மசோதா நிறைவேறுமா?

பரபரப்பான சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம். மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை ஒன்றாக அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம்.தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு. ஒன்றிய அரசு தந்திரம் செய்வதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு.அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய ஈரான் சென்ற பாகிஸ்தான் குழு. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு.தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தில் வெல்லும் வரை நாம் ஓயக்கூடாது. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ஓரணியில் திரளவும் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஒன்றிய பாஜக அரசுக்கெதிராக அனைவரும் வீடுகளில் இன்று கருப்புக் கொடி ஏற்ற திமுக வேண்டுகோள். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்ல பாஜக முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு. ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு. தென்னிந்தியாவைவிட வடமாநிலங்களின் தொகுதிகள் நான்கு  மடங்கு வரை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல்.Snapchat App நிறுவனத்தில் ஆயிரம் ஊழியர்கள் திடீர் பணி நீக்கம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் நடவடிக்கை.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜக, வஞ்சக எண்ணத்துடன் செயல்படுவதாக அகிலேஷ் யாதவ் கண்டனம். நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்ற பாஜக முயற்சிப்பதாக சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு.
பெண்கள் இடஒதுக்கீடு அல்ல, தொகுதி மறுவரையறைதான் இங்கு பிரச்சனை என எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி. பழனிசாமி ஒருமுறையாவது எதிர்த்து பேசுவாரா அல்லது கடைசி வரை கோழையாக இருக்கப் போகிறாரா என்றும் கேள்வி.
வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிழ்நாட்டில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம். வீதிவீதியாகச் சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டை.
தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில். அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு.
ஒடிசாவில் விடுதி உணவு சாப்பிட்டு உயிரிழந்த 5ம் வகுப்பு மாணவி. நீதி கோரி போராடிய மாணவர்களுக்கும் - காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் குடிசைகள் நிறைந்த பகுதியில் பயங்கர தீ விபத்து. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் மக்கள் அச்சம்.








மசோதா நிறைவேறுமா?

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி பெரும்பான்மையுடன் இருந்தாலும், தொகுதி மறுவரையறை, அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்றும் போது இந்திய அரசியலமைப்பின் 369வது பிரிவின் கீழ் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 சதவீத ஆதரவு அல்லது குறிப்பிட்ட அவையில் உள்ள 3ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.அதன்படி, மக்களவையில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற 364 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 

அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ள நிலையில், 71 ஆதரவு வாக்குகள் தேவைப்படுகின்றன. 

அதேபோல் மாநிலங்களவையில் மொத்தம் 164 ஆதரவு வாக்குகள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வசம் 141 உறுப்பினர்கள் உள்ளனர்.

 இதனால் அங்கும் 23 ஆதரவு வாக்குகளை திரட்ட வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.

பாஜக, ஆணைப்படி ஆனையம்?

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரையும், ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பியையும் மாற்றி பாஜக-வின் கட்டளைகளை நிறைவேற்றி வரும் தேர்தல் ஆணையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல் சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் “தலைமைச் செயலாளர்” “டிஜிபி” ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்!"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை