தட்டுப்பாடு இல்லை?
தொகுதிகளைக் கண்டறிவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை. காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப பட்டியலை வழங்கியதால் விரைவில் அறிவிப்பு.
திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதி. முதலமைச்சர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு.
அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. 16 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 21 முன்னாள் அமைச்சர்கள் அதிமுக வேட்பாளர்களாக அறிவிப்பு.
கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சி.வி.சண்முகம், மயிலம் தொகுதிக்கு மாறினார். ராஜபாளையம் தொகுதியிலிருந்து சிவகாசி தொகுதிக்கு மாறினார் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக எஞ்சிய 169 தொகுதிகளில் அதிமுக போட்டி. 14 அமைச்சர்களின் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கினார் பழனிசாமி.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்று அறிவிக்கப்பட உள்ளன.
இத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இதுவரை பா.ஜ.க.வுக்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11, த.மா.கா.வுக்கு 5, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. எஞ்சிய 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதன்படி,
பா.ஜ.க. 27 தொகுதிகள்.
1.மயிலாப்பூர், 2.தளி, 3.மொடக்குறிச்சி, 4.ஊட்டி, 5.அவிநாசி, 6.திருப்பூர் தெற்கு, 7.கோவை வடக்கு, 8.கந்தர்வக்கோட்டை, 9.புதுக்கோட்டை, 10.திருப்பத்துார், 11.மதுரை தெற்கு, 12.சாத்துார், 13.திருச்செந்துார், 14.வாசுதேவநல்லுார், 15.ராதாபுரம், 16.நாகர்கோவில், 17.விளவங்கோடு, 18.ஆவடி, 19.திருவண்ணாமலை, 20.தஞ்சாவூர், 22.அறந்தாங்கி, 23.மானாமதுரை, 24.ராமநாதபுரம், 25.குளச்சல், 26.பத்மநாதபுரம், 27.ராசிபுரம்
பா.ம.க போட்டியிடும் தொகுதிகள் (18); சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் உள்ளிட்ட 18 தொகுதிகளில் பா.ம.க களமிறங்குகிறது.
அ.ம.மு.க, த.மா.கா, த.ம.மு.க. தொகுதிகள் ?
அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க (11 தொகுதிகள்) ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, 1.பெரியகுளம், 2.மன்னார்குடி, 3.திருவையாறு, 4.காரைக்குடி, 5.திருப்பத்துார், 6.நான்குநேரி, 7.ஒட்டப்பிடாரம், 8.திருச்சி மேற்கு, 9.சைதாப்பேட்டை, 10.பூந்தமல்லி, 11.மடத்துக்குளம் ஆகிய 11 தொகுதிகளில் அ.ம.மு.க களமிறங்குகிறது.
ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் தமிழ்மாநில காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் பாண்டியனின் த.ம.மு.க.கட்சி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும். கே.வி.குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை விதிகளின்படி, நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் பதிவு செய்த பிறகு, அடுத்த சிலிண்டருக்கு 25 நாள் இடைவெளி இருக்க வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் (கிராமங்கள்) அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 45 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த விதிகள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) மற்றும் உஜ்வாலா அல்லாத (Non-PMUY) என அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
சமூக வலைதளங்களில் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு 45 நாட்கள் என்றும், 2 சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 35 நாட்கள் என்றும் பரவி வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, விநியோகத் தட்டுப்பாடு குறித்த அச்சத்தில் மக்கள் சிலிண்டர்களைக் குவித்து வைப்பதைத் தவிர்க்கவே இந்த விதிகள் நினைவூட்டப்பட்டன.
தற்போது, நாடு முழுவதும் போதுமான கையிருப்பு உள்ளதால், மக்கள் பீதியடைந்து முன்பதிவு செய்ய வேண்டாம் என ஒன்றியஅரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் நடப்பது வேறு.
பலர் எரிவாயு முகவர் கடை முன் நாள்கணக்கில் காத்துகிடக்கின்றனர்.
வெயில் தாக்கத்தால் காத்திரிந்த சிலர் இறந்தும் போயுள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மக்கள் சிலிண்டர் கிடைக்காமல் நீண்ட வரிசையில் காத்திருப்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடெங்கும் மக்கள் எல்.பி.ஜி சிலிண்டருக்காக அலைகின்றனர். கேஸ் ஏஜென்சிகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
"நரேந்திரரும் காணவில்லை, சிலிண்டரும் காணவில்லை" என்ற முழக்கங்களுடன் பிரதமர் மோடியை விமர்சித்த எதிர்க்கட்சியினர், மக்கள் படும் அவஸ்தையை உணராமல் பிரதமர் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகச் சாடினர்.
சில இடங்களில் விநியோகக் குறைபாடுகள் மற்றும் மொபைல் ஆப் (App) தொழில்நுட்பக் கோளாறுகளால் தாமதம் ஏற்பட்டாலும், சிலிண்டர் இருப்புக்குத் தட்டுப்பாடு இல்லை என்பறே ஒன்றிய மோடி அரசின் குரலாக உள்ளது.
சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதன்கிழமை விளக்கமளித்துள்ளது.
எல்.பி.ஜி சிலிண்டர் மறுமுறை முன்பதிவு (Refill) செய்வதற்கான குறைந்தபட்ச கால இடைவெளியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நடைமுறை விதிகளின்படி, நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் பதிவு செய்த பிறகு, அடுத்த சிலிண்டருக்கு 25 நாள் இடைவெளி இருக்க வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் (கிராமங்கள்) அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 45 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த விதிகள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) மற்றும் உஜ்வாலா அல்லாத (Non-PMUY) என அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
சமூக வலைதளங்களில் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு 45 நாட்கள் என்றும், 2 சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 35 நாட்கள் என்றும் பரவி வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, விநியோகத் தட்டுப்பாடு குறித்த அச்சத்தில் மக்கள் சிலிண்டர்களைக் குவித்து வைப்பதைத் தவிர்க்கவே இந்த விதிகள் நினைவூட்டப்பட்டன. தற்போது, நாடு முழுவதும் போதுமான கையிருப்பு உள்ளதால், மக்கள் பீதியடைந்து முன்பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மக்கள் சிலிண்டர் கிடைக்காமல் நீண்ட வரிசையில் காத்திருப்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடெங்கும் மக்கள் எல்.பி.ஜி சிலிண்டருக்காக அலைகின்றனர்.
கேஸ் ஏஜென்சிகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என அவர்கள் குற்றம் சாட்டினர். "நரேந்திரரும் காணவில்லை, சிலிண்டரும் காணவில்லை" என்ற முழக்கங்களுடன் பிரதமர் மோடியை விமர்சித்த எதிர்க்கட்சியினர், மக்கள் படும் அவஸ்தையை உணராமல் பிரதமர் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகச் சாடினர்.












