தெற்கும்,வடக்கும்
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு சூப்பராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரின் கேள்விக்கு, தம்ப்ஸ் அப் காட்டி மகிழ்ச்சி.
மேற்குவங்க மாநிலத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை. இறுதிக்கட்ட பரப்புரை மம்தா, ராகுல்காந்தி, அமித்ஷா தீவிரம்.
இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு. தேர்வு மையங்கள் எண்ணிக்கை குறித்த விவரம் விரைவில் வெளியாகிறது.
ஈரான் உடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்த ட்ரம்ப். அமெரிக்க தூதர்கள் குழுவின் பாகிஸ்தான் பயணமும் நிறுத்திவைப்பு..
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.23-க்கும், டீசல் 92.81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.கவும் என்னை 24 மணி நேரமும் குறிவைகின்றனர், நான் எதற்கும் அஞ்சமாட்டேன். மேற்குவங்க பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, எம்.பி பதவி பறிப்பு, வழக்குப்பதிவு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலையால் அசவுகரியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டது. திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் ஏற்பட்ட பெரும் பதற்றத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்பை அவசரமாக பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.