சில புள்ளி விவரங்கள்
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர்ராவ்வின் மகள் கவிதா தெலுங்கானா ராஷ்டிர சேனா (TRS) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்
வாக்கு சதவீதத்தை உயர்த்தி காட்டிய எஸ்ஐஆர்.
சில புள்ளி விவரங்கள்.
கடந்த 25 ஆண்டுகளாக நடந்த தேர்தலில் எஸ்ஐஆர் பணியால் வாக்கு சதவீதம் உயர்த்தி காட்டப்பட்டுள்ளது.
ஆனால், வாக்களித்தவர்கள் எண்ணிக்கை படுமோசமான நிலையில் உள்ளது என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் எந்த முன்னேற்றமும் இல்லை.
தமிழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்த சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்குப்பதிவு தரவுகளை ஆராய்ந்தால், வாக்குச்சதவீதம் உயர்வுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பது தெளிவாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக 2026ம் ஆண்டு பதிவான 85.13% வாக்குச்சதவீதம், இந்த காலகட்டத்தில் மிக உயர்ந்ததாகும். 2001ம் ஆண்டு தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 4.47 கோடி. இதில் 2.80 கோடி பேர் மட்டுமே வாக்களித்து, 59.07% என்ற குறைந்த வாக்குச்சதவீதம் பதிவு செய்யப்பட்டது.அதன் பின்னர் தேர்தல் விழிப்புணர்வு அதிகரித்ததுடன், வாக்குச்சதவீதமும் உயர்ந்தது.
* 2006 - 70.56% (பதிவான வாக்குகள் +48 லட்சம்)
* 2011- 78.29% (+40 லட்சம்)
மேலும் உள்ள
* 2016- 74.81% (+64 லட்சம்)
* 2021- 73.63% (+26 லட்சம்)
இந்த காலகட்டத்தில், வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
நகர்ப்புற விரிவாக்கம், மக்கள் தொகை உயர்வு, இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் இணைத்தல் போன்றவை இதற்கு காரணங்களாக இருந்தன. ஆனால், 2026 தேர்தல் தரவுகளின்படி வாக்கு சதவீதத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமான 2021ல் இருந்த 6.29 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கை, 2026ல் 5.73 கோடியாக குறைந்துள்ளது. இதனால், சுமார் 74,07,207 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், பதிவான வாக்குகள் 4.58 கோடியில் இருந்து 4.88 கோடியாக உயர்ந்துள்ளன.
எண்ணிக்கையில் வெறும் 30 லட்சம் அதிகரிப்பு இருந்தாலும், வாக்குச்சதவீதம் 73.63%லிருந்து 85.13% ஆக உயர்ந்துள்ளது.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் இரட்டை பதிவுகள் நீக்கம், இறந்தவர்களின் பெயர்கள், நீக்கம், முகவரி மாற்றம் செய்யப்பட்ட பதிவுகள் திருத்தம், போலி அல்லது தவறான பதிவுகள் அகற்றம் போன்ற செயல்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இதன் விளைவாக, மொத்த வாக்காளர் பட்டியல் வாக்காளர் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், உண்மையான வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் உள்ளனர் என்பது முக்கிய கருத்தாக முன்வைக்கப்படுகிறது.
ஆண்டுமொத்தவாக்காளர்கள்பதிவானவாக்குகள்வாக்குசதவீதம்
2001. 4.47 கோடி ல. 2.80 கோடி 59.07%
2006 4.66 கோடி 3.28 கோடி 70.56%
2011 4.71 கோடி 3.68 கோடி 78.29%
2016 5.77 கோடி 4.32 கோடி 74.81%
2021 6.29 கோடி 4.58 கோடி 73.63%
2026 5.73 கோடி 4.88 கோடி 85.13%













