மரணவியாபாரியும்,மவுனகுருவும்!
55 பேருக்கு உதவிய 'நான் முதல்வன்'
தமிழ்நாட்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 60 பேரில் 55 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவர்.
யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச். 6) வெளியானது.
இதில், அகில இந்திய அளவில், மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே 2-வது இடத்தையும், ராஜா மொய்தீன் 7-வது இடத்தையும் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்கள் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பெற்றவர்களாவர்.
சுமார் பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு 'நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 55 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களில் 39 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்று, மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வந்தவர்கள்.
சென்ற ஆண்டு 'நான் முதல்வன்' திட்டத்தின் உதவியுடன் தமிழகத்தில் 57 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 60-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அகில இந்திய அளவில் 2-வது இடத்தை பிடித்த ராஜேஸ்வரி கடந்த எட்டு ஆண்டுகளாக யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
மேலும் தனது 6-வது முயற்சியிலேயே அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும், இவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.
தொடர்ந்து, 7-வது இடத்தை பிடித்த ராஜா மொய்தீன் 3-வது முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
.
மவுன(விஸ்வ)குருவும -சாமுவேல்ராஜ்
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த ‘அறம்’ திரைப்படத்தில் ஒரு குழந்தை யின் உயிரைக் காக்க ஒட்டுமொத்த அரசு நிர்வா கமும், மாவட்ட ஆட்சித் தலைவரும் துடித்ததை நாம் திரையில் கண்டு நெகிழ்ந்தோம்.
ஒரு குழந்தையின் உயிர் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அந்தப் படம் உணர்த்தியது
ஆனால், நிஜ உலகில் இன்று ஈரான் நாட்டில் 175-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் சடலங்கள் வரி சையாகக் கிடத்தப்பட்டிருக்கும் கோரக் காட்சியை நாம் பார்க்கிறோம்.அந்தப் பிஞ்சுகளின் சடலங்கள் மீது ஒரு சிறு மலரும், அக்குழந்தையின் புகைப்படமும் வைக்கப்பட்டிருக்க, ஒட்டுமொத்த ஈரான் மக்களும் அழுது கதறுவது கல்நெஞ்சையும் கரைக்கக்கூடியது.
இத்தகைய கொடூரமான படுகொலைகளை நடத்திய அமெரிக்காவோ அல்லது அதன் நிரந்தரக் கூட்டாளி யான இஸ்ரேலோ இதுவரை பெயரளவிற்குக் கூட மன்னிப்புக் கேட்கவில்லை.
நீண்டகாலமாக அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பில் இருந்த இந்தியா போன்ற நாடுகள் கூட, இந்த மனிதாபிமான மற்ற செயல்களைக் கண்டிக்க முன்வராதது வேதனை யளிக்கிறது.
அமெரிக்காவின் இந்த வன்முறைப் போக்கு என்பது டொனால்டு டிரம்ப் என்ற ஒரு தனிநபரின் கண்மூடித்தனமான மூர்க்கத்தனம் மட்டுமல்ல; இது அந்த நாட்டின் தொடர்ச்சியான ஏகாதிபத்தியக் கொள்கை.
1945-இல் இரண்டாம் உலக போருக்குப் பிறகு உலக முதலாளித்துவ ஏகாதிபத்தியத் தலைமை பிரிட்டனிடமிருந்து அமெரிக்காவிற்கு மாறியது முதல், இன்று வரை அமெரிக்கா சுமார் 287 போர்களை உலக நாடுகள் மீது திணித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தப் படையெடுப்புகளின் மூலம் இதுவரை உல கெங்கிலும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
மேலும், 36 நாடுகளில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை அமெரிக்கா கவிழ்த்து, தனக்குச் சாதகமான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 100-க்கும் மேற்பட்ட இறையாண்மை கொண்ட நாடுகளின் தேர்தல் ஆணையங்களை எங்கோ இருக்கும் அமெ ரிக்கா தனது பிடியில் வைத்து ஆட்டிப்படைக்கிறது. உல களவில் 36 நாடுகளின் ஜனாதிபதிகளை அமெரிக்கா படுகொலை செய்திருப்பது அதன் ஆதிக்க வெறிக்குச் சான்றாகும்.
போர்களின் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 1,01,000 பேர் கொல்லப்படுகிறார்கள் என்று துல்லியமான கணக்குகள் சொல்கின்றன. ஆனால், போரை விடவும் கொடூரமானவை அமெரிக்கா பிற நாடுகளின் மீது விதிக்கும் பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகள் ஆகும்.
இத்தகைய தடைகளால் மட்டும் ஆண்டுக்கு சுமார் ஐந்தரை லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு கொடுமைக ளுக்குப் பின்னால் இருப்பது அமெரிக்காவின் ஏகாதி பத்திய லாப வேட்டை மட்டுமே.
உலகில் ராணுவத் தள வாடங்களை உற்பத்தி செய்யும் மிக முக்கியமான 100 பெரும் நிறுவனங்களில் 46 நிறுவனங்கள் அமெரிக்கா வில்தான் உள்ளன. இந்த ராணுவத் தளவாட நிறுவ னங்களின் கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு ஓயாமல் போர் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வாறு போர் நடந்தால் மட்டுமே ஆயுதங்களை விற்க முடியும் என்பதால், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டில் இருக்கிற பெருமுதலாளிகளின் லாபத்திற்காக இந்த யுத்தங்களை அமெரிக்கா உலக நாடுகள் மீது திணித்து வருகிறது.
அமெரிக்காவின் கொள்கைகள் ஒவ்வொன்றும் பிற நாடுகளை ஒடுக்கி தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
1823-இல் அவர்கள் உருவாக்கிய ‘மன்றோ கோட்பாடு’ அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவிற்கு எதிரிகளே இருக்கக்கூடாது என்று தீர்மானித்தது.
1992-இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கா உருவாக்கிய புதிய பாதுகாப்புக் கொள்கை, இனி உலகத்தில் ரஷ்யாவைப் போன்ற ஒரு எதிரி மீண்டும் உருவாகிவிடவே கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தது.இதன் தொடர்ச்சியாக, கடந்த 2025-ஆம் ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய பாதுகாப்பு ஒப்பந்தம், அமெரிக்காவின் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாகத் தெரியும் எந்த வொரு நாட்டையும் தொடக்கத்திலேயே அழித்துவிட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
இதன் ஒரு பகுதி யாகவே, கடந்த ஜனவரி 3-ஆம் தேதி வெனிசுலா நாட்டிற்குள் புகுந்து, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கடத்திச் சென்று அமெரிக்கச் சிறையில் அடைத்துள்ள எதேச்சதிகாரச் செயலை அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நம்முடைய கிராமங்கள் தோறும் வீதி வீதியாகப் போராடிய வீரம் செறிந்த பாரம்பரியம் கொண்ட நாடு இந்தியா. ஆனால், இன்று ஒன்றிய பாஜக அரசு அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் இளைய கூட்டாளியாக செயல்பட்டு வருவது வருத்தத்திற்குரியது.
ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீதான இத்தகைய கொடூரமான தாக்குதல்கள் குறித்து இந்திய அரசாங்கமோ அல்லது ‘விஸ்வகுரு’ என்று சொல்லிக்கொள்ளும் பிரதமரோ வாய் திறக்க மறுப்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் அச்சத் தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
அமெ ரிக்கா தனது நாட்டின் நாடாளுமன்ற ஒப்புதலைக் கூடப் பெறாமல், வெறும் டிவிட்டர் (X) பதிவின் மூலம் ஈரான் மீது போர் தொடுக்க உத்தரவிடும் அளவிற்கு எதேச்சதிகாரமாக மாறியுள்ளது.
சர்வதேசச் சட்டங்க ளையும் தனது உள்நாட்டுச் சட்டங்களையும் மதிக்காத இந்த அமெரிக்கப் போர்வெறிக்கு எதிராக இந்திய மக்கள் அனைவரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். மோடியின் கருத்து என்பது இந்திய மக்களின் கருத்தல்ல.












