புத்தம் சரணம் கச்சாமி!

 ஆதார் அட்டை ஆதாரமே இல்லை!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் – ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண்.

ஆனால், அப்படிப்பட்ட ஆதார் கார்டு இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. இதை ஆதார் கார்டிலேயே குறிப்பிட்டிருப்பார்கள்.

ஆதார் கார்டு என்பது தற்போது இந்தியாவில் இந்த முகவரியில் வசிக்கிறோம் என்பதற்கான அடையாள ஆவணம் மட்டுமே.சரியான ஆவணங்களைக் கொடுத்து வெளிநாட்டினர் கூட இந்தியாவில் ஆதார் கார்டை பெறலாம். ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் – குறிப்பிட்ட அந்த நபர் 182 நாள்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும்.

ஆதார் கார்டை வெறுமனே குடியுரிமைக்கான ஆவணம் இல்லை என்று மட்டும் சொல்லிவிட முடியாது.

ஆதார் கார்டை பிறந்த தேதிக்கான ஆவணமாகவும், உறவுமுறைக்கான ஆவணமாகக் கூட பயன்படுத்த முடியாது.

ஆக மொத்தம் ஆதார் கார்டு என்பது முகவரி மற்றும் அடையாளத்திற்கான ஆவணம் மட்டுமே.









"புத்தம் சரணம் "!

தாய்லாந்திலிருந்து கொழும்பு வந்த புத்த துறவிகள் 22 பேரிடம் இருந்து ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று இரவு (ஏப்ரல் 25) போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு வந்த தகவலின் பேரில், தாய்லாந்தில் இருந்து இலங்கையின் கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த புத்த துறவிகள் 22 பேரின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. 

அதில், ரூ.110 கோடி மதிப்பிலான 110 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


புத்த துறவிகள் கொண்டு வந்த பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளின் ரகசிய அறைகளில் இந்தப் போதைப்பொருட்கள் மறைத்து கடத்தி வரப்பட்டுள்ளது. 


ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 5 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டது.


அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஸ்பான்சர் ஒருவர் அளித்த டிக்கெட்டின் மூலம் இவர்கள் தாய்லாந்தின் பாங்காங் சென்ற தெரிய வந்தது. 


மேலும், புத்த துறவிகளின் செல்போன்களை ஆய்வு செய்த போது, வெளிநாடுகளில் இவர்கள் வழக்கமான உடை அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்துள்ளன.


 இதையடுத்து, புத்த துறவிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.




முப்பது மழலையரைக் காப்பாற்றிய நாய் காளி!

காளி என பெயர் கொண்ட ஒரு தெரு நாய் முப்பது குழந்தைகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. 

சமீபத்தில் தெருநாய்கள் குறித்து மக்களிடையே பய உணர்வோடு கலந்த வெறுப்பு மனநிலை உருவாகி இருந்தாலும் நாய்கள் எப்போதும் மனிதனுக்கு உற்ற நண்பனாகவே இருந்திருக்கின்றன.

அதை நிரூபிக்கும் விதமாக ஒடிசாவில் நடைபெற்ற சம்பவம் அனைவரும் மனதையும் கலங்கச் செய்திருக்கிறது.

 ஒடிசாவின் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தீரகுலா கிராமத்தைச் சேர்ந்த தெரு நாயான காளி முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை விஷப்பாம்பிடம் இருந்து காக்க தனது உயிரையே தியாகம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை காலை சுமார் எட்டு முப்பது மணி அளவில் ஸ்ரீ ஜெகத்நாத் சிசு வித்யா மந்திர் என்ற மழலையர் பள்ளியின் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருந்தனர். 

அப்போது ஒரு விஷப்பாம்பு பள்ளி வளாகத்திற்கு நுழைந்து மாணவர்களின் அருகே ஊர்ந்து சென்று இருந்திருக்கிறது. ஆனால் பாம்பு வருவதை அங்கிருந்த நபர்கள் யாரும் பார்ப்பதற்கு முன்பு காளி என்ற பெயர் கொண்ட அந்த நாய் சுதாரித்து சற்றும் யோசிக்காமல் பாம்பை தாக்க தொடங்கியது.அந்தப் பாம்பை தடுத்து நிறுத்தி குழந்தைகளை நெருங்க விடாமல் காத்த காளி பலமுறை பாம்பிடம் கடிவாங்கி இருக்கிறது.

 ஆனால் இறுதியில் பாம்பை கொன்று மாணவர்களின் உயிரை காத்து தானும் உயிரிழந்திருக்கிறது காளி.

 பாம்பு திரும்பத் திரும்ப கொத்தியபோதும் பின்வாங்காமல்துணிவோடு குழந்தைகளைகாக்க போராடிய சம்பவத்தை அந்த கிராம மக்கள் கண்ணீருடன் நினைவு கொள்கின்றனர்.

தொடர்ச்சியாக வாயில் பாம்பு கொத்தியதால்தான் காளி உயிரிழந்ததாக கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

30 மழலைகளின் உயிரை காப்பாற்றிய காளி என்ற அந்த தெரு நாய்க்கு அந்த கிராம மக்கள் உணர்வுபூர்வமாக இறுதி சடங்குகளை நிறைவேற்றி இருக்கின்றனர்.

 காளியின் உடலை வெள்ளைத்துணியில் மூடி மலர்களால் அலங்கரித்து காளியின் உடலை அடக்கம் செய்திருக்கின்றனர்.

 மேலும் அடக்கம் செய்வதற்கு முன்பு ஒரு சிறிய தள்ளு வண்டியில் காலின் உடலை வைத்து கிராம முழுக்க ஊர்வலமாக சுற்றி வந்திருக்கின்றன. 

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக ஊடகங்களின் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

துப்பாக்கிச்சூடு நாடகமா?


அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. 


இந்த சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பாக, இன்று இரவு துப்பாக்கி சூடு நடக்கும் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறி இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பிரபலமான ஹில்டன் ஹோட்டல் உள்ளது. இங்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்கும் நிருபர்களுக்கு இரவு விருந்து நடந்தது. 

அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, துணை அதிபர் வேன்ஸ் இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர்.


விருந்தின் நடுவே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் பாதுகாவலர்கள் வேகமாக அங்கிருந்து டிரம்ப் மற்றும் அவரது மனைவியை பத்திரமாக அழைத்து சென்றனர். 


தற்போது இரவு விருந்துக்கு முன்பு, வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஆற்றிய உரையின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ”அதிபர் டிரம்ப் சண்டைக்குத் தயாராக இருக்கிறார், நான் உங்களுக்குச் சொல்கிறேன். இன்றிரவு டிரம்பின் உரை வழக்கமான பாணியில் இருக்கும். 

அது வேடிக்கையாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும். 


இன்று இரவு துப்பாக்கிச் சூடு நடக்கும். அனைவரும் இதைக் காணுங்கள், இது மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது.

அதைக் கேட்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,’ என்று நிகழ்ச்சிக்கு முன்பு லீவிட் கூறினார். There will be some shots fired tonight என்று கரோலின் லீவிட் கூறிய கருத்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


 இந்தத் தற்செயல் நிகழ்வின் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

அதிபர் டிரம்பின் உரை, காரசாரமாக இருக்கப் போகிறது என்பதை தெரிவிக்கும் வகையில் கரோலின் இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டது.


எனவே துப்பாக்கிச்சூடு டிரம்ப் செய்த ஏற்பாடு எனவெட்டவெளிச்சமாகிவிட்டது.


இத்தகைய சூழலில், கரோலின் லீவிட் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை