இந்திய சமையல் வாயுவை முடக்கிய ஜலசந்தி




ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்!

strait of hormuz 1

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்திற்கும் இந்தியாவில் எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் என்ன காரணம்?

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 31.3 மில்லியன் டன் எல்.பி.ஜி. தேவைப்படுகிறது. 

 இதில் 87 சதவிகிதம் வீட்டு பயன்பாடாக உள்ளது.  13 சதவிகிதம் வணிக பயன்பாடு.  தேவைப்படும் எல்.பி.ஜி.யில் 62 சதவிகிதம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.  

hormuz iran

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் 80ல் இருந்து 90 சதவிகித இறக்குமதி நடந்து வந்தது.  தற்போது போர் காரணமாக இந்த ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் அதன் வழியாக வரவேண்டிய எல்.பி.ஜி. கப்பல்கள் இந்தியாவுக்கு வரமுடியாத நிலை இருக்கிறது.

 இதனால்தான் எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது நாட்டையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.

சென்னை எண்ணூர் இன்டேன் பாட்டிலிங் பிளாண்டில் இருந்து சென்னைக்கு வழக்கமாக 130 லாரிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 80 லாரிகளில் மட்டுமே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. 

இதில் வேறு இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுத்தம்!

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியை பாதித்துள்ளது.

சதீஷ் கோயல் கூறுகையில், துறைமுகங்களில் 181,400-226,800 டன் அரிசி தேக்கமடைந்துள்ளது.


அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் இந்தியாவின் விவசாய ஏற்றுமதியை பாதித்துள்ளது.

பாஸ்மதி அரிசி தேக்கம்

அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அந்நாடுகளுக்கு பாசுமதி அரிசியை அனுப்ப கப்பல்கள் கிடைப்பதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக அனைத்து இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கப்பல் போக்குவரத்தில் அதிகரித்துவரும் நெருக்கடி காரணமாக, இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் கிட்டத்தட்ட 181,400 முதல் 226,800 டன்கள் வரையிலான பாசுமதி அரிசி தேக்கமடைந்துள்ளது என அச்சங்கத்தின் தலைவர் சதீஷ் கோயல் புளூம்பெர்க்கிடம் கூறினார்.

மேலும், தற்போதைய சூழலில் கப்பல்களை முன்பதிவு செய்வது மிகவும் கடினமாகிவிட்டதாகவும் மார்ச் 2ஆம் தேதி அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.


துறைமுகங்களில் அரிசியைத் தேக்கி வைப்பதற்காக ஒதுக்கப்படும் இடங்களின் வாடகையை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இந்தத் தாமதத்தால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் திரு கோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.


உலகின் மிகப்பெரிய பாசுமதி அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. ஈரான், சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகியவை இந்தியாவின் பாஸ்மதி ஏற்றுமதி சந்தையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.


ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் அளவில் வர்த்தகம் நடைபெறும் மிக முக்கியமான சந்தையாக மத்திய கிழக்கு நாடுகள் விளங்குகின்றன.


மத்திய கிழக்கு நாடுகளைத் தொற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சரக்குக் கட்டணம், காப்புறுதிச் செலவு ஆகியவை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


இது ஏற்றுமதியாளர்களின் லாபத்தைக் குறைப்பதோடு, இறக்குமதி செய்யும் நாடுகளில் உணவுப் பொருள்களின் விலையையும் உயர்த்தும் அபாயம் உள்ளது.

அரசாங்கத் தரவுகளின்படி, டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 5.1 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான 4.26 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது வர்த்தக பாதிப்பால், "கிட்டத்தட்ட 4 லட்சம் மெட்ரிக் டன் பாஸ்மதி அரிசி தேக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்பு $1,800 ஆக இருந்த கொள்கலன் செலவுகள் இப்போது கிட்டத்தட்ட $3,800 ஆக உயர்ந்துள்ளது, இது ஏற்றுமதியாளர்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய ஜோர்டான் மீதான தாக்குதல்.

சீன ஊடகம் வெளியிட்ட காணொலி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை