வாக்குப் பதிவு,.!
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு.
ஓராண்டை கடந்தும் நீடிக்கும் நடவடிக்கை இந்திய வான்வௌியில் பாக். விமானங்கள் பறக்க மே 24 வரை தடை நீட்டிப்பு.
152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் 92 சதவீதம் வாக்குப்பதிவு; பல இடங்களில் வன்முறை; பாஜ வேட்பாளருக்கு தர்மஅடி.ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றவர்களிடம் தகராறு செய்த வேட்பாளர் தமிழிசை வாக்காளர்கள் கடும் வாக்குவாதம்
போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரானின் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்தது.இந்திய மாலுமி சிக்கித்தவிப்பு.
வெடி விபத்தில் 14 பேர் பலி திருச்சூர் பூரம் திருவிழாவில் வாணவேடிக்கை நிகழ்ச்சி கைவிடல்.
ஊதிய உயர்வு, போனஸ் உச்ச வரம்பை நீக்க வலியுறுத்தல் 40 ஆயிரம் சாம்சங் தொழிலாளர்கள் தென்கொரியாவில் போராட்டம்: மே 21 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு.
ஓட்டு போட தெரியாமல் முழித்த முன்னாள் அமைச்சர்திண்டுக்கல்சீனிவாசன்.பொத்தானுக்கு பதில் சிகப்பு விளக்கை அமுக்கி ஓட்டு விழவில்லை என புகார் செய்த திண்டுக்கல் சீனிவாசன்.
5 மாநிலசட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை ரூ.25 உயர்த்த திட்டம்.
கேரளத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் தொழிலாளி பலி: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.

இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற 17-ஆவது பொதுத்தேர்தல், வியாழ னன்று நடைபெற்ற நிலையில், மாநிலம் முழுவதும் 33 ஆயிரத்து 133 இடங்களில், 75 ஆயிரத்து 064 வாக்குச் சாவடிகளில், காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கி யது.
ஆரம்பம் முதலே வாக்குகள் விறு விறுப்பாக பதிவாகின. நகர்ப்புறம், கிராமப்புறம் என எல்லா இடங்களி லும் மக்கள் ஆர்வமாக வாக்க ளித்தனர். காலை 10 மணிக்கு உள்ளா கவே சராசரியாக 20 சத விகித வாக்குகள் பதிவானது, வியப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் சராசரியாக 70 சதவிகித வாக்குகள் பதிவாகும். கடந்த 2021 தேர்தலில் 73.63 சத விகித வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், இந்த முறை மாலை 3 மணிக்கே, 70 சத விகித வாக்குகள் என்ற சராசரி வாக்குப்பதிவு அளவு தாண்டியது.
நிறைவாக, மாலை 6 மணி நில வரப்படி 84.51 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.97 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.48 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருந்தன.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வர லாற்றில் 2001-ஆம் ஆண்டு 59.07 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு, 2006-ஆம் ஆண்டு 75.06 சதவிகிதமாகவும், 2011-ஆம் ஆண்டு 78.29 சதவிகிதமாகவும், 2016-ஆம் ஆண்டு 74.81 சதவிகித மாகவும், 2021-ஆம் ஆண்டு 84.80 சதவிகிதமாகவும் இருந்தது. இந்த முறை 84.51 சதவிகிதத்தை எட்டியது.
வட(பாஜகஆளும்)
மாநிலங்களில் லட்சணம் இதுதான்
மகாராஷ்டிராவில் B.A. சிவில் சர்வீசஸ் தேர்வின்போது மாணவர்கள் மொபைல் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள், மாணவர்களிடம் ₹300 வாங்கிக்கொண்டு தேர்வு அறைக்குள் மொபைல் போன்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது.

