வேட்பு மனு தாக்கல்.,
தேர்தலில்இன்றைய தலைப்புச் செய்திகள் 🗞️ 524 வாக்குறுதிகள் கொண்ட திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என அறிவிப்பு. 🗞️ கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என திமுக அறிவிப்பு. புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கான உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்வு. 🗞️ நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி. கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவிப்பு. 🗞️ சட்டமன்றத் தேர்தலின் கதாநாயகன் மட்டுமல்ல, கதாநாயகியும் திமுக தேர்தல் அறிக்கை தான். 200 தொகுதிகளுக்கு மேல் வென்று, திராவிட மாடல் 2.O ஆட்சி அமையும் எனவும் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம். 🗞️ அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடிமராமத்து திட்டம் மறுபடியும் தொடங்கப்படும். நெல்லையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி. 🗞️ தமிழ்நாட்டில் சட்டபேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம். விடுமுறை வருவதால், 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும். 🗞️ இன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல். தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். 🗞️ திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல். 🗞️ விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் செய்யூரில் சிந்தனைச் செல்வன், திண்டிவனத்தில் வன்னி அரசு போட்டி. அரக்கோணத்தில் எழில் கரோலின், கள்ளக்குறிச்சியில் மாலதி என பெண் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். 🗞️ விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டி. மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் போட்டியிடுவதாக அறிவிப்பு. 🗞️ பெரம்பூர் தொகுதியில் விஜய் இன்று வேட்புமனு தாக்கல். பிற்பகலில் கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம். 🗞️ 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சசிகலா. தென்மாவட்டங்களில் 14 தொகுதிகளில் அதிமுகவுக்கும், 2 தொகுதிகளில் அமமுகவுக்கும் நெருக்கடி கொடுக்க திட்டம். 🗞️ கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் அண்ணாமலை புறக்கணிப்பு. தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்காததால் அண்ணாமலை அதிருப்தியில் உள்ளதாக தகவல். 🗞️ யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறிந்து பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் என வானதி சீனிவாசன் பதில். வரவேற்போர் பட்டியலில் பெயர் இருந்தும் பிரதமரை வரவேற்க அண்ணாமலை வரவில்லை என்றும் விளக்கம். 🗞️ காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான், தேவகோட்டையில் இன்று வேட்புமனு தாக்கல். நாதக-வின் 234 வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். 🗞️ ஜோதிடம் மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என சர்ச்சை பேச்சு. கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக வேட்பாளருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம். 🗞️ சேலம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை. கோடை வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி. 🗞️ திண்டுக்கல்லில் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு விருது தரப்போவதாக மோசடி. 7 லட்சம் ரூபாய் வரை இழந்த இன்ஸ்டா பிரபலங்கள் சாலை மறியல். மேற்குவங்கத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம். 284 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் தலைமை. 🗞️ இத்தாலியில் கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 12 டன் கிட்கேட் சாக்லெட்டுகள் கொள்ளை. ஜிபிஎஸ் கருவியை துண்டித்து மர்ம நபர்கள் கைவரிசை. 🗞️ இஸ்ரேலின் ரசாயன தொழிற்சாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல். பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகை எழும் நிலையில், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள். 🗞️ அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம். டிரம்ப் மன்னர் அல்ல; ஜோக்கர் என்ற பதாகைகளுடன் பேரணி. 🗞️ ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அசத்தல். பணத்திற்கு சீட் வழங்கியதாக சர்ச்சை காங். தலைவர்கள் மீதான புகார் தீவிரமானது: முதல்வர் பினராயி விஜயன் யை கடந்து மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன: ஒருநாள் தேவைக்கு போதுமானது
பெற்றோரை கவனிக்க தவறினால் சம்பளத்தில் 15% பிடித்தம்: தெலங்கானாவில் புதிய மசோதா நிறைவேற்றம்
சட்டமன்ற தேர்தல்அதிமுக சார்பில் சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
விசிகவின் 8 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி: 10 வருடங்களுக்கு பிறகு மாநில ,அரசியலுக்கு திரும்புகிறார்
தேர்தல் என்றாலே மேடைப் பேச்சுகளும், பிரம்மாண்ட ஊர்வலங்களும்தான் நம் நினைவுக்கு வரும்.
ஆனால், ஒரு வேட்பாளரின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் முதல் யுத்தம், தேர்தல் அதிகாரியின் மேசைக்கு முன்பாகத்தான் தொடங்குகிறது.
அதுதான் ‘வேட்புமனு தாக்கல்’. ஒரு சிறு தவறு நடந்தால் கூட, பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டியெழுப்பிய அரசியல் கனவு ஒரே நொடியில் தவிடுபொடியாகிவிடும்.
தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த வேட்புமனு தாக்கலுக்குப் பின்னால் நடக்கும் சுவாரஸ்யமான தந்திரங்களைப் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 6ம் தேதி கடைசி நாள். 7ம் தேதி மனுக்கள் பரிசீலனை. 9ம் தேதி மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள்.
அன்றே இறுதி பட்டியல் வெளியாகி சின்னங்கள் ஒதுக்கப்படும். ஓட்டையைத் தேடும் படலம் (ஆபரேஷன் ஸ்க்ரூட்டினி): வேட்புமனு தாக்கல் என்பது வெறும் படிவத்தை நிரப்புவது மட்டுமல்ல; அது ஒரு ‘சதுரங்க ஆட்டம்’. வேட்பாளர்கள் இரண்டு முக்கிய வேலைகளைச் செய்வார்கள்.
ஒன்று தனது மனுவில் ஒரு கமா, முற்றுப்புள்ளி கூடத் தவறாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது. மற்றொன்று எதிரணி வேட்பாளரின் மனுவில் ஏதேனும் ஒரு சிறு பிழையைக் கண்டுபிடித்து, அதைத் தள்ளுபடி செய்ய வைப்பது.
இதற்காகவே ஒவ்வொரு கட்சியிலும் சட்ட நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு இரவு பகலாக வேலை செய்யும். வேட்பாளருக்கே தெரியாத வழக்குகள்: முன்பெல்லாம் கிரிமினல் வழக்குகளை மறைப்பது எளிதாக இருந்தது.
ஆனால் 2019 உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் வேட்பாளர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
வேடிக்கை என்னவென்றால், பல நேரங்களில் ஒரு தலைவரின் மீது ஏதோ ஒரு மூலையில் இருக்கும் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு அந்த வேட்பாளருக்கே தெரியாமல் இருக்கும்.
இதைக் கண்டுபிடிக்க எதிரணிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தித் தரவுகளைச் சேகரிப்பார்கள். ஒரு வழக்கைக் குறிப்பிடத் தவறினால் கூட அந்த மனு தள்ளுபடி ஆகலாம்.
ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று தெரிந்தாலும், இன்றும் அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் ஒரு தந்திரம் ‘பெயர் ஒற்றுமை’. ஒரு பிரபலமான வேட்பாளர் போட்டியிடுகிறார் என்றால், அதே பெயரில் உள்ள ஒரு சாதாரண நபரைத் தேடிக் கண்டுபிடித்து சுயேச்சையாக நிற்க வைப்பார்கள்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னத்தைப் பார்த்து வாக்களிக்கத் தெரியாத வாக்காளர்கள், பெயர்க் குழப்பத்தில் இவருக்குப் போட வேண்டிய வாக்கை அந்தப் ‘பெயருக்கு’ போட்டுவிடுவார்கள்.
வேட்புமனுவில் சொத்து விவரங்களைக் குறிப்பிடுவது மிகப்பெரிய சவாலாகும். தன்னுடைய சொத்துக்கள் மட்டுமல்லாது, மனைவி மற்றும் தன்னைச் சார்ந்திருக்கும் பிள்ளைகளின் சொத்துக்களையும் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்.
கையிலிருக்கும் ரொக்கம், வங்கியில் இருக்கும் வைப்புத் தொகை, தங்கம், நிலம், வாகனங்கள் என எல்லாவற்றையும் கணக்கு காட்ட வேண்டும். தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க என்றே ஒரு புதிய வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்.
பழைய கணக்குகளைப் பயன்படுத்த முடியாது. வேட்புமனுவின் ‘செக் லிஸ்ட்’; ஒரு மனு வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால், மிக அவசியம் முன்மொழிபவர்கள்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர் என்றால் ஒருவர் போதும், சுயேச்சை என்றால் அந்தத் தொகுதியின் வாக்காளர்கள் 10 பேர் முன்மொழிய வேண்டும். 200 ரூபாய் முத்திரைத்தாளில் உறுதிமொழிப் பத்திரம்.
வேட்பாளர் தனது கல்வித் தகுதி குறித்த அசல் சான்றிதழ் விவரங்களை இணைக்க வேண்டும்.
டெபாசிட் தொகையாக பொதுப் பிரிவினருக்கும், இடஒதுக்கீடு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். மக்கள் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், தேர்தல் ஆணையத்தின் இந்தச் சட்ட வடிகட்டியில் அவர் தேர்வாக வேண்டும்.
எனவே, 2026 தேர்தலில் உங்கள் தொகுதி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கவனித்துப் பாருங்கள்; அது வெறும் காகிதமல்ல, பலரது அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆவணம்.


