வரும் முன் காவாதான்!
டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயில் இருந்து பூஜ்ஜியமாக்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு.ஆனால் மக்களுக்கு விலை குறையாது.எண்ணை நிறுவனங்களுக்கே லாபம்.
குஜராத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 2300 கிலோ போதைப்பொருள் மாயமானதாக CAG அதிர்ச்சி தகவல்.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு ஏப்ரல் 6 வரை நீட்டிப்பு.
அமெரிக்காவுக்கு உதவிக்கு கூப்பிட்டும் வராத நேட்டோ ஒரு காகிதப் புலி: அதிபர் டிரம்ப் கடுப்பு.
மாம்பழம் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை: ராமதாஸ் கண்டனம்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி. நேபாள புதிய பிரதமராக பலேன் பதவிஏற்பு.
ஒன்றிய மோடி அரசு என்னதான் செய்கிறது?
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு உள்ளது என்றும், தட்டுப்பாடு இல்லை என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்த விசயத்தில் பீதியடையத் தேவை யில்லை என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கூறியுள்ளார்.
ஆனால் நடைமுறை யில் சமையல் எரிவாயு உரிய நேரத்தில் கிடைக் காமல் மக்கள் பெரும் அவதியை சந்தித்து வரு கின்றனர். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தொடுக்கத் துவங்கிய உடனேயே இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தலை தூக்கத் துவங்கிவிட்டது.
குறிப் பிட்ட உணவு வகைகள் தயாரிப்பு இல்லை என்று உணவகங்கள் அறிவிக்கத் துவங்கின. அது இப்போது விஸ்வரூபம் எடுத்து பல உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
உணவுப் பண்டங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தேநீர் உள்ளிட்ட பல்வேறு பொ ருட்களின் விலை உயர்ந்து வருகிறது. வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை களைப் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள் ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மறுபுறத்தில் கள்ளச் சந்தையில் சமையல் எரி வாயு உருளைகள் பலமடங்கு விலை கொடுத் தால் கிடைப்பதாக அவர்கள் புலம்புகின்றனர்.
எஸ்மா சட்டம் என்னசெய்கிறது?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரி வாயு உருளைகள் கிடைக்காமல் மக்கள் பதற்ற மடைந்து வருகின்றனர். கேஸ் ஏஜென்சிகள் முன்பு காலி உருளைகளுடன் தவம் கிடக்கின்ற னர்.
பல ஏஜென்சிகளில் பதிவு செய்யக்கூட முடியவில்லை என்ற நிலை உள்ளது. ஆனால் ஒன்றிய அமைச்சர்கள் வெறும் கையால் முழம் போடுகின்றனர். சமையல் எரிவாயு தட்டுப் பாடே இல்லை என்று கொட்டி முழக்குகின்றனர்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.60ம், வணிகப் பயன்பாட்டிற் கான உருளை விலை ரூ.115ம் பிரீமியம் பெட் ரோல் விலை ரூ.2.35ம் உயர்த்தப்பட்டுள்ளது.
நயாரா பன்னாட்டு நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5.30ம், டீசல் விலையை லிட்ட ருக்கு ரூ.3ம் தன்னிச்சையாக உயர்த்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் இப்போதுள்ள இருப்பைக் கொண்டு இன்னும் எவ்வளவு நாள் சமாளிக்க முடியும் என்ற கவலை எழுந்துள்ளது. பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எரிபொ ருள் தட்டுப்பாட்டால் பொது முடக்கம் அறிவித் துள்ளன.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சில நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் கடைகள் மற்றும் நிறுவ னங்கள் இயங்குவதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக் கப்படுகிறது. இந்திய அரசும் பிரச்சனை இல்லை என்று மூடி மறைப்பதை விட உள்நாட்டு உற் பத்தியை அதிகரிப்பது, இறக்குமதிக்கான அதிக பட்ச சாத்தியங்களை ஆராய்வது போன்ற தொலை நோக்குத் தீர்வுகளை ஆராய்வது அவசியம்.
அதைவிட்டுவிட்டு மக்களுக்கு எய்த வித பலனுமில்லாத கலால் வரியை நீக்கி எண்ணை நிறுவனங்கள். லாபத்தைக் கூட்டுவது அடி முட்டாள்தனம்.
கூட்டிய எரிபொருள் விலைகளை குறைத்தால் எளியமக்கள் சுமையாவது குறையும்.
வரும்முன் காவாதான் வாழ்க்கை எரிமுன் வைத்தூறு போலக் கெடும்’



