தொகுதி நிதி முறைகேடு!

ஈரான் மீது இஸ்‌ரேலும், அமெரிக்காவும் இணைந்து 4-வது நாளாக தாக்குதல். ஈரானின் இடைக்கால தலைவர் அராஃபியும் கொல்லப்பட்டதாக தகவல்இஸ்ரேலின் பெயர்சீபா நகரில் உள்ள ராணுவ கட்டடத்தை தகர்த்து விட்டதாக ஈரான் அறிவிப்பு. ஹோர்முஸ் நீரிணை மூடலால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பது மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தல் என டிரம்ப் விளக்கம். முன் எப்போதும் இல்லாத வகையில் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்றும் அதிரடிஈரானின் இறையாண்மையை காக்க ஆதரவு அளிப்பதாக சீனா அறிவித்திருப்பதால் பதற்றம். பேச்சுவார்த்தையை தொடங்க ஈரானுக்கு பிரான்ஸ், ஜெர்மனி, பிரட்டன் நாடுகள் அழைப்புடெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி ஆதரவு. தமிழ்ப் புலிகள், புதிய திராவிடர் கழகமும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற ஆதரவுமனைவி சங்கீதா மீதான தவெகவினரின் வலைதள தாக்குதலை கண்டிக்காத விஜய். பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்நாங்குநேரி அருகே பெட்ரோல் குண்டுவீசி, கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல். இருவர் உயிரிழப்பு. காயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சைசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வரும் 23-ம் தேதி தீர்ப்பு. மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி முத்துக்குமரன் அறிவிப்பு,







தொகுதி மேம்பாட்டு நிதி: 

அதிர்ச்சி தரும் பாஜக முறைகேடு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மற்றும் மாநிலத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழங்கப்படுவதுதான் தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS). 

ஆனால், சமீ பத்திய புள்ளிவிவரங்கள் இந்த நிதி ஒதுக்கீட்டில் நிலவும் அதிர்ச்சிகரமான முறைகேடுகளையும், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை நோக்கிய அரசி யல் சார்புநிலையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. 

ஆங்கில நாளிதழ் ஒன்று வெளி யிட்டுள்ள தரவுகளின்படி, 2023 முதல் 2026 வரை யிலான காலக்கட்டத்தில், மாநிலங்களுக்கு வெளியே செலவிடப்பட்ட நிதியில் 84 சதவீதத் திற்கும் மேலானது உத்தரப் பிரதேச மாநிலத்தி ற்கு மட்டுமே சென்றுள்ளது என்பது அப்பட்ட மான பாரபட்சமாகும்.வெறும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இத்தகைய விசித்திரமான நிதி ஒதுக் கீட்டைச் செய்துள்ளனர். இதில் பாஜக எம்.பி-க்க ளின் பங்கு மிக முக்கியமானது.

 ஜம்மு - காஷ்மீ ரைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் குலாம் அலி கட்டானா, தனது மாநிலத்தின் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, தனது நிதியில் 95 சதவீதத்தை (சுமார் 12 கோடி ரூபாய்) உத்தரப் பிரதேசத்தில் எல்.இ.டி விளக்கு கள் பொருத்தச் செலவிட்டுள்ளார்.

 இதேபோல், உத்தரகண்ட் பாஜக எம்.பி மாலா ராஜ்ய லட்சுமி  ஷா, தனது நிதியில் 57 சதவீதத்தை (சுமார் 50 லட்சம் ரூபாய்) உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தின் 2 கிராமங்களில் நடைபாதை அமைக்கச் செலவிட்டுள்ளார். 

ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சன்னிலால் கராசியா, தனது நிதியில் 80 சதவீ தத்தை (98 லட்சம் ரூபாய்) உத்தரப் பிரதேசத்தின் இரண்டு மாவட்டங்களில் எல்.இ.டி விளக்கு கள் பொருத்த மடைமாற்றியுள்ளார்.

மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேந்திர கெலாட், பீகாரைச் சேர்ந்த சதீஷ் சந்திர துபே  போன்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு திட்டங்களு க்குத் தங்கள் நிதியை வாரி வழங்கியுள்ளனர். 

ஜம்மு - காஷ்மீர் போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலம், ஒட்டுமொத்த மேம்பாட்டு நிதியில் வெறும் 0.6 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தி யுள்ள நிலையில், அங்கிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் உத்தரப் பிரதேசத்திற்கு நிதியை மடைமாற்றுவது அந்தந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு,  ‘வளர்ச்சி’ என்று பேசிக்கொண்டே, பின்தங்கிய  மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அரசி யல் ஆதாயம் தரும் மாநிலங்களுக்குத் தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடி யாது.

 குறிப்பாக, உத்தரப்பிரதேசம் ஏற்கெனவே மற்ற மாநிலங்களை விட இருமடங்கு அதிக மாக (தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு) இந்த நிதியைப் பயன்படுத்தி வரும் சூழலில், மற்ற மாநிலங்களின் பங்கையும் அங்கே குவிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதி ரானது.


காங்கிரசுக்கு 25 சீட் தான்;

ஆர்.எஸ் பாரதி உறுதி


தி.மு.க - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தான் தி.மு.க. கொடுத்த ஆஃபர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்துள்ளது. தி.மு.க தரப்பில் 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற ஆஃபர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆனால், அவர்கள் 41 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு ராஜ்யசபா சீட் கேட்டு திமுகவின் ஆஃபரை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.


இது குறித்து தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "எங்கள் தரப்பு முடிவு காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது.


இப்போது அதை ஏற்றுக்கொள்வதும் அல்லது நிராகரிப்பதும் அவர்கள் கையில் தான் உள்ளது. எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. இருப்பினும், இதற்கு எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.


தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில், தி.மு.க தங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அறிக்கையை கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் சமர்பித்துள்ளோம்.


அதிகாரப் பகிர்வு மற்றும் கூடுதல் இடங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு தி.மு.க சாதகமாகப் பதிலளிக்காததால் பேச்சுவார்த்தை இழுபறி நீடிப்பதாக தலைமைக்குத் தெரிவித்துள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூற ராகுல்காந்தி தொலைபேசியில் அழைத்தபோது, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அன்றிரவு, காங்கிரஸ் மேலிடம் தமிழக எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டு கூட்டணி விருப்பங்கள் குறித்துக் கேட்டறிந்தது.  இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், "பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க கூட்டணியைத் தொடரவே விரும்புகிறார்கள்.


ஒரு சிலர் மட்டும், தி.மு.க கூடுதல் இடங்களை வழங்காவிட்டால் தவெக (TVK) உடன் கூட்டணி வைப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்," என்றார்.


தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "கூட்டணியில் எந்தக் குழப்பமோ அல்லது நெருக்கடியோ இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் பேச்சுவார்த்தைகள் நடப்பது இயல்புதான்.


அனைத்துமே கட்சிகளும் கூடுதல் இடங்களைக் கேட்கும், இறுதியில் ஒரு உடன்பாடு எட்டப்படும். இப்போதும் அதுதான் நடக்கும். நாங்கள் இன்னும் சில இடங்களைக் கேட்டு வருகிறோம், பேச்சுவார்த்தை தொடர்கிறது," என்றார்.


த.வெ.க-வுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக வந்த செய்திகளை மறுத்த அவர், மாற்று அணிகள் குறித்து மேலிடம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை, "இதில் எந்தப் புறவாசல் அரசியலும் இல்லை" தவெக நிர்வாகிகளும் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை என்று உறுதிப்படுத்தினர்.


அதே சமயம் த.வெ.க-வின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூட்டணிகள் கடைசி நேரத்தில் கூட மாறலாம்," என்று சூசகமாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை