தேர்தல் நி(க)லவரம்!

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற நிலையில், மார்ச் 30-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனிடையே அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


@ சட்டசபை தேர்தலுக்காக நேற்று (மார்ச் 31) திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், தி.மு.க நிர்வாகிகளுடன் ஏப்ரல் 3-ம் தேதி காணொலி மூலம் அனைத்து தொகுதி நிர்வாகிகள், தேர்தல் வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 


@ என்.டி.ஏ கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க. கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறோம். ஏப்ரல் 3-ந் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். அப்போது மாவட்ட தலைவர்கள் அவரை சந்திக்க உள்ளனர்.


@ மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு சீர்காழி தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டி எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அங்கேயும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி என வைகோ அறிவிப்பு

@ ஏப்ரல் 4 மற்றும் 6 என வேட்புமனு தாக்கல் செய்ய 2 நாட்கள் உள்ளது. இந்த நாட்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என்று கூறியுள்ளார். 


@ சம்மந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க.வின் இல்லத்தரசி திட்டத்தை பார்த்து வயிறு எரிந்து அது ஊழலுக்கான ஆட்சி என கூறுவதாக திருச்சி பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

@ தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உஎன இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், பெரம்பூரில் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2-ந் தேதி திருச்சியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் விஜய், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.


இதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 2-ந் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 


@ புதுச்சேரியில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை செய்ய 19 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் அனுமதி கோரி இருந்த நிலையில் 4 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டதால் வீட்டில் இருந்தே பரப்புரை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

@ ஏப்ரல் 4-ஆம் தேதி காட்டுமன்னார் கோவிலில் வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வி.சி.க வேட்பாளர்கள் 8 பேரும் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


@ பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்து முழு சந்திரமுகியாகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார். அதாவது முழு சங்கியாகவே மாறிவிட்டார். கூட்டணியில் பிரச்சனை இல்லை எனில் எதற்காக பழனிசாமி அவ்வளவு முறை டெல்லிக்கு சென்றார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

@ திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின், 2021 சட்டசபை தேர்தலில்,  திருச்சியில் உள்ள 9 தொகுதிகளையும் திமுக வென்றது. இந்த முறையும் திருச்சியில் 100 சதவீத வெற்றியை தர வேண்டும். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மீண்டும் அமைய வேண்டும் பேசியுள்ளார். 


@ படுகொலை செய்யப்பட்ட பிரபல பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அ.தி.மு.க. கூட்டணியில் திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தைரியமாக பொது வாழ்விற்கு வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அதேநேரம் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. அவருக்கு பாதுகாப்பு தேவை. மேலும் அரசியலிலும் ஒரு இடம் தேவை. அதிமுக  அப்படியொரு இடத்தை அளித்திருந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


 @ மயிலாடுதுறை அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய நிலையில்,  அ.தி.மு.க.வில் உழைப்புக்கு மரியாதை இல்லை. 2016 தேர்தலுக்காக வாங்கிக் கொடுத்த ரூ.25 லட்சம் கடனை திருப்பித் தராமல் ஓ.எஸ்.மணியன் ஏமாற்றிவிட்டார் என சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

@ திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டில் வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அங்கிருந்த டீக்கடை ஒன்றில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், இனிகோ இருதயராஜ் ஆகியோரோடு இணைந்து டீ அருந்தினார்.

@ தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி தலைமையிலான பா.ம.க 18 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


@ வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் கதிர் ஆனந்த் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துரைமுருகனை வரவேற்க சென்ற தொண்டர்கள் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் ஊர்வலம் நடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

@ சட்டசபை தேர்தலுக்காக தே,மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். திருத்தணியில் இன்று மாலை தனது பிரச்சார்தை தொடங்கும் அவர், ஏப்ரல் 21-ந் தேதி விருத்தாச்சலத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.


@ சட்டசபை தேர்தலுக்காக நேற்று (மார்ச் 31) திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தை பகுதியிலும், மாலை 5 மணிக்கு கரூர் ராயனூரில் நடைபெறும் பொதுக்கூடடங்களில் பங்கேற்று தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய