நடப்பது ஒன்று,....!

 டிரம்ப் கூறுவது வேறொன்று...?

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி மூன்று வாரங்களுக்கும் மேலாகிவிட்டதுபதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள அண்டை வளைகுடா நாடுகள் மீதும் இரான் தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கு பிராந்தியம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.


ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க இரானுக்கு 48 மணிநேர அவகாசம் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதை செய்யாவிட்டால் இரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.


இஸ்ரேல் மீதான இரானின் பதிலடி தாக்குதல்களில் தெற்கு இஸ்ரேலில் அராட், டிமோனா ஆகிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 


சனிக்கிழமை, தெற்கு இஸ்ரேலில் உள்ள அராட் என்ற சிறிய நகரத்தை இரானிய ஏவுகணை ஒன்று தாக்கியது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது.


இரானிய ஏவுகணைத் தாக்குதலில் 88 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது,


 அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

முதல் கட்ட தகவல்படி, இரானிய தாக்குதலில் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இரானும் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் எந்தவொரு குறிப்பிட்ட திசையிலும் செல்வதாகத் தெரியவில்லை.


இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ஆனால், யதார்த்த நிலை வேறாகவே உள்ளது.


இஸ்ரேலின் டிமோனா அணுசக்தி நிலையத்திற்கு அருகே இரானிய ஏவுகணைகள் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


சனிக்கிழமை மாலை அராட் நகரில் நடந்த ஏவுகணைத் தாக்குதல் குறித்து இஸ்ரேலின் அவசரச் சேவைப் பிரிவு கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளது.


மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை இரான் தாக்கியுள்ளது.

இப்போது இஸ்ரேலில் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த முறை டிமோனா மற்றும் அராட் நகரங்களை இலக்கு வைத்துள்ளன.


இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பல குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன.


ஏவுகணை விழுந்த இடத்திலிருந்து வெறும் 13 கிலோமீட்டர் தொலைவில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ளதால், டிமோனா நகரத்திற்கு அருகிலுள்ள அந்த நிலையத்தை இலக்கு வைத்தே இரான் இந்த ஏவுகணையை ஏவியதாக நம்பப்படுகிறது.


இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே டிமோனா மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. 


இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தெற்கு இஸ்ரேலில் உள்ள மற்ற நகரங்களையும், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராணுவத் தளங்களையும் இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது.


இஸ்ரேலில் ஏற்பட்ட வெடிப்புகளைத் தொடர்ந்து, இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை