வரையறை மோசடி?
தொகுதி வரையறை மோசடி?
நாட்டில், கடந்த 1951, 1961, 1971 ஆகிய மூன்று ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
1971ல் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 10.10 லட்சம் மக்கள் தொகை என்ற அடிப்படையில் 543 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்டுவரப்பட்டது. அதுதான், இன்றுவரை தொடர்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் - இந்தியாவிலேயே தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், ஒன்றிய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதன் விளைவாக மக்கள்தொகையில் எண்ணிக்கை விகிதாச்சாரம் நமக்கு குறைந்துவிட்டது.
இதை அடிப்படையாக கொண்டு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை முக்கியமாக கருதி 1976-ல் பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் ஆட்சி நடந்தபோது குடும்ப கட்டுப்பாடு போன்ற இந்தியாவுக்குரிய சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாக பின்பற்றக்கூடிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்கிற காரணத்தினால் 2001 வரை, அதாவது அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதே தொகுதிகள்தான் இருக்கவேண்டும் என்று அரசியல் திருத்த சட்டம் 42 கொண்டுவரப்பட்டது.
இது, 2001ம் ஆண்டு வரை 543 தொகுதிகளாக நிலைத்தது.
பின்னர், திமுக அங்கம் வகித்த பாஜ தலைமையிலான ஜனநாயக கூட்டணி, ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர், ‘’மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கட்டும். ஆனால், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை கூட்டாமல், குறைக்காமல் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்து கொள்ளலாம்’’ என்று கேட்டுக்கொண்டதால், அரசியல் திருத்த சட்டம் 84-ன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது 2026-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தொகுதி 543 ஆகத்தான் தொடரும் என்று கொண்டுவரப்பட்டது.
மேலும் உள்ளஆனால், தற்போது தென்மாநில மக்களின்நலனுக்கு எதிரான பாஜ, ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால், தொகுதி மறுவரையறை செய்து, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என அதிரடி வியூகம் வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது.
நாடாளுமன்றத்தில் தற்போது, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.74 சதவீதமாக இருக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் 543 தொகுதிகளை மறுவரையரை செய்கிறபோது, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 18.97 சதவிகிதமாக குறைந்துவிடும்.
மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் ஒற்றை கோரிக்கை.
இதைத்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தேர்தல் வேளையில், சப்தம் இல்லாமல் நாடாளுமன்றத்தை கூட்டி, இதுதொடர்பான மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என ஒன்றிய பாஜ அரசு மாஸ்டர் பிளான் போடுகிறது.
இந்த பேராபத்தை, உச்சக்கட்ட துரோகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். ‘’தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பாஜ அரசின் செயல்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்’’ என தனது கருத்தை ஆழமாக பதிவுசெய்துள்ளார்.
ஒன்றிய அரசின் இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என முதல்வர் குரல் கொடுக்கிறார். அவருக்கு துணை நிற்க வேண்டியது தமிழக மக்களின் கடமை மட்டுமல்ல, தென்னிந்திய மக்களின் கடமையும் ஆகும்.
பக்தர்கள் அல்ல, முட்டாள்கள்';
நர்மதா நதியில் கலந்த 11,000 லிட்டர் பால்... '
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள புனிதமான நர்மதா நதி கரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வின்போது, பக்தர்கள் சுமார் 11,000 லிட்டர் பாலை நதியில் ஊற்றி வினோதமான செயல்பாட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ரூ.7,70,000 மதிப்புள்ள இந்த பால் நேரடியாக நதியில் கலந்ததால், நீரில் உள்ள கரைந்த ஆக்ஸிஜன் (Dissolved Oxygen) அளவு வேகமாக குறையும் அபாயம் உருவாகியுள்ளது.
இதன் விளைவாக, மீன்கள், நத்தைகள், சிறிய நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவை ஆக்ஸிஜன் குறைவால் பெருமளவில் உயிரிழக்கும் சூழல் உருவாகக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பால் போன்ற உயிர்ச்சத்து நிறைந்த பொருட்கள் நீரில் சேரும்போது, அது பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அதிகரித்து, ‘யூட்ரோபிகேஷன்’ (Eutrophication) எனப்படும் நீர் மாசுபாட்டு செயல்முறையை வேகப்படுத்தும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நீர் துர்நாற்றம் வீசுதல், நீர் நிறம் மாறுதல், குடிநீர் தரம் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் தீவிரமடையும் அபாயம் உள்ளது.
மேலும், இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல், சமூக மற்றும் பொருளாதார கோணங்களிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இத்தகைய பெரிய அளவில் உணவுப் பொருட்களை வீணடிப்பது, உணவுக்காக போராடும் ஏழை மக்களின் நிலையை கருத்தில் கொள்ளும் போது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பால் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை தானமாக வழங்குதல், குழந்தைகள் இல்லங்கள் அல்லது முதியோர் இல்லங்களுக்கு உதவுதல் போன்ற மாற்று வழிகள் இருந்தும், அவை பின்பற்றப்படாதது வருத்தமளிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதற்கு மேலாக, இத்தகைய நிகழ்வுகள் நீர்நிலைகளின் நீண்டகால சூழலியல் சமநிலையையும் பாதிக்கும் என்பதால், எதிர்காலத்தில் மீன்பிடி தொழில் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதே நேரத்தில், மத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்களை மதிப்பது அவசியமானதுதான் என்றாலும், அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுசுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டியது காலத்தின் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கடுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் சூழலியல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் பகுத்தறிவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






















