வெல்லம் கொடுத்துக் கொல்லும்

 மாணவ, மாணவிகள் இடைநில்லா கல்வியை உறுதி செய்யும் பணியில் தமிழ்நாடு மீண்டும் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.தமிழ்நாட்டில் மாணவ மாணவிகளுக்கான உயர்நிலை நிகர சேர்க்கை 2020–21ல் 46.6%-லிருந்து 2024–25ல் 71%  ஆக உயர்ந்துள்ளது, இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு..ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமனம்.மாநிலங்களவை தேர்தலுக்கு திருச்சி சிவா, எல்.கே.சுதீஷ், தம்பிதுரை உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல். மனுக்கள் மீது இன்று பரிசீலனை, திரும்பப் பெற வரும் 9ம் தேதி கடைசி நாள்.

உங்க கனவ சொல்லுங்க திட்டம் குறித்து சென்னையில் கலந்துரையாடல். பொதுமக்களிடம் இன்று உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்துக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு. தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்களும் மாற்றம்.இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார். கம்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.ஆட்சியில் பங்கு என விஜய் கூறியும் யாரும் செல்லவில்லை என ஜெயக்குமார் விமர்சனம்.தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்த விஜய் - திரிஷா. மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வீடியோ வெளியீடு.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம். புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்கிறார். வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம் நிறைவு. வரும் 10ம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு.

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற 100 நாள் வேலை உரிமை பாதுகாப்பு மாநாடு. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கம்.
வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான். குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மீது அடுத்தடுத்து ஏவுகணை வீச்சு.
மத்திய கிழக்கு போர் காரணமாக பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு. 28 நாட்களுக்கு மட்டுமே உள்ளதால் கொரோனா கால கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு.
அமெரிக்கா - ஈரான் போரை அடுத்து கேஸ் விலையை உயர்த்தியது அதானி நிறுவனம். தொழிற்சாலைகளுக்கான எல்.என்.ஜி. கேஸ் விலை இருமடங்கு உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி.
பெரு நாட்டின் மெத்தை தொழிற்சாலையில் பயங்கர தீ. நெருப்பு மண்டலம் போன்ற தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் தீவிரம்.


வெல்லம் கொடுத்துக் கொல்லும் பாஜக!

இந்திய அரசியல் சாசனம் போற்றிப் பாது காக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இன்று மிகப் பெரிய ஆபத்து வந்துள்ளது. 

அது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதில் மட்டும் இல்லை; மாநி லக் கட்சிகளை மெல்ல அழித்து ‘ஒரே நாடு,  ஒரே கட்சி’ என்ற ஒற்றை அதிகார மையத்தை நோக்கி நகரும் பாரதிய ஜனதா கட்சியின் கபளீகர அரசியலில் ஒளிந்து கிடக்கிறது.

தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு, “வெல்லம் கொடுத்துக் கொல்லுதல்”என்று. அதற்கேற்ப பாஜகவினர் தொடக்கத்தில் ஒரு மாநிலக் கட்சியுடன் பணிவாகக் கூட்டணி அமைப்பார்கள். 

அந்த கூட்டணி மூலம் மாநி லத்தின் அரசியல் களத்தை அறிந்துகொள் வார்கள். பின்னர் அந்த மாநிலக் கட்சியின் வாக்கு வங்கியைத் தங்களது சித்தாந்தத்தால் மெல்ல அபகரிப்பார்கள்.

இறுதியாக, அந்த மாநி லக் கட்சியின் எம்.எல்.ஏ-க்களைப் பண பலத்தா லும் அதிகார மிரட்டலாலும் விலைக்கு வாங்கி, கூட்டணிக் கட்சியையே காலி செய்து, அந்த இடத்தில் தாமரையை ‘மலரச்’ செய்வார்கள்.

தற்போது பீகாரில் நிதிஷ் குமாருக்கு எதி ராக நடக்கும் நகர்வுகள் இதற்குச் சாட்சி. பல ஆண்டுகளாக பீகாரின் முகமாக இருந்த நிதிஷ் குமாரை முதல்வர் பதவியிலிருந்து அகற்றி, அவரைச் செயலற்றவராக்கும் முயற்சிகள் நடந்துள்ளன.

 நிதிஷ் குமாரின் ‘ஐக்கிய ஜனதா தளம்’ கட்சியைத் தலைமையற்ற கூடாரமாக்கி,  அந்த இடத்தில் ஆட்சியைப் தன்வசப்படுத்து வதுதான் பாஜகவின் திட்டம்.

இது வெறும் தலைமை மாற்றம் அல்ல; ஒரு மாநிலக் கட்சி யை தின்று செரிக்கும் பாஜகவின் ‘ஆக்டோ பஸ்’ அரசியல்.

ஏற்கெனவே அருணாச்சலப் பிரதேசத்தில் ‘அருணாச்சல் மக்கள் கட்சி’யின் 43 எம்.எல்.ஏ-க் களை விழுங்கி, அக்கட்சியையே பாஜகவாக மாற்றியது. 

இதேபோல் சிக்கிமில் 25 ஆண்டு கள் ஆட்சி செய்த ‘சிக்கிம் ஜனநாயக முன்னணி’ யின் 10 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி அந்தக் கட்சியைச் சீர்குலைத்தது. மகாராஷ்டி ராவில் நீண்ட கால கூட்டாளியான சிவசேனா வை உடைத்துச் சின்னத்தையே அபகரித்ததும், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் சிறிய கட்சித் தலைவர்களை விழுங்கி அரியணை ஏறியதும் பாஜகவின் அதிகாரப் பசிக்குச் சான்றுகள். 

ஹரி யானாவில் பன்சிலாலின் ஹரியானா விகாஸ் கட்சியும் பாஜகவின் வளர்ச்சிக்கு இரையானது. 

மொத்தத் தில் மாநிலக் கட்சிகளை ஏணியாகப் பயன் படுத்தி, ஏறிய பிறகு அந்த ஏணியையே தீயிட்டுக்  கொளுத்துவதுதான் பாஜகவின் பாணி.

இந்த ஆபத்தான அரசியல் சூழலில், தமிழ கத்தில் அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக, இன்று தனது தனித்துவத்தை இழந்து பாஜகவின் நிழலில் தஞ்சம் புகுந்திருப்பது தற்கொலைக்குச் சமமானது. 

அதிமுக தொண்டர்கள் இப்போதாவது புரிந்து கொண்டால் சரி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை