வெயில்+பட்டாசு=விபத்து!
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் -அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்.
தமிழ்நாட்டில் நேற்று 14 இடங்களில் 100°Fஐ தாண்டி கொளுத்திய வெயில். மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள். ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்து. இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு கிடைக்கும் என உறுதி.
மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் உச்சகட்ட பரப்புரை.
கலைஞர் சொல்லிதான் தமிழ்நாட்டுல தொழில் தொடங்குனோம் -கலைஞர் நூற்றாண்டு விழாவில் HCL குழும தலைவர் ஷிவ் நாடார்.
கொலைகாரனை கொண்டாடுவதா? - ஆட்டோ ஷங்கருடன் விஜயை ஒப்பிட்ட போஸ் வெங்கட்.
மதுரை பெருங்குடியில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த மகன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தாய் கைது.
டெல்லியில் இருந்து புறப்படும் போது சுவிஸ் விமான இன்ஜினில் தீ: உயிர் தப்பிய 228 பயணிகள்.
”தற்குறிகளின் வேலை?கார் கண்ணாடியை உடைத்துள்ளதைப் பாருங்க...” இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆவேசம்.
விசாகப்பட்டினத்தில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது: 7 தொழிலாளர்கள் படுகாயம்.
அமெரிக்காவின் எப்.பி.ஐ இயக்குனராக இருப்பவர் காஷ் பட்டேல். பணி நேரத்தில் மது அருந்துவதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது மட்டுமல்லாது கல்லூரியில் படித்த காலத்திலேயே மது அருந்தி கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்து இருப்பதை காஷ் பட்டேல் ஒப்புக்கொண்டுள்ளார்.
காஷ் பட்டேல் தனது சிறுவயதில் நண்பர்களுடன் குடிபோதையில் ஊர் சுற்றியது குறித்து அவர் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அரசு வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் வேலை செய்தபோது தன்னைப் பற்றிய விபரங்கள் குறித்து அவர் 2005ம் ஆண்டு எழுதிய கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில், ”நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தபோது நியூயார்க் நகரில் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தோம்.
அப்போது ரோட்டோரம் சிறுநீர் கழித்தபோது பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாகக் கூறி கைது செய்தனர்.காஷ் பட்டேல்இது தவிர 2001ம் ஆண்டுக்கு முன்பு கல்லூரியில் கைப்பந்துப் போட்டியை நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தபோது 21 வயது குறைவான வயதில் மது அருந்தியதாகக் கைது செய்யப்பட்டேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
அதற்காக அபராதம் கட்டியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதேசமயம் இத்தாலியில் அமெரிக்க ஹாக்கி அணியுடன் சேர்ந்து காஷ் பட்டேல் பீர் குடிப்பது போன்ற வீடியோவும் வைரலானது.
அதே போன்று கடந்த வாரம் ‘தி அட்லாண்டிக்’ என்ற பத்திரிகை வெளியிட்ட ஒரு அறிக்கையில், காஷ் படேலின் அதிகப்படியான குடிப்பழக்கமும், அதிகப்படியாக விடுமுறைகள் எடுப்பதும் அவரது ஊழியர்களைக் கவலைக்குள்ளாக்கி இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தது.
மேலும் வாஷிங்டன் மற்றும் லாஸ் வேகாஸில் உள்ள தனியார் கிளப்களில் படேல் வெளிப்படையாக மது அருந்தியதாகவும், இதன் காரணமாக காலை நேரங்களில் நடக்கும் கூட்டங்களை மாற்றி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது காஷ்பட்டேலுக்குச் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் பணி நேரத்தில் மது அருந்துவது கிடையாது என்று பட்டேல் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி அட்லாண்டிக் தீய எண்ணத்துடன் செயல்படுவதாக காஷ் பட்டேல் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெயிலும் பட்டாசும்!
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், விபத்துகளை தவிர்க்க, பட்டாசுகள் தயாரிப்புக்கான ரசாயன மூலப்பொருட்கள் கலவையை, காலை, 6:00 மணியிலிருந்து, 10:00 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்’ என, ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் துவங்க உள்ள நிலையில், பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளில், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த, 19ம் தேதி, விருதுநகர் மாவட்டத்தில், கட்டனார்பட்டி கிராமத்தில், தனியார் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில், 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில், பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு, இருவர் உடல் சிதறி இறந்தனர்.
இத்தகைய விபத்துகளை தடுக்க, வெடி மருந்து துறை என,அழைக்கப்படும், மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து, அதன் அதிகாரிகள் கூறியதாவது:
பட்டாசுகள் தயாரிப்புக்கான, ரசாயன மூலப்பொருட்கள் கலவை பணிகளை, காலை, 6:00 மணிக்கு தொடங்கி, 10:00 மணிக்குள் முடித்து விட வேண்டும்.
காலை, 11:00 மணியில் இருந்து மாலை, 3:00 மணி வரை,பட்டாசு தயாரிப்பு பணிகளில், தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது.
பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்ற வேண்டும்.
பட்டாசுகளை மொத்தமாக வாங்கும் நபர்களின் விபரங்கள், அடையாள அட்டைகளை பெற்று சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
இதை மீறினால், பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும்.

