"சித்திர குப்தன்"?
நெல்லுக்கான ஊக்கத் தொகையை நிறுத்துமாறு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதிய ஒன்றிய அரசு. தமிழர் என்ற உணர்வு இருந்தால் இபிஎஸ், பாஜகவை கண்டிப்பாரா என முதலமைச்சர் கேள்வி
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பற்றிய எடப்பாடி விமர்சனத்திற்கு சசிகலா கடும் கண்டனம். பொறுப்புள்ள தலைவர் பால்டாயில் குறித்து பேசலாமா என்று காட்டமாக கேள்வி.
விஜய்யின் வாகனத்தில் ஏறிய ரசிகர்களை ஈவு ஈரக்கமின்றி தாக்கிய பவுன்சர்கள். ஓடிக் கொண்டிருந்த வேனில் தொங்கிய ரசிகர்களின் கைகளை, பூட்ஸ் கால்களால் மிதித்ததால் அதிர்ச்சி.
மகளிர் இடஒதுக்கீடு திருத்தம், தொகுதி மறுவரையை மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு தீவிரம். சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடப்பதால், நடத்தை விதிகளை மீறும் செயல் என காங்கிரஸ் கடும் கண்டனம்.
ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் இன்று பேச்சுவார்த்தை. உடன்பாடு ஏற்படாவிட்டால் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை.
“தமிழ்நாட்டின் சித்ரகுப்தன்"
எடப்பாடிபழனிசாமி"
வேலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் அவர் அளித்த பேட்டியில், “கடந்த 10 நாட்களாக எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் 4 நாட்களில் தேசிய செயராளர் ராஜா, பாண்டா, ஆணி ராஜா உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர்.
செல்லும் இடமெல்லா மக்கள் திமுக கூட்டணிக்கு வெற்றி தேடி தர ஆர்வமாக உள்ளனர். அதற்கு காரணம் முதல்வர் கொண்டுள்ள அரசியல் தான். டெல்லி அணியா, தமிழ்நாடா என முதல்வர் குறிப்பிடுவது மிக ஆழமானது. தமிழ் கூறும் நல் உலகம் எங்களுக்கு வெற்றியை தரும். பாஜகவின் அரசியல் வளையத்துக்குள் தேர்தல் ஆணையம் அடங்கிவிட்டது. இந்த ஜனநாயகத்தை சிதைப்பது ஜனநாயகன் மீதான தாக்குதல் ஆகும். கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு காரணம் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும், இஸ்ரேல் தான் காரணம். இது தெரியாமல் விஜயும், எடப்பாடியும் பேசுகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி ஒரு எதிர்க்கட்சியாக செயல்படாமல் தமிழ்நாட்டின் சித்ரகுப்தனாக மாறிவிட்டார். அவர் போய் விடுவார், இவர் போய் விடுவார் என தனிமனித தாக்குதல் கூடாது. அரசியல் வறட்சி அவரிடம் உள்ளது. இது நல்லது அல்ல. தேர்தல் ஆணையம் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதற்கு முதல்வர் ஒத்துழைத்தார்.
ஆனால் அதே தேர்தல் ஆணையம் பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தலைவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முடியுமா?. மம்தா கூறுவது ஏற்புடையது அல்ல. அவர் சொன்னது அரசியல் பிழை.
கேரளாவில் பாஜக அரசியல் களத்திலேயே இல்லை, காங்கிரஸ் தான் எதிர்க்கட்சி. ஆக அங்குள்ள சூழலை பொறுத்து தான் எங்கள் ஜனநாயக அரசியல் உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி பங்கீடு தொடர்பாக எங்களுக்கு எந்த அழுத்தமும், கட்டளையும் இல்லை. 3 முறை எங்கள் கட்சியில் ஆலோசித்துதான் முடிவு செய்தோம்.
எங்களிடம் உயர்வு, தாழ்வு, அதிகம், குறைவு என நினைக்கவில்லை. பாஜகவை வீழ்த்துவது தான் எங்கள் ஒரே நோக்கம். எங்கும் மாநில அதிகாரிகள் மாற்றப்படுவது தவறானது. தேர்தல் ஆணையம், காவல் துறை, மாநில நிர்வாகம் என எதுவானாலும் சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும்.
பாஜக அதிமுகவின் கையை பிடித்து பதற்ற அரசியலோடு வருகிறது. எக்காரணம் கொண்டும் மக்கள் அதிமுக பாஜக கூட்டணியை ஆதரிக்க மாட்டார்கள். அதிகாரிகள் மாற்றம் தேர்தலை எக்காரணம் கொண்டும் பாதிக்காது. அவர்கள் நோக்கம் நிறைவேறாது.
அதேபோல யாராக இருந்தாலும் தனிமனித தாக்குதல் கூடாது என்பது தான் எங்கள் கருத்து. முதல்வர் அரசியலை தான் பேசுகிறார் ஆனால் தனிமனித தாக்குதல் பேசுவது இல்லை. இதை கீழே இருந்தவர்கள் செய்யலாமே தவிர மோடி, முதல்வர், எடப்பாடி போன்றோர் பேசக்கூடாது.
சகோதரர் விஜய் நேற்றுவரை நடிகர் இன்று அரசியல் தலைவர். அவர் கருத்தை நான் ஏற்கவில்லை, ஆனால் மதிக்கிறேன். இன்னும் அவர் பல அடி நடக்க வேண்டும். முதல் அடியை இப்போது தான் வைத்துள்ளார். அந்த அடியே பிழையாக உள்ளது.
பாசிசமா? பாயாசமா? என்பது. மதச்சாற்பற்ற கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. இந்தியா கூட்டணியில் இடைவெளி இருக்கலாம். அதை கம்யூனிஸ்ட்கள் பில்லப் பண்ணி விடுவோம். சிபிஐ 100 ஆண்டு சிலுவை சுமைக்கும் கட்சி” என்று கூறினார்.
இதையடுத்து, தான் தனிப்பட்ட முறையில் தாக்கப்படுவதாக விஜய் பேசி வருத்தம் தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, “அது முற்றிலும் தவறு,
யாரை பற்றியும் பெண்கள், குழந்தைகள் பற்றி பேசக்கூடாது அது மரபு அல்ல” என மு.வீரபாண்டியன் கூறினார்.
இந்திய வரலாற்றின் இருளடைந்த நாட்கள்
பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி நாமாவளி பாட ஏதாவது ஒரு நாட்கணக்கை கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். இப்போது புதிதாக ஒன்றை கண்டுபிடித்து புல்லரிக்கிறார்கள்.
பிரதமராக உள்ள நரேந்திர மோடி குஜராத் முதல்வராகவும், பின் பிரதமராகவும் பொறுப்பு வகித்து 8,931 நாட்கள் ஆகிறதாம். அதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவங்கி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உட்பட பாஜகவினர் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
அரசின் தலைவராக அவர் 8,931 நாட்கள் ஒரு முறை கூட விடுமுறை எடுக்காமல் உழைத்தி ருக்கிறார் என்று அமித் ஷா கூறியுள்ளார். அவர் பிரதமரான பிறகு உள்நாட்டில் இருந்ததை விட தன்னுடைய கார்ப்பரேட் கூட்டாளிகளின் மூலதன மூதலீட்டிற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நாட்கள் அதிகம். இவை விடு முறை கணக்கில் வருமா என்று தெரியவில்லை.
இவர் குஜராத் மாநில முதல்வராக இருந்த போதுதான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் நர வேட்டையாடப்பட்டார்கள். அப்போதைய பிரத மர் வாஜ்பாய் நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு செல்வேன் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது. இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர் கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் குஜ ராத் வன்முறையைத் தொடர்ந்து அப்போது மோடி அமெரிக்கா வர விசா வழங்க மறுத்தது.
குஜராத் மாடல் என்று கட்டமைக்கப்பட்ட போலியான பிம்பத்தையே மக்களவை தேர்த லுக்கான முதலீடு ஆக்கினார்கள். ஆனால் அந்த குஜராத் மாடல் என்பது போலியானது; புனைந்துரைக்கப்பட்டது என்பது அன்றைக்கே அம்பலமாகிவிட்டது. குஜராத்தை விட பல்வேறு துறைகளில் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பல படிகள் முன்னேறியுள்ளன.
பிரதமராக வந்தபிறகு நரேந்திர மோடி மக்க ளுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட இரு மடங்கு விலை, ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்பதெல்லாம் வெறும் வார்த் தைகளாகவே தேங்கி நிற்கிறது. இவரால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு, கருப்புப் பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் படு தோல்வி அடைந்துவிட்டன.
மறுபுறத்தில் இந்தியாவின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் கூட்டாட்சி போன்ற அரசியல் சட்ட விழுமியங்களின் மீது தாக்குதல் தொடுத்து வரு வதுதான் அரசுத் தலைவர் என்கிற முறையில் இவரது சாதனை. அயல்துறைக் கொள்கை, உள்துறைக் கொள்கை என அனைத்திலும் இந்தியாவை பின் னுக்குத் தள்ளியதுதான் மோடி ஆட்சியின் சாதனை. அரசுத் தலைவர் என்கிற முறையில் இவரது ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்றே வரலாறு பதிவு செய்யும்.
இப்படி மக்கள் கடலில் நீந்தி வந்தால் நேரத்துக்கு வர இயலுமா?









