இரண்டு மணிக்கு ஒருமுறை..!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக தடுத்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் கண்டனம்.பா.ஜ.க,நோக்கம் மகளிர் நலன் அல்ல.தொகுதி வரையறை மூலம் இந்தியாவை துண்டாடுவதுதான் என ஸ்டாலின் குற்றசாட்டு.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதாக கபில் சிபல் குற்றச்சாட்டு. அரசியல் ரீதியான கருத்துகளை வெளியிட்டதற்கு கண்டனம்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை கொண்டு வர எதிர்கட்சிகள் தரப்பு மீண்டும் நோட்டீஸ் அளிக்க திட்டதிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட நோட்டீஸ் இரு அவைகளிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், புதிய நோட்டீஸ் தயாரிப்பது தொடர்பாக, தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ள ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. தேர்தலுக்கு மத்தியிலும் பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பெருமிதமாக பேசியுள்ளார்.
பா.ஜ.கவை தமிழ்நாட்டில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக ஜோசப் விஜயை கட்சி தொடங்க வைத்து அவரை களம் இறக்கி இருக்கிறார்கள். அவருக்கு தனி விமானம் கொடுத்தது, ஒய்.பிரிவு பாதுகாப்பு கொடுத்தது எல்லாம் அமித்ஷா தான். எப்படியாவது கிறிஸ்துவர்களின் வாக்குகளை பிரித்து, பா.ஜ.குவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக சதித்திட்டத்தோடு அந்த கட்சியை தொடங்கியுள்ளார் என்று நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்ட அப்பாவு கூறியுள்ளார்.
இரண்டு மணிக்கு ஒருமுறை..!
தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் எவ்வளவு வாக்குகள் பதிவாகிறது என்பதை 2 மணி நேரத்தில் ஒருமுறை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலட், நாளை மறுநாளுடன் (ஏப்ரல் 21) தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வருகிறது.
தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 9-ந் தேதி புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் வழக்கத்தைவிடவும் அதிக அளவில் வாக்குகள் (89 சதவீதத்திற்கு மேல்) பதிவாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் கேரளாவிலும் வாக்குப்பதிவில் புதிய மாற்றம் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் வாக்குசதவீதம் என்ன என்பதை தெரிந்துகொள்ள மக்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் வரும் 23-ந்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு விவரங்களை அனைவரும் கண்டறியும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக இசிஐ நெட் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதில் 'வோட்டர் டர்ன் அவுட்' என்ற பிரிவில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை, வாக்களித்த மக்களின் எண்ணிக்கையை சதவீதம் அளவில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
அதன்படி. ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் வாக்குப்பதிவு விவரங்களை இந்த செயலி மூலம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை எளிதாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ஏப்ரல் 9-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23-ந் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 29-ந் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,












