இரவு நேர சேவை!

 இரவு நேர விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று முதல் தூத்துக்குடியிலிருந்து புறப்படும் மற்ற விமானங்களின் நேரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை 8:00 மணிக்குச் சென்னை புறப்பட வேண்டிய விமானம் காலை 8:10 மணிக்கும்,

காலை 11:25 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் மதியம் 12:05 மணிக்கும்,

மதியம் 12:15 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய விமானம் மதியம் 1:10 மணிக்கும்,

மாலை 4:15 மணிக்குச் சென்னை செல்ல வேண்டிய விமானம் மாலை 4:10 மணிக்கும் புறப்படும்.

முன்பு மதியம் 1:50 மணிக்குச் சென்னைக்குச் சென்று கொண்டிருந்த விமானமே தற்போது இரவு நேர சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

 இந்த விமானம் தினமும் சென்னையிலிருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7:55 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும். மீண்டும் தூத்துக்குடியிலிருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னையைச் சென்றடையும்.

இந்த புதிய வசதியால் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பயணிப்பவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

முதல் நாளான இன்றே ஏராளமான பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்த ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ளனர். இந்த விமான சேவை தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறைக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஐந்தாண்டுகளுக்கு முன்

ஆட்சி, அதிகாரம், அரசியல் என எல்லாவற்றையும் உறுதி செய்யும் நாளாக தேர்தல் உள்ளது.

அப்படிப்பட்ட தேர்தலாக வரும் 2026 சட்டமன்ற தேர்தல் முக்கிய கவனம் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தேதியில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நேரத்தில் தமிழகத்தில் சூடு பறக்க நடந்த முந்தைய தேர்தல் களங்களை திரும்பி பார்க்க வைக்கும் முயற்சி தான் 'தமிழ்நாடும் தேர்தலும்'


2016 தேர்தல் திமுக, அதிமுக என்ற இரண்டு பிரதான கட்சிகளின் வரலாற்று பெருமைமிக்க தலைமைகளான கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் அவரவர் தம் கட்சிக்கு தலைமையேற்ற பிறகு போட்டியிட்ட கடைசித் தேர்தலாக இருந்தது.


அடுத்து வந்த 2021 தேர்தல் கலைஞர், ஜெ. இல்லாது திமுக, அதிமுக சந்தித்த முதல் தேர்தலாகவும் இருந்தது.


2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு பிளவுகள், கோஷ்டி மோதல்களுக்கு பின் எடப்பாடி பழனிசாமி மீதமுள்ள ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.


அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு ஏப்ரல் 6, 2021 அன்று நடைபெற்ற நிலையில் மே 2, 2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அந்த தேர்தலில் 73.63 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தது.


2021 தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது.


திமுக 133 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும், சிபிஐ(எம்) 2 இடங்களிலும் என திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களில் வென்றது. திமுக தனிப்பெரும்பான்மையாக தொகுதிகளை கைப்பற்றியது.


அதிமுக கூட்டணியில் அதிமுக 66 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வென்று மொத்தமாக 75 இடங்களை பெற்று தோற்றது.

2021 தேர்தலில் திமுக 37.7 சதவிகித வாக்குகளையும், அதிமுக 33.29 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது.


சீமானின் நாம் தமிழர் கட்சி 6.58 சதவிகித வாக்குகளை பெற்று வாக்கு அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.


காரணம் அந்த தேர்தலில் காங்கிரஸ்- 4.27, சதவிகிதம், பாமக -3.8 சதவிகிதம் பாஜக- 2.62 ,சதவிகிதம் என வாக்குகளை பெற்றது.


மே 7, 2021 அன்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக முதன் முறையாக பொறுப்பேற்றார்.



திறந்த ஒரே மாதத்தில் 7 விமான நிலையங்களை உத்திர பிரதேசத்தில் மூடி விட்டார்கள். தற்போது இன்னொரு விமான நிலையம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. எல்லாம் தமிழர்களின் வரிப்பணம்!


முதியோர் உதவித்தொகை ரூ. 1200- லிருந்து ரூ.2000 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1500- லிருந்து ரூ. 2500 ஆகவும் உயர்த்தப்படும்

- திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை