வடக்கு மட்டுமே போதும்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியுள்ள தீ, டெல்லியை சுட்டெரிக்கும். ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா மீது நள்ளிரவு வரை விவாதம். 3 மசோதாக்கள் மீதும் இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு. தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் என திருமாவளவன் கண்டனம். நாட்டை ஆள்வதில் தமிழ்நாட்டின் பங்கை நீர்த்துப் போகச்செய்ய பாஜக சதி -சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுதொகுதி மறுவரையறையில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உறுதி. தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கை 59-ஆக உயரும் என அமித்ஷா விளக்கம். @ தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என எடப்பாடி பழனிசாமி உறுதி. யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என பாஜக உறுதி அளித்துள்ளதாக, கோவையில் பேச்சு.ஊதுகுழலாக இருந்த பழனி எப்போது பாஜக வில் இணைந்தார்?

பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த வழக்குஉயர் நீதிமன்றம் தள்ளுபடி.
பாஜ தலைவர் நிதின்நபின் உட்பட 16 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக பதவியேற்பு.
ராத்திரி வரைக்கும் நான் தான் முதலமைச்சர்; பணப்பெட்டியை கொடுத்து மலைப்பாம்பு மாதிரி விழுந்து பதவி வாங்கியவர் எடப்பாடி: காலை பிடிச்சி கெஞ்சினார்:- செங்கோட்டையன்
 தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று மாலை வாக்கெடுப்பு.


திரும்பத் திரும்ப பேசுற நீ.திரும்பத் திரும்ப பேசுற நீ.

வடக்கு மட்டுமே போதும்!

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ளார்கள். தொகுதி மறுவரையறை என்ற பெயரால் தமிழ்நாட்டின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டின் உரிமைக்குரல் ஒடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டை புறக்கணிப்பதை சட்டபூர்வமாகவே செய்ய இருக்கிறார்கள். இதற்கு எதிராகத்தான் தனது இறுதி எச்சரிக்கையை முதலமைச்சர் அவர்கள் விடுத்துள்ளார்கள்.

ஏப்ரல் 16 அன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கூடுகிறது.

 அதில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக ஆக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதாவைக் கொண்டு வரப் போகிறார்கள். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவையும் கொண்டு வரப்| போகிறார்கள்.தொகுதி மறுவரையறை என்பது வேறு. இடங்களை அதிகரிப்பது என்பது வேறு. மகளிர் இட ஒதுக்கீடு என்பது வேறு. ஆனால் மூன்றையும் போட்டுக் குழப்பி ஏமாற்றப் பார்க்கிறது பா.ஜ.க. இந்த ஆபத்தைத்தான் முதலமைச்சர் அவர்கள் எச்சரிக்கையாக விடுத்துள்ளார்கள்.

நேற்றைய தினம் முதலமைச்சர் விடுத்த காணொளி காட்சிப் பதிவானது அரசியல் அரங்கில் மிகமிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவே உன்னிப்பாக அதனைக் கவனிக்கிறது.

“தமிழ்நாட்டின் வாசல் வரை பேராபத்து வந்துவிட்டது. ஏப்ரல் 16 நாடாளுமன்றம் கூடுகிறது. தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கும்போது இதனை அவசர அவசரமாகக் கூட்டுகிறார்கள். 

தொகுதி மறுவரையறை செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கச் சொன்னோம். ஆனால் அதனை உடனடியாகச் செய்யப் போகிறது பா.ஜ.க. அரசு. இதனை எப்படிச் செய்யப் போகிறோம் என மாநிலங்களோடு விவாதிக்கவில்லை ஒன்றிய அரசு. மறைத்து மறைத்து செய்வதால் இதில் மாபெரும் ஆபத்து இருக்கலாம். 

வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை அதிகரிப்பது மாதிரியோ, தமிழ்நாட்டுக்கு அரசியல் வலிமையைக் குறைப்பது மாதிரியோ நடந்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் எங்களது எதிர்ப்பைக் காட்டுவோம். நானே களத்துக்கு வந்து போராடுவேன். இது இறுதி எச்சரிக்கை” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

“நீங்கள் பார்க்காத தமிழ்நாட்டை பார்ப்பீர்கள். 1950களில், 60களில் திராவிட முன்னேற்றக் கழகம் எத்தகைய உணர்ச்சிபூர்வமானப் போராட்டங்களை நடத்துமோ அத்தகைய போராட்டங்களை நாங்கள் நடத்துவோம். 

குடும்பம் குடும்பமாக வீதிக்கு வருவோம். பதவி, ஆட்சி, அதிகாரம் எல்லாம் இரண்டாம் கட்டம் தான். கொள்கை தான் முக்கியம். இதை மிரட்டலாக எடுத்துக் கொண்டாலும் கவலையில்லை.” என்று எச்சரித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!

தொடர்ச்சியாகச் செய்யும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களிலும் இதனை விரிவாகப் பேசி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். அந்தளவுக்கு இது மிகமிக முக்கியப் பிரச்சினையாக ஆகி இருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பை 'இந்தியா' கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியது. அதற்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு; 2023ம் ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசிய பேச்சுக்கள் தொகுதி மறுவரையறை செய்யப்போகும் அநீதியை அவரது வாயாலே சொல்ல வைத்தது.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிசாமாபாத்தில் பேசிய பிரதமர் மோடி, "மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென் இந்தியா 100 தொகுதிகள் வரை இழக்க நேரிடும். 

தென் இந்தியா இதனை ஏற்குமா? தென் இந்தியா காங்கிரசை மன்னிக்குமா?” என்றெல்லாம் ஆவேசமாக அப்போது கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி. இன்றைக்கு அதைத்தான் மோடி செய்யப் போகிறார்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதனால் பாதிப்பு அடையாதா? அடையும். அதைத் தான் பா.ஜ.க. செய்யப் போகிறது.

 இதனை நேரடியாகச் செய்தால் பிரச்சினை வரும் என்பதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

மகளிர் இட ஒதுக்கீட்டை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டில் இரட்டை வேடம்போடுவது பா.ஜ.க. தான். மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி விட்டதாக பா.ஜ.க. சொல்லிக் கொள்கிறது.

 அந்தச் சட்டத்தில் என்ன இருக்கிறது என்றால், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு – அதனடிப்படையில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று சொல்லப்பட்டது. அப்படியானால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடியவே பல ஆண்டுகள் ஆகும். அதுவரை இவர்களால் மகளிருக்கான இடஒதுக்கீட்டையும் வழங்க முடியாது.அனைத்து மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு தொகுதிகள் உயரும் என்று சொல்கிறார்கள். அது உண்மையல்ல. மக்கள் தொகை அடிப்படையில்தான் உயர்த்த இருக்கிறார்கள். 

இதுதான் ஆபத்து ஆனது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றும் மாநிலங்களுக்கு இது பேராபத்து ஆகும். இது இந்தியாவின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல.

"தென்னிந்தியாவுக்கும் சிறிய மாநிலங்களுக்கும் அநீதி இழைப்பதாக அமைந்தால் நீண்ட கால அளவில் நமது நாட்டை அது பலவீனப்படுத்தும்” என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் சொல்லி இருப்பது தான் காலப் போக்கில் நடக்கும்.

வடக்கில், ஏழெட்டு மாநிலங்களில் வென்றால் போதும் ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்ற நினைப்போடு பா.ஜ.க. இருக்கிறது. அந்தப் பயத்தோடுதான் இந்தச் சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.தொகுதி மறுவரையறை! 2026 தென்னிந்தியாவின் அதிகாரத்தைப் பறிக்கும் !

தரவுகள் சொல்லும் உண்மை என்ன?


ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள ‘தொகுதி மறுவரையறை மசோதா 2026’ மற்றும் 131-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகியவை இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.


குறிப்பாக, மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்துவது என்ற முடிவும், அதை நடைமுறைப்படுத்தும் முறையும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை அடியோடு சிதைக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.


1. தொகுதி மறுவரையறை: ஒரு வரலாற்றுப் பின்னணி

இந்தியாவில் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் தொகுதிகளின் எல்லைகளை மாற்றிய மைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், 1971-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த நடைமுறை மாநிலங்களுக்கு இடையிலான இடப்பகிர்வில் முடக்கி வைக்கப்பட்டது.


குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல் படுத்தி மக்கள் தொகையைக் குறைத்த மாநிலங்கள், நாடாளுமன்றத்தில் தங்களின் இடங்களை இழந்துவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.

தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பாதுகாப்பை நீக்கிவிட்டு, புதிய கணக்கெடுப் பின் அடிப்படையில் இடங்களைப் பிரிக்க ஒன்றிய அரசு முயல்கிறது.


2. ‘புரோ-ரேட்டா’ வாதமும், சட்ட முரண்பாடுகளும்

இதன் மூலம் தமிழகத்தின் இடங்கள் 39-லிருந்து 59 அல்லது 60 ஆக உயரும் என்பதால் தமிழகத்திற்குப் பாதிப்பில்லை என்பது சங்கிகளின் வாதம்.


ஆனால் சட்ட ரீதியான உண்மை என்ன?


ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவின் வரைவு (Draft Bill), அண்ணாமலையின் இந்த வாதத்தை அடியோடு மறுக்கிறது. அர சியலமைப்புச் சட்டப்பிரிவு 81 (2) (ஏ) இப்போதும், “மாநிலங்களுக்கான இடப்பகிர்வு மக்கள் தொகை விகிதாச் சாரப்படியே (Population Propor tion) இருக்க வேண்டும்” என்றுதான் சொல்கிறது.


மசோதாவின் பிரிவு 8 மற்றும் 9 ஆகியவற்றில், “Latest Census Figures” (சமீபத்திய கணக் கெடுப்புத் தரவுகள்) அடிப்படையி லேயே இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


சட்டத்தில் “மக்கள் தொகை அடிப் படை” என்ற விதியை மாற்றாமல், “சமமான உயர்வு” (Pro-rata) என்பது வெறும் அரசியல் கண் துடைப்பாகவே உள்ளது.


3. தரவுகள் சொல்லும் அதிகார இழப்பு ‘தி இந்து (ஆங்கிலம்) ’

இதழ் ஏப்ரல் 16 அன்று வெளியிட்டுள்ள விரிவான தரவு ஆய்வின்படி, 850 இடங்களை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தால் ஏற்படும் மாற்றங் கள் அதிர்ச்சியளிக்கின்றன: தரவு சொல்லும் அபாயம்: தமிழகத்திற்கு இடங்கள் 39-லிருந்து 50 ஆக உயர்கிறது என்று அண்ணாமலை சொல்வது உண்மைதான். ஆனால், சபையின் மொத்த பலம் 850 ஆக உயரும்போது, தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்து வப் பங்கு 7.1%-லிருந்து 5.9% ஆகக் குறைகிறது.


அதேசமயம் உத்தரப் பிரதேசத்தின் பங்கு 16.5% ஆக உயர்கிறது. அதாவது, தமிழகத்தை விட சுமார் 3 மடங்கு அதிக அதிகாரத்தை உ.பி. பெறுகிறது.


மாநிலங்களின் அதிகார மாற்றம் (850 இடங்கள் அடிப்படையில்) மாநிலம் தற்போதைய இடங்கள் புதிய இடங்கள் விகிதாச்சாரப் பங்கு (மாற்றம்)

(543-இல்) (850-இல்)

தமிழ்நாடு 39 50 7.1% -> 5.9% (குறைவு)

கேரளா 20 23 3.6% -> 2.7% (குறைவு) ஆந்திரப்பிரதேசம் 25 34 4.6% -> 4.0% (குறைவு)

உத்தரப்பிரதேசம் 80 140 14.7% -> 16.5% (உயர்வு)

பீகார் 40 73 7.3% -> 8.5% (உயர்வு) ராஜஸ்தான் 25 48 4.6% -> 5.6% (உயர்வு)


4. மத்திய அமைச்சர்களின் விளக்கங்களும் - எதார்த்தமும்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிப்ரவரி 2025-இல் கோயம்புத்தூரில் பேசுகையில், “தென் னிந்திய மாநிலங்கள் ஒரு இடத்தைக் கூட இழக் காது” என்றார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஏப்ரல் 13, 2026 அன்று பேசுகையில், “நாடெங்கும் விகிதாச்சார அடிப்படையிலேயே இடங்கள் உயரும், தென் மாநிலங்க ளின் கவலைகள் தேவையற்றவை” என்றார்.

இருப்பினும், அமைச்சர்கள் சொல்வதற்கும் தரவுக ளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. தேசிய குடும்ப நல சுகாதாரத் திட்டம்(NFHS-5) தரவுக ளின்படி, தென் மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (TFR) 1.5 முதல் 1.8 என்ற அளவில் உள்ளது.


ஆனால் வட மாநிலங்களில் இது 2.4 முதல் 3.0 வரை உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களுக்குக் கூடுதல் இடங்களை வழங்கும் சட்டப்பிரிவு 81 நடைமுறையில் இருக்கும் வரை, அமைச்சர்களின் வாய்மொழி வாக்குறுதிகளுக்குச் சட்டப்பூர்வ வலு கிடையாது.

5. வடக்கு - தெற்கு அதிகார இடைவெளி (The North-South Divide)

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய அர சியல் அதிகாரத்தின் மையம் வடக்கை நோக்கி நகர்வதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன: இந்தி பேசும் மாநிலங்கள் (Hindi Heartland): தற்போ தைய 38.1% பிரதிநிதித்துவத்திலிருந்து 43.1% ஆக உயர் கிறது. (5 சதவீதப் புள்ளிகள் அதிகரிப்பு).

தென்னிந்திய மாநிலங்கள்: தற்போதைய 24.3%-லிருந்து 20.7% ஆகக் குறைகிறது. (3.6 சதவீதப் புள்ளிகள் இழப்பு). இதன் விளைவாக, இனி இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதை 4 அல்லது 5 வடமாநிலங்கள் மட்டுமே தீர்மானித்துவிட முடியும்.

தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுவிட முடியும். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.


6.நிதி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள்

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்படும்போது ஏற்படும் மற்ற பாதிப்புகள்: 1. நிதியியல் அநீதி: 16-வது நிதிக்குழுவின் (Finan ce Commission) நிதிப் பகிர்வு இந்தப் புதிய மக்கள்தொ கை கணக்கின் அடிப்படையிலேயே அமையும். இதனால் வளர்ச்சி அடைந்த தமிழகத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறையும். 2. ஜனநாயகக் குரல்: நாடாளுமன்றத்தில் விவாதங்க ளின்போது தென் மாநிலங்களின் குரல் எண்ணிக்கையில் சிறுபான்மையாக மாறும். ஒ

ரு மாநிலத்தின் வளர்ச்சி சாத னைகளே அதன் அரசியல் பலவீனமாக மாறும் முரண்பாடு இங்கே நிகழ்கிறது.


7. தீர்வு மற்றும் கோரிக்கைகள்

தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தென் மாநிலத் தலைவர்கள் முன் வைக்கும் தீர்வு: மக்கள் தொகையைக் கட்டுப் படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப் படக் கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான இடப் பகிர்வை (Inter-state allocation) 1971-ஆம் ஆண்டின் விகிதாச்சாரத்திலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும்.


தொகுதிகளை மறுசீரமைக்க வேண்டுமானால், அந்தந்த மாநிலங்க ளுக்குள் மட்டும் (Intra-state) மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லைகளை மாற்றிக் கொள்ளலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை