கருணைக் கொலை!
கமல் செய்திருப்பது தியாகம்.. பெருந்தன்மையை வரலாறு பாராட்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் வாபஸ் இல்லை : ரயில் டிக்கெட் புக்கிங்கில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மாற்றங்கள்.
23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக
எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது பிலிப்பைன்ஸ் அரசு
மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
ஏப்.9ம் தேதி முதல் 29ம் தேதி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை:- இந்திய தேர்தல் ஆணையம் .
அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதை மோடி செய்வார்: ராகுல்காந்தி .
சிபிஐ எப்ஐஆர்-ஐ ரத்து செய்யக்கோரும் லாலுவின் மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் .
கருணைக் கொலை!
சண்டிகரை சேர்ந்த ஹரீஷ் ராணா கடந்த 2013ஆம் ஆண்டு தனது விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் மூளைப் பகுதியில் பலத்த காயமடைந்தார்.
இந்த விபத்தில் அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் Persistent Vegetative State எனப்படும் 'மீள முடியாத கோமா' நிலைக்குச் சென்றார்.
கடந்த 13 ஆண்டுகளாக அவருக்கு உடல் இயக்கங்கள் ஏதுமின்றி, ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் திரவ உணவு மற்றும் நீர் மூலமே உயிர் காக்கப்பட்டு வந்தது.
ஏறத்தாழ 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த நிலையில், அவரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு ராணாவின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, கேவி விஸ்வநாதன் அமர்வு, நாட்டிலேயே முதல் முறையாக ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய அனுமதித்தது.
இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹரீஷ் ராணா கொண்டு செல்லப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயிர் காக்கும் கருவிகளின் உதவி நிறுத்தப்பட்டது. மேலும், குழாய் மூலம் ஹரீஷ் ராணாவுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு உள்ளிட்டவை அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன.
, சுமார் 10 நாட்களுக்குப் பிறகு நீண்ட போராட்டத்திற்கு பின் ஹரீஷ் ராணா உயிரிழந்தார்.
இந்தியாவில் ஒரு தனிநபருக்குச் சட்டப்பூர்வமாக 'கருணைக் கொலை' நடைமுறைப்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரீஷின் தந்தை அசோக் ராணா ஒரு ஹோட்டலில் கேட்டரிங் வேலை செய்து வந்தவர். மகனின் மருத்துவச் செலவுக்காக டெல்லியில் இருந்த தங்களது சொந்த வீட்டை விற்றுவிட்டு, காசியாபாத்தில் உள்ள ஒரு சிறிய வாடகை வீட்டிற்கு இடம்பெயர்ந்தனர்.
கடந்த 13 ஆண்டுகளாக ஒரு நாள் கூட அவரது பெற்றோர் அவரைத் தனியாக விட்டதில்லை. படுத்த படுக்கையாக இருப்பதால் ஏற்பட்ட புண்களை பராமரிப்பது முதல் உணவுக் குழாயைச் சுத்தம் செய்வது வரை அனைத்தையும் அவர்களே செய்து வந்தனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் ஹரீஷின் பெற்றோரை நேரடியாகச் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்கள் அடைந்த வேதனையை உணர்ந்த நீதிபதிகள், இது வெறும் மரணம் அல்ல, "கண்ணியமான விடைபெறல்" என்று குறிப்பிட்டு கருணைக் கொலைக்கு அனுமதி அளித்தனர்.
இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹரீஷ் ராணா கொண்டு செல்லப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயிர் காக்கும் கருவிகளின் உதவி நிறுத்தப்பட்டது.
மேலும், குழாய் மூலம் ஹரீஷ் ராணாவுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு உள்ளிட்டவை அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், சுமார் 10 நாட்களுக்குப் பிறகு நீண்ட போராட்டத்திற்கு பின் ஹரீஷ் ராணா உயிரிழந்தார்.
இந்தியாவில் ஒரு தனிநபருக்குச் சட்டப்பூர்வமாக 'கருணைக் கொலை' நடைமுறைப்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளம் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 அன்று நடைபெறுகிறது.
மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில், கேரள பாஜக தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திர சேகர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதில், தனக்கு 93 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.













