வேதாந்தா 20 பேர்கள் உயிரிழப்பு!
சத்தீஸ்கர் வெடி விபத்து: வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் வேதாந்தா மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பெர் உயிரிழந்தது தொடர்பாக வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சிங்கிதராய் கிராமத்தில் உள்ள அத்தேனா பவர் பிளாண்டின் யூனிட்-1 பகுதியில், பாய்லரில் இருந்து டர்பைனுக்கு உயர் அழுத்த நீராவி கொண்டு செல்லும் எஃகு குழாய் வெடித்ததால் விபத்து ஏற்பட்டது.
மதியம் சுமார் 2.30 மணியளவில் நடந்த இந்த வெடிப்பில் பல தொழிலாளர்கள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகினர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் (பிரிவு 106), இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் அலட்சியம் (பிரிவு 289) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்ட 8 முதல் 10 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மேலும் பொறுப்புக்கூறுவோர் கண்டறியப்பட்டால், அவர்களும் சேர்க்கப்படுவார்கள்,” என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

