கனவுகள் மெய்ப்படும்!

'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற 56 மாணவ, மாணவிகள் யு.பி.எஸ்.சி. தேர்வில் சாதனை.ஊக்கத் தொகையுடன் தமிழ்நாடு அரசு அளித்த பயிற்சியே சாதிக்க உதவியதாக முதலமைச்சருக்கு நன்றி!வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவு.வளைகுடா நாடுகளில் போர்ச் சூழலால் இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதி முடக்கம்; சுமார் 4 லட்சம் டன் அரிசி துறைமுகங்களில் தேக்கம்.19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.115 உயர்வு.எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றம்.வெளியுறவுக் கொள்கையில் ஒன்றிய பாஜக அரசு சமரசம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அனுமதி, இந்தியா வந்த ஈரான் போர்க் கப்பலை தாக்கிய விவகாரங்களில் அமைதி ஏன் எனக் கேள்வி.அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அம்ச தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.7 லட்சம் வீடுகள் வீடுகள் கட்டித் தரப்படும், அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும் என உறுதி.கோழிக்கோடு - வயநாடு இடையே தற்போது உள்ள மலை வழிச்சாலையில் நிலச்சரிவு அச்சுறுத்தல் இருப்பதால் ரூ.2135 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் 8.7 கி.மீ நீள சுரங்கப் பாதை.கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இத்திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். 4 ஆண்டுகளில் பணியை முடிக்க இலக்கு



"தமிழ்நாடு 2030 கனவுகள்மெய்ப்படும்"

ஸ்டாலின் வெளியிட்ட 14 அம்ச அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-க்குள் தமிழகத்தை கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் உட்கட்டமைப்பில் முதன்மை மாநிலமாக மாற்றும் 14 அம்சங்களைக் கொண்ட 'சமத்துவமும் வளர்ச்சியும் இணைந்த தொலைநோக்குத் திட்டத்தை' அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய மைல்கல்லாக தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி மார்ச் 6 அன்று அமைந்தது.


கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை அடிக்கோடிட்டுக் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றும் 14 முக்கிய அம்சங்கள் கொண்ட விரிவான செயல்திட்டத்தை முன்வைத்துள்ளார்.

எளிய மக்களின் அடிப்படைத் தேவையாக இருக்கும் வீட்டு வசதியை உறுதி செய்வதில் இத்திட்டம் பெரும் கவனம் செலுத்துகிறது. 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 5 லட்சம் மற்றும் நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன.


குறிப்பாக, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பங்கள் அனைவருக்கும் 2030-க்குள் வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுமட்டுமன்றி, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தேவையான இடங்களில் புதிய விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

தமிழக இளைஞர்களை உலகத்தரம் வாய்ந்தவர்களாக மாற்றும் நோக்கில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

'நான் முதல்வன் 2.0' திட்டத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. உயர்கல்விக்காக அண்ணல் அம்பேத்கர் அயலகத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.


தமிழகத்தின் பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல, சுமார் 50 லட்சம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதே அரசின் முதன்மை இலக்காகும்.


தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதியை 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதுடன், மாவட்டம் தோறும் நவீன தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க பன்னாட்டு கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

ஜவுளி, தோல் மற்றும் கைத்தறித் துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்.


விவசாயத் துறையில் தன்னிறைவு அடைய, நிகர சாகுபடி பரப்பை 50 லட்சம் ஏக்கராக உயர்த்தவும், உணவுப்பொருள் உற்பத்தியை 125 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும். அதேபோல், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், தினசரி 4.5 கோடி லிட்டர் பால் உற்பத்தி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கிராமப்புறங்களை நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளுடன் கூடிய பொருளாதார மையங்களாக மாற்ற 'உத்தமர் காந்தி மாதிரி கிராமத் திட்டம்' முதற்கட்டமாக 10 ஊராட்சிகளில் தொடங்கப்பட உள்ளது. மாநகராட்சிகளில் நவீன வடிகால் வசதிகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் கலை கலாச்சார மையங்கள் அமைக்கப்படும். மக்கள் நல்வாழ்வைப் பொறுத்தவரை, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய்களைக் கண்டறிய சிறப்பு முகாம்களும், மனநல ஆலோசனைகளுக்காகத் தனி மையங்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும்.


முடிவாக, தமிழகத்தின் ஆன்மீகச் சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரைச் சாலைகளை மேம்படுத்துவதுடன், மாநிலம் முழுவதையும் ஒரு 'பெரிய சமத்துவபுரமாக' மாற்றுவதே தனது இறுதி இலக்கு என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


பல்வேறு நிதி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இந்த தொலைநோக்குத் திட்டங்கள் தமிழ்நாட்டை 2030-க்குள் ஒரு பொற்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.


தமிழக தேர்தல் நிலவரம்!

தி.மு.க சார்பில் தேர்தல் களத்தில் நிற்க போட்டா போட்டி: வரலாறு காணாத வகையில் அதிகம் பேர் விருப்ப மனு

விருப்ப மனுவை தாக்கல் செய்ய நேற்று (மார்ச் 6)த கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 


சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்ய நேற்று (மார்ச் 6) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 15000-க்கு அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இருக்கும் என்.டி.ஏ கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


பிரதமர் மோடி அடுத்த சில வாரங்களில் மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே அரசியல் கட்சிகள் பலவும், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனுக்களை சமீபத்தில் விநியோகம் செய்தது. இந்த மனுவை தாக்கல் செய்ய கடைசி நாளும் நிர்ணையம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தி.மு.க. சார்பில் போட்டியிட, விரும்புபவர்களுக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது. இந்த விருப்ப மனுவை தாக்கல் செய்ய நேற்று (மார்ச் 6)த கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 


இந்த விண்ணப்ஙகளில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தங்கள் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, கட்சி நிர்வாகிகள் மட்டும் 1,473 விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.


ஸ்டாலின் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் மட்டுமே கட்சிக்கு சுமார் ரூ. 3.68 கோடி வருவாய் கிடைத்துள்ளது.


பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கி மார்ச் 6-ம் தேதி வரை நடைபெற்ற இந்த நடைமுறையில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 15,372 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த அளப்பரிய வரவேற்பு, தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்து "திராவிட மாடல் 2.0" அரசாங்கத்தை அமைக்கும் என்ற தொண்டர்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகக் கட்சி கூறியுள்ளது. விருப்ப மனு விண்ணப்பக் கட்டணங்கள்,பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000-ம் பெண்கள் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ. 15,000 நிர்ணையம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை