொரியாவில் கார் உதிரிபாக தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு.மேற்குவங்க  ஆர்.ஜி. கர் மருத்துவமனைலிப்டில் சிக்கி ஒருவர் பலி.பணம் கொடுத்து செய்தி வெளியிட்டால் கடும் நடவடிக்கை: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு.கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் மாவட்ட செயலாளர்குமரகுரு முடிவுக்கு கடும் எதிர்ப்பு.எடப்பாடியை மிரட்டி அமித்ஷா தொகுதி பங்கீடு பாஜவுக்கு 31 தொகுதிகள்?: கூட்டணி கட்சிகளுக்கும் அவரே பிரித்துக் கொடுத்தார்.பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தண்டனையை ரத்து செய்ய முடியாது:- உச்ச நீதிமன்றம் ,




நாம் நாகரிக சமூகமா!

நவீன இந்தியாவின் டிஜிட்டல் சாதனைக ளையும், விண்வெளிப் பாய்ச்சல்களையும் நாம் தம்பட்டம் அடித்துக் கொண்டாடினாலும், பாதாளச் சாக்கடைகளிலும் கழிவுநீர்த் தொட்டி களிலும் மனித உயிர்கள் பலியாவது ஒரு தீராத வேதனையாகத் தொடர்கிறது.

சமீபத்தில் மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள புள்ளிவிவரங்களின்படி 2017 முதல் இந்தியா முழுவதும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்போது 622 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் இதயத்தை உலுக்குகிறது. 

இதில் உத்தரப்பிரதேசம் (86), மகாராஷ்டிரா (82), தமிழ்நாடு (77), ஹரியானா (76) என உயிரிழப்புகளின் பட்டியல் நீள்கிறது. 

துப்புரவுப்பணி என்பது சாதி சார்ந்தது அல்ல, அது தொழில் சார்ந்தது என்று ஆட்சியா ளர்கள் கூறினாலும், கள யதார்த்தம் முற்றிலும்  வேறாகவே உள்ளது.

 பாதுகாப்பு உபகரணங்கள் மறுப்பு, ஊதிய நிலுவை மற்றும் அப்பட்டமான சாதி ரீதியான பாகுபாடு தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப் பட்டுள்ள 842 புகார்கள், இந்தத் தொழிலாளர்க ளின் பாதுகாப்பற்ற மற்றும் ஒடுக்கப்பட்ட நிலையை அம்பலப்படுத்துகின்றன.

மிகவும்  வேதனையான விஷயம் என்ன வென்றால், 2013 மற்றும் 2018-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி கைகளால் மலம் அள்ளும் 58,098 தொழிலாளர்கள் கண்டறியப்பட்ட நிலை யில், தற்போதைய புதிய ஆய்வில் நாட்டில்  அத்தகைய தொழிலாளர்களே இல்லை என்று ஒன்றியஅரசு கூச்சமின்றி அறிவித்துள்ளது. இது புள்ளிவிவர மோசடி அன்றி வேறில்லை.

 தலித் ஆதிவாசி உரிமைக்கான தேசிய மேடை போன்ற சமூக அமைப்புகளோ 2024, 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் முறையே 116 மற்றும் 158 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறு கின்றன. 

அரசுத் தரவுகளுக்கும் உண்மை நிலைக் கும் இடையே உள்ள இந்த மிகப்பெரிய இடை வெளி, அதிகார வர்க்கத்தின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும் நிர்வாகம் காட்டும் மெத்தனம் மன்னிக்க முடியாதது. 52 குடும்பங்க ளுக்கு இதுவரை ஒரு பைசா கூட இழப்பீடு கிடைக்கவில்லை என்பது வேதனையின் உச்சம். 

 உச்சநீதிமன்றம் பலமுறை சாடிய பின்னரும், இயந்திரமயமாக்கல் திட்டம் கோப்புகளில் உறங்கிக் கொண்டிருக்கிறது. 

அதிகார வர்க் கத்தின் இந்தத் தொடர் அலட்சியப்போக்கு என்பது வெறும் விபத்தல்ல, இது ஏழைத் தொழி லாளர்களின் உயிரோடு விளையாடும் ஒரு நிர்வாகக் கொலையாகும்.

அறிவியல் யுகத்தில் வாழ்ந்துகொண்டு மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த மனிதாபிமானமற்ற அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்காத வரை, நாம் ஒரு நாகரிக சமூகம் என்று சொல்லிக் கொள்ளவே தகுதி யற்றவர்கள்.

அம்மாவும் நாற்பது திருடர்களும்

.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இதனை சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த விட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் இது தொடர்பான வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார் கிரிராஜன் எம்.பி.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏராளமான வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, எல்.இ.டி. வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு என லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

 முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு,சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

“லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் அந்தக் குற்றம் தொடர்பான வழக்கைத் தொடர முடியும் என்று சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது” என்று கிரிராஜன் தனது மனுவில் தெரிவித்து உள்ளார்.

7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!

“இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள்மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர முடியும். ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால், சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள்மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த வழக்கு விசாரணை விரைவில் வரவுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலம், ஊழல் நாற்றம் எடுத்த அரசாங்கம் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தொடர்ச்சியாக அந்தக் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்தே வந்துள்ளார்கள்.

தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அப்போதே தி.மு.க. வழங்கியது. அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் புகார்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதே அவர்மீது டெண்டர்வழக்குப் பாய்ந்தது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாகவும், இதுகுறித்து பழனிசாமிமீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தார்

. இவைகளை தனது உறவினர்களுக்கே டெண்டராகக் கொடுத்துக் கொண்டார் பழனிசாமி என்பதுதான் குற்றச்சாட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி 2018 அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.

உடனடியாக எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கினார். “உங்கள்மீது ஊழல்புகார் சொல்லப்படுகிறதே?' என்று நிருபர்கள் டெல்லியில் வைத்து அவரிடம் கேட்டார்கள். ”யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை” என்று சொன்னவர்தான் பழனிசாமி.

1. யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை?

2. எனது உறவினர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்!

3. எனது உறவினர்கள் 'இ' டெண்டர் போட்டது எனக்குத் தெரியாது!

– இவைதான் பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது சொன்ன பதில்கள் ஆகும்.

குட்கா வியாபாரிகளிடம் அரசாங்கத்தின் பெயரால் மாமூல் வசூல் செய்தது பழனிசாமி ஆட்சிதான் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தங்களது வியாபாரத்துக்குத் துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள். 

அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது அ.தி.மு.க. ஆட்சியில். சி.பி.ஐ. இதனை விசாரித்து வருகிறது.

7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது.

டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், கே.பி.அன்பழகன் மீது வருமானத்துக்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக 58.44 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் வழக்குப் பதிவாகி வெவ்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. இதெல்லாம்

அமலாக்கத்துறைக்குத் தெரியாதா?

பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததும் 'வாசிங் மிஷின்' வைத்து வெளுத்து விட்டார்களா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை