இறுதி அடி ?

 சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் சந்திப்பு.குடியாத்தம் அருகே 500 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்  நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள், விதிகள் ஏப்.1 முதல் அமலாகின்றன.ஈரானின் மின்சார உற்பத்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்: ட்ரம்ப் எச்சரிக்கை.சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசிக்கும் ஏ+ பிரிவு ரவுடி சம்போ தினேஷ் கைது.மோடியே மிகப்பெரிய மோசமான  ஊடுருவல்காரர்: மம்தா பானர்ஜி தாக்கு 





















வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் விவரம் குறித்தும், தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்தும் தகவல்களை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, "தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 136 பொதுப்பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 151 செலவினப் பார்வையாளர்களையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.


குடிமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல்கள் தொடர்பான புகார்களை நேரடியாகப் பதிவு செய்யவும் அல்லது விதிமீறல்களைப் புகாரளிக்கவும் ஏதுவாக, மத்திய பார்வையாளர்களின் தொடர்பு விவரங்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பகிரப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம் வலுவான தேர்தல் செலவினக் கண்காணிப்பினை உறுதி செய்யும் விதமாக மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்கக் குழுக்கள் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


இந்தத் தீவிரப்படுத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக இன்றைய (மார்ச் 21) நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக ரொக்கம், தங்கம், வெள்ளி உலோகங்கள், போதைப்பொருள்கள் உள்பட ரூ.75.03 கோடி மதிப்பிலான பறிமுதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணையவழி வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான நேர ஒதுக்கீடுகளை முன்பதிவு செய்தல், பொதுக் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்ட அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் போன்ற தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு வசதியளிக்கும் ஒரு விரிவான டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது.


விண்ணப்பதாரர்கள் http://suvidha.ecl.gov.in/ என்ற இணையதளத்தை அணுகி இணையவழி செயல்முறையை நிறைவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை எடுத்து, தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


சுவிதா இணையதளம் தேர்தல் தொடர்பான செயல்களில் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தி மனிதத் தலையீட்டைக் குறைக்கிறது.

மேலும் தேர்தல்களின் போது வெளிப்படையான அனுமதி செயல்முறையை உறுதி செய்கிறது.

இதன் மூலம் இதுவரை 2443 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 737 விண்ணப்பங்கள் காலக்கெடுவுக்குள் தீர்க்கப்பட்டன. மீதமுள்ளவை செயலாக்கத்தில் உள்ளன.


2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களின் ஒரு பகுதியாக, ஜனநாயகச் செயல்முறையில் பங்கேற்பதற்காக, தகுதிவாய்ந்த ஒவ்வொரு குடிமகனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வது இன்றியமையாததாகும்.


எனவே, தகுதிவாய்ந்த அனைத்துக் குடிமக்களும் https://electoralsearch.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், பெயரைச் சேர்ப்பதற்கு விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 26.03.2026 ஆகும்.

குடிமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரும் விண்ணப்பங்களை, படிவம்-6 (Form–6)-ஐப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.


மேலும் எளிதாகப் பதிவு செய்துகொள்ளும் வகையில், https://www.voters.eci.gov.in/ என்ற இணையவழி வசதியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


மேலும், இத்தேவைக்காக, Google Play Store-இல் உள்ள “ECINet” என்ற கைப்பேசிச் செயலியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


மேலும், குடிமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக, “Book a Call with BLO” (வாக்கு சாவடி நிலை அலுவலருடன் தொலைபேசி வழித் தொடர்பு) என்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


உரிய நேரத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயரை பதிவு செய்துகொள்வது, கடைசி நேரத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்க உதவும். எனவே, அனைத்து குடிமக்களும் தேர்தல் செயல்முறையில் முழுமையாகப் பங்கேற்பதற்கு ஏதுவாக, தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பதிலடி.

ஈரானுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.


இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா இந்த போரில் முடிக்கவேண்டிய வேலைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார்.


ஆனால் அமெரிக்கா கூடுதல் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானில் எந்த இடத்தை குறிவைத்து தாக்கினாலும் உடனே ஈரான் அது போன்ற இடங்களை இஸ்ரேலில் குறிவைத்து தாக்கி வருகிறது.


கடந்த வாரம் ஈரானில் உலகின் மிகப்பெரிய எரிவாயு மண்டலங்களில் ஒன்றாக கருதப்படும் தெற்கு பார்ஸ் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.


இத்தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு மையங்களில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.

இதில் அமெரிக்கா தலையிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்று இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


ஆனால் இஸ்ரேல் ஈரானில் உள்ள நடன்ஸ் நகரில் இருக்கும் ஷாஹித் அஹ்மதி-ரோஷன் அணு ஆராய்ச்சி மையத்தில் தாக்குதல் நடத்தியது.


இத்தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் இஸ்ரேலில் உள்ள டிமோனா நகரில் ஈரான் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியது. இந்த நகரில் இஸ்ரேலின் அணு ஆராய்ச்சி மையம் இருக்கிறது.


ஈரான் அனுப்பிய ஏவுகணையை இஸ்ரேல் வான் தடுப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்த தவறிவிட்டன. இதனால் ஏவுகணை குடியிருப்பு வளாகத்தில் விழுந்து கட்டடங்கள் இடிந்ததில் 47 பேர் காயம் அடைந்தனர்.


இஸ்ரேலின் தேசிய அவசர மருத்துவச் சேவை பிரிவு அதிகாரி மேகன் டேவிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''தாக்குதலில் காயமடைந்த 36-க்கும் மேற்பட்டோருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.


ஏவுகணைத் துண்டுகள் விழுந்தும், பாதுகாப்பு அரண்களை நோக்கி ஓடும்போதும் இந்த காயங்கள் ஏற்பட்டது.


காயமடைந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். குறிப்பாக 10 மற்றும் 12 வயது சிறார்கள் காயம் அடைந்துள்ளனர்''என்றார்.

வான் பாதுகாப்பு ஏவுகணையை தடுக்க தவறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அணு ஆராய்ச்சி மையங்கள் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.


---------------------------------------------------------------------

டிமோனா நகரம் குட்டி இந்தியா என்று அழைக்கப்படுகிறது.


இஸ்ரேலில் வாழும் இந்திய யூதர்களின் முக்கிய மையமாகும். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர்ந்த இந்திய யூதர்கள் ஆவர்.

சுமார் 7,500 இந்திய வம்சாவளியினர் இங்கு வாழ்கின்றனர். இது அந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும்.

------------------------------------------------------


கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை தாக்குவோம்

ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.


அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.


ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா (PBUH) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில், "முந்தைய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஒருவேளை எதிரிகளால் ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு சொந்தமான அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மற்றும் கடல்நீரை சுத்திகரிக்கும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்''என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஜப்பான் கப்பல்களை அனுமதிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை