நடிகர்விஜய் கட்சி வேட்பாளர் அதிமுக?

 துரோக கூட்டணியான என்.டி.ஏ.வுக்கு பாடம் புகட்டும் நாள்தான் ஏப்ரல் 23 என கரூர் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் சூளுரை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பதே, என்.டி.ஏ. கூட்டணியின் ஒரேநோக்கம் என்றும் குற்றச்சாட்டு.திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாகி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. கடன் வாங்கி யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் என்றும் பேச்சு.

தமிழ்நாட்டில், இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு வேட்புமனு தாக்கல் இன்று மீண்டும் தொடக்கம். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி,  மனுதாக்கல் செய்ய திட்டம்.திருத்தணியில் பரப்புரையை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள்.தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்ததே எடப்பாடி பழனிசாமியின் அனுபவம் என உதயநிதி விமர்சனம். எந்த மிரட்டலுக்கும் பயப்படாத அனுபவம் தன்னுடையது என்றும் காட்டமான பதிலடி.தவெகவினர் சமூக வலைதளங்களில் தவளை போல் கூச்சலிடுவதாக ராஜேந்திர பாலாஜி சாடல். தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து அரசியல் செய்யவில்லை என்றும் விமர்சனம்.சட்டமன்ற தேர்தலில் திமுக 189 இடங்கள் வரை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக, 40 சதவீத வாக்குகளை பெறும் என்றும் லோக்போல் (Lok Pol) கருத்துக் கணிப்பில் தகவல்.சிவகங்கை அருகே எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் பலி. பிரச்சாரத்திற்காக புதுக்கோட்டை செல்லும்போது விபரீதம்.ஜேப்பியார் சிமெண்ட்ஸ் நிறுவனத்தை அபகரித்து 122 கோடி ரூபாய் மோசடி என புகார். ஜேப்பியாரின் பேரன், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு.சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழக விடுதிகளை மூட வேண்டிய சூழல். செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு.

கேரளாவில் வாக்கு சேகரிக்கும் நடிகை நிகிலா விமல். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி மோசடி செய்தது அம்பலம். நள்ளிரவில் 17 லட்சம் வாக்குகள் செலுத்தப்பட்டதாக நிர்மலா சீதாராமனின் கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 3 மாதங்களில் 396 ரூபாய் அதிகரிப்பு. வியாபாரம் பாதிக்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை.
டீசல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தியது ஷெல் இந்தியா நிறுவனம். பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 41 காசுகள் உயர்த்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா விமர்சனம். வரிப் பகிர்வாக வெறும் 15 சதவீதத்தை மட்டுமே தருவதாக குற்றச்சாட்டு.
ஈரான் போர்நிறுத்தம் செய்யக் கோரியதாக ட்ரம்ப் கூறியதில் எந்த உண்மையும் இல்லை. எதிரிகள் தண்டிக்கப்படும் வரை போர் தொடரும் என ஈரான் வெளியுறவு அ மைச்சர் திட்டவட்டம்.
தவெகவின் செய்யாறு வேட்பாளராக போட்டியிடும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகனை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய