எதில் அரசியல்
மலைகள் பாதுகாப்புக்கு ரூ.1950 கோடியில் 2 ரேடார்கள்: பெல் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம்
அசாம் பா.ஜ தேர்தல் அறிக்கை வெளியீடு பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: 2 லட்சம் பேருக்கு அரசு வேலை.
பீகார், அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாணியில் மேற்குவங்க வாக்காளர் பட்டியலிலும் வெளி மாநிலத்தவரை சேர்க்க தேர்தல் ஆணையம் முயற்சி: மம்தா புகார்.
எய்ம்ஸ், மெட்ரோ ரயில் 2 காஸ் சிலிண்டர் இலவசம்: - கேரள பாஜக தேர்தல் அறிக்கை.
இஸ்ரேலியர்களை கொன்றால் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை: புதிய சட்டம் நிறைவேற்றம்.
மத்திய கிழக்கில் விநியோகம் பாதிப்பு ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க போட்டி போடும் ஆசிய நாடுகள்
எதை அரசியலாக்குவது?
சமீபத்திய மனதின் குரல் நிகழ்ச்சியில், மேற்கு ஆசியப் போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, 140 கோடி இந்தியர்கள் நலன் சார்ந்த விவகாரம். இதில் சுயநல அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது என்று மோடி பேசியிருக்கிறார்.
அத்துடன் அரசின் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்; அதன்படியே செயலாற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அரசு என்ன சொல்கிறது? எரிபொருள் தட்டுப் பாடே இல்லை என்கிறது. ஆனால் 60 நாட்க ளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என்றும் சமையல் எரிவாயு அடுத்த ஒரு மாதத்துக்கு பாதிப்பு இருக்காது என்றுமே அமைச்சகம் விளக்கமளித்தது.
பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு நிறு வனங்களுக்கு நிவாரணம். மக்களுக்கு? தனியார் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி விட்டதல்லவா? பிரீமியம் பெட்ரோலுக்கு விலை உயர்த்தப்பட்டதல்லவா?
எரிபொருள் பற்றாக் குறையால் உணவகங்கள், தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றனவே! சிலிண்டர் வரி சைக் காத்திருப்பும், முன்பதிவு நாள் நீட்டிப்பும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதே!
இவற்றைச் சமாளிப்பதற்கு எடுக்கப்படும் அரசின் நடவ டிக்கைகள் நம்பிக்கை ஏற்படும் விதத்தில் இல்லா ததைச் சுட்டிக் காட்டினால், அதை, ‘அரசியலாக் கப்படுகிறது’ என்பதா?
பிரதமர் மோடி தனது உரையில் கொரோனா காலம் எண்ணற்ற சிக்கல்களை விட்டுச் சென்றது என்று கூறும் போதே இயல்பாக அச்சம் தோன்று கிறதே.
அப்போது விளக்கு ஏற்றுங்கள், தட்டு களை தட்டுங்கள் என்றெல்லாம் மோடி ‘அரிய’ ஆலோசனைகளைக் கூறினாரே!
இப்போது அதுபோல சமைக்காமல் உண்பதற்கும் நடந்தே செல்ல தயாராகுங்கள் என்று கூட ஆலோசனை வழங்கினால் என்ன செய்வது என்கிற அச்சம் மக்களுக்கு வருமல்லவா?
நமது உலகளாவிய உறவுகள், பல்வேறு நாடு களின் ஆதரவு மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட வலிமைகளால் இத்தகைய சூழலை துணிவுடன் கையாள்கிறது இந்தியா என்று பெருமை பேசியிருக்கிறார் மோடி.
உண்மையில் இந்தியாவின் சிறப்பம்சமான அணிசேராக் கொள்கையை விட்டுவிலகி அமெ ரிக்க, இஸ்ரேல் சார்பு நடவடிக்கைகளால் இந்தி யாவுக்கு பாதிப்புகள் தானே ஏற்பட்டிருக்கிறது.
ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளிடம் கச்சா எண் ணெய் வாங்குவதை நிறுத்தியதால் நீண்டகால நட் புறவு சேதம்; நாட்டு மக்கள் நலனும் மோசம்.
இதையெல்லாம் எடுத்துக் கூறினால் அரசிய லாக்குவதாகப் பிரதமர் மோடி அங்கலாய்க்கிறார். அமெரிக்க உத்தரவுக்குப் பணிந்து இந்திய நலனைக் காவு கொடுத்ததால் விளைந்த நெருக்கடியை மக்கள் தானே அனுபவிக்கிறார்கள்.
உண்மையை மறைத்திட முடியாது.
தொடர்ந்து புளுகுவதை விடுத்து ஆக்கப் பூர்வ செயல்களைப் பற்றி சிந்தியுங்கள்.










