விலக நேரும்?

  • அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நீடிப்பதால், தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியன் ஆயில் நிறுவனம்.வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரபல ஹோட்டல்களில் உணவு வகைகள்,இயங்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளன.
  • ஒரு எல்பிஜி சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தியது மத்திய அரசு. வீட்டிற்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு.
  • சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெங்களூருவில் ஹோட்டல்கள் இன்று முதல் மூடல்.
  • சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • சென்னை மெரினா கடற்கரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு‘ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
  • சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை.
  • மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்தானது மார்ச் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்திருந்த பயணிகள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயணத்தின் தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது ரத்து செய்து முழு பணத்தை திரும்பப் பெறலாம் என அறிவிப்பு.மோடி ட்ரம்ப்புடன் சமரசம் செய்து கொண்டதாக அமெரிக்கர்கள் கூறுவதாகவும், தனக்கு தெரிந்த தகவல்களை வெளிப்படுத்தினால், மோடி ராஜினாமா செய்ய நேரிடும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி.
  • ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. போரால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், ரஷ்ய அதிபருடன் பேசிய நிலையில் ட்ரம்ப் தகவல்.
  • ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தை தடுத்தால், ஈரான் ஒரு நாடாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு 20 மடங்கு வலிமையுடன் தாக்குவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை