தேர்தல் நி(க)லவரம்.(03/04/26)

# திருச்சியில் நடைபெற்ற தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில், ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் துரைராஜை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.# புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் பிரதமர் இன்று மாலை புதுச்சேரி அஜந்தா சிக்னல் சந்திப்பு-அண்ணா சாலை வரை 1.7 கி.மீ.க்கு சாலை வலம் செல்கிறார். # சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில்,  தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரதோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்பிரதமர் வருகை, அரசியல் கட்சித் தலைவர்களுக்கான பரப்புரை பாதுகாப்பு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பு குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. வரும் 6 மற்றும் 13ம் தேதிகளில் கூடுதலாக 250 கம்பெனி சி.ஆர்.பி.எப் வீரர்கள் தமிழ்நாடு வருகை தர உள்ளனர்# பாஜக தங்களுக்கு ஒரு சீட் வழங்கும் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அக்கட்சிக்கு எந்த இடத்தையும் ஒதுக்காமல் பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;திருமாறனின் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக்கிற்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டு, அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

# பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள்:

மயிலாப்பூரில்: தமிழிசை சௌந்தரராஜன்

கோவை வடக்கில்: வானதி சீனிவாசன்

விளவங்கோட்டில்: விஜயதரணி

மொடக்குறிச்சியில்: கிருத்திகா

அறந்தாங்கியில்: கவிதா

# ஒரு குடும்பத்தில் உறுப்பினர்கள் மாற்றம் ஏற்பட்டிருந்தால் (பிறப்பு, இறப்பு, திருமணம் போன்றவை), அவற்றை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

,# தமிழ்நாட்டில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், எல்.முருகன் தாராபுரம் தொகுதியிலிருந்து அவிநாசி தொகுதிக்கு மாறியுள்ளார். நயினார் நாகேந்திரன் நெல்லையிலிருந்து சாத்தூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் இருந்து கோவை வடக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். ரமேஷ் குளச்சலில் இருந்து பத்மநாபபுரம் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

₹ வந்தவாசியில் ராமதாஸ் - அன்புமணி தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பு வேட்பாளர் முரளி சங்கர் கழுத்தில் இருந்த பா.ம.க துண்டை அகற்ற கோரி முழக்கம் எழுப்பியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி முரளி சங்கர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

₹ பா.ஜ.க வேட்பாளர்களை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை

₹ தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

₹ தேர்தலுக்கு பின் இந்தி கற்றுக் கொண்டு ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக சென்றுவிடுவார் எடப்பாடி பழனிசாமி. எந்த மாநிலம் உங்களுக்கு பிடித்தது என தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள் ஆளுநர் வாய்ப்பை அமித்ஷா உங்களுக்கு தருவார் என்று தி.மு.க எம்.பி கனி மொழி பேசியுள்ளார்.

₹ தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக பெரம்பலூர் தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு பரப்புரை மேற்கொள்வதில் சிறுவர்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆலத்தூர் ஒன்றிய த.வெ.க நிர்வாகி தர்மேந்திரன் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேட்பாளர் ரேவதி பரப்புரையின்போது சிறுவர்களை அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

₹ த.வெ.க லால்குடி தொகுதி வேட்பாளர் கு.பா.கிருஷ்ணனின் மைத்துனர் வீட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

"# பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் இந்த தொகுதிக்கு (மதுரை மத்தி) சம்பந்தமே இல்லாத வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள். நாடு முழுவதும் தெரிந்த வேட்பாளராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு டெல்லியில் கூட ஊட ரசிகர்கள் உள்ளார்கள்." என்று சுந்தர் சி-யை மறைமுகமாக சாடி இருக்கிறார் தி.மு.க எம்பி கனிமொழி.

பாஜகவின் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னதாகவே, வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவரை பாஜகவில் இருந்து நீக்கி, நயினார் நாகேந்திரன் நடவடிக்கை.

₹ அரசியலுக்கு புதிதாக வந்திருக்கும் விஜய், தன்னை அடையாளப்படுத்துவதற்காக மாபெரும் இயக்கங்களை தாக்கி பேசினால் ஒரு அங்கீகாரம் கிடைக்கும், எல்லோரிடமும் பேசும் பொருளாக இருக்கும் என நினைக்கிறார், அதுதான் மார்க்கெட் டெக்னிக்” என்று நடிகையும், அ.தி.மு.க நிர்வாகியுமான கௌதமி கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய