கடிதத்தை வெளியிடுங்கள்!
தூத்துக்குடி பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து முதலமைச்சர் கடும் விமர்சனம். காலில் விழுந்தோமா? காலை வாரினோமா? அடுத்த காலை நோக்கி சென்றோமா? என்பதே பழனிசாமியின் வாழ்க்கைச் சுருக்கம் என பேச்சு.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவங்களை மறைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு.
அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடிமராமத்து பணி மீண்டும் தொடங்கப்படும். விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி.
எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தது குறித்து சசிகலாவே பேசத் தொடங்கிவிட்டார். இனி காலில் விழுந்த புகைப்படத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் கலகலப்பு.
வீடுவீடாக, வீதிவீதியாக, மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள். டீ போட்டுக் கொடுத்தும், பிரியாணி விற்பனை செய்தும் மக்கள் மனங்களைக் கவர முயற்சி.
தேர்தலை கருதி, ஜனநாயகன் படம் திட்டமிட்டு வௌியிடப்பட்டதா என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஐயம். `ஜனநாயகன்' கலக்ஷனை விட எலக்ஷன் முக்கியம் என கருதிவிட்டனரா என்றும் கேள்வி.
பத்து முறை தோல்வியடைந்த பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது. எடப்பாடிக்கு போடும் ஓட்டு, நோட்டாவுக்கு போடும் ஓடைப் போல வீணாகிவிடும் என செங்கோட்டையன் பேச்சு.
உலக நாடுகளில் போர் நடக்கும்போது, இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கு மோடியே காரணம். கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு.
தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார். கனிமொழி முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தவெகவினர் திமுகவில் இணைந்தனர்.
நாமக்கல் பண்ணைகளில் கோடை வெயில் காரணமாக முட்டை உற்பத்தி பாதிப்பு. கடந்த இரண்டு நாட்களில் 50 காசுகள் விலை உயர்வு.போரை எதிர்த்த போப் மீது பாய்ச்சல்...
தன்னை இயேசுவாக பாவித்து டிரம்ப் போட்ட பதிவு
ஈரான் மீதான தாக்குதலுக்கு போப் லியோ கண்டனம் தெரிவித்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரான் மீது 45 நாட்களுக்கு மேலாக அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும்படி பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, 2 வார காலத்திற்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிரந்த போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை சனிக்கிழமை, பாகிஸ்தானில் நடைபெற்றது.
ஆனால், இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஈரான் மீது டிரம்ப் தொடர்ந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்,14-ஆம் கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் லியோ, ஈரானை அழித்துவிடுவேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அரசியல் தலைவர்கள் போரை நிறுத்திவிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போப் லியோவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ட்ரூத் சோஷியலில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "லியோ நன்றியுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் அனைவருக்கும் தெரியும், அவர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு அதிர்ச்சிகரமான ஆச்சரியம்.
அவர் போப் பதவிக்கான எந்தப் பட்டியலிலும் இல்லை, அவர் ஒரு அமெரிக்கர் என்பதாலும், அதிபர் டொனால்ட் ஜே. டிரம்பை சமாளிக்க அதுவே சிறந்த வழி என்று திருச்சபை நினைத்ததாலுமே அவர் அங்கு நியமிக்கப்பட்டார்.
நான் வெள்ளை மாளிகையில் இல்லை என்றால், லியோ வாடிகனில் இருந்திருக்க மாட்டார்.போப் லியோ குற்றச்செயல்களைக் கையாள்வதிலும், அணு ஆயுத விவகாரங்களிலும் பலவீனமாக இருக்கிறார்.
இது எனக்குப் பிடிக்கவில்லை. போப் லியோ, போப்பாக தனது செயல்பாடுகளைச் சீரமைக்க வேண்டும், பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும், தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும்.
அவர் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு சிறந்த போப்பாகச் செயல்பட வேண்டும். இது அவருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதைவிட முக்கியமாக, இது கத்தோலிக்க திருச்சபையைப் பாதிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “தனக்கு போப்பின் மீது பெரிய ஈடுபாடு இல்லை” என்றும் தெரிவித்தார்.
ஒன்றிய அமைச்சர் நிர்மலாக்கு மு.க.ஸ்டாலின் சவால்
'நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு' என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதுதொடராக நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த எக்ஸ் வலைத்தள பதிவில், 'தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்.
ஒன்றிய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும்.
இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.
அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.
தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்ல, மாறாக தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசையே எதிர்பார்க்கிறார்கள்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு சோர்வின்றித் தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'நிர்மலா சீதாராமன் அவர்களே,
"நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள்.
தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?' என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.





