யார் அந்தத் தற்குறிகள்?

 வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.. காலை 8 மணிக்கு, முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என அறிவிப்புமேற்கு வங்கத்தில் 2-ம் கட்டத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.. நாளை 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுதமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 15 இடங்களில் சதமடித்த வெயில்.. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்புஅனைத்து மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு.. வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகொளுத்தும் வெயிலால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி மும்முரம்.. விலை டன் ஒன்று ரூ.1,300 ஆக குறைந்ததால் உற்பத்தியாளர்கள் கவலைஇந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே  வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.. 8, 284 இந்திய பொருட்களுக்கு இனி நியூசிலாந்தில் வரி விலக்குரஷ்ய அதிபர் புதினுடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி சந்திப்பு.. ஈரானின் நலனுக்காக சாத்தியமான அனைத்தையும் செய்வோம் என புதின் உறுதி






பா.ஜ.கவின் கொள்முதல் அரசியல்

மத்திய பா.ஜ.க. அரசில் ஊழலே இல்லை என்பார்கள் பிரதமரும் மற்ற அமைச்சர்களும்.


ஆனால், பி.எம்.கேர் உள்ளிட்ட நிதி பற்றிய கேள்வி கேட்டால் ஒரு பதிலும் வராது. ரஃபேல் விமானம் தொடர்பான ஊழல் வெளியானால், கொஞ்ச நாளில் அது சம்பந்தமான ஃபைல்கள் காணாமல் போய்விடும். தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் தொடர்பான ஊழல்களும், அந்த ஊழலால் பாலங்களும் சாலைகளும் சிதைந்து போனதும் அப்பட்டமாக வெளியே வந்தாலும் பதிலே சொல்ல மாட்டார்கள்.


மாறாக, பா.ஜ.க. அல்லாத மற்ற கட்சிகளின் மாநில அரசுகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, தன்னுடைய பரிவாரங்களான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை ஏவிவிடுவார்கள். லேட்டஸ்டாக இதில் இறக்கப்பட்டிருப்பது, என்.ஐ.ஏ. அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பா.ஜ.க அரசு வெட்கமோ கூச்சமோ படவேபடாது.


காங்கிரசும் மாநிலக் கட்சிகளும் ஆட்சியிலிருந்த மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தன்னுடைய நேரடி ஆட்சியையோ, கூட்டணி ஆட்சியையோ அமைத்து வந்த பா.ஜ.க. இப்போது எம்.பி.க்களையும் விலைக்கு வாங்கும் வேலையை வாங்கத் தொடங்கியிருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்கள் ஒரே நாளில் பா.ஜ.க. பக்கம் தாவியிருக்கிறார்கள். ஒரு கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ அல்லது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வேறு கட்சிக்குத் தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற அரசியல் சட்டத் திருத்தம் 1984-89ல் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப்பட்டுவிட்டது.


எனினும், ஒரு கட்சியின் மொத்த எம்.எல்.ஏக்கள் அல்லது எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மொத்தமாக வேறு கட்சிக்குத் தாவினால் அது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் வராது. அவர்கள் வேறொரு கட்சியில் ஒன்றாகப் போய்ச் சேர முடியும்.


7 எம்.பி.க்கள் என்பது ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்களில் 3-ல் 2 பங்கு அளவாகும். இவர்களில் 6 பேர் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாபில் பா.ஜ.க.வுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது.


முன்பு, அகாலிதளமும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்திருக்கின்றன. இப்போது அங்கே ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது. மாநில ஆளுங்கட்சியின் எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கேற்ப ராஜ்யசபா எம்.பி.க்களின் எண்ணிக்கை உயரும்.


பஞ்சாபின் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கை 6 என்பதால், கூடுதலாக அந்தக் கட்சியின் மற்றொரு ராஜ்யசபா எம்.பி.யையும் சேர்த்து வெட்கமேயில்லாமல் தன் வசமாக்கியிருக்கிறது யோக்கிய வேடம் போடும் பா.ஜ.க.

ராகவ் சத்தா என்பவர்தான் மற்ற 6 எம்.பி.க்களையும் பா.ஜ.க. பக்கம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.


பா.ஜ.க தரப்பிலிருந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு, அழுத்தம் தரப்பட்ட நிலையில் இந்த கட்சித்தாவல் நடந்துள்ளது. ஆம் ஆத்மி கூடாரம் காலியாகிவிட்டதாக பா.ஜ.க. கொண்டாடிக் கொண்டிருக்கிறது.


பா.ஜ.க.வின் மிரட்டலும், எம்.பி.க்கள் கட்சித் தாவலும் ஜனநாயக விரோதம் என்று ஆம் ஆத்மியும் எதிர்க்கட்சியினரும் விமர்சனம் செய்கின்றன.


ராஜ்யசபா எனும் மாநிலங்களவையின் தலைவராக இருப்பவர் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் கடிதம் அனுப்பியிருக்கிறார்.


கட்சித் தாவிய 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் சஞ்சய் சிங் கடிதத்தில் உள்ள கோரிக்கையாகும். பஞ்சாப் மக்கள் தேர்ந்தெடுத்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் மூலமாகத்தான் இவர்கள் ராஜ்யசபா எம்.பியானார்கள்.


ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பா.ஜ.க.வுக்கு மாறுவது என்பது பஞ்சாப் மக்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் செய்திருக்கக்கூடிய துரோகமாகும். எனவே அவர்கள் எம்.பி. பதவியில் தொடர்ந்து நீடிக்க குடியரசு துணைத் தலைவர் அனுமதிக்கக்கூடாது.


கட்சித்தாவல் தொடர்பான நடவடிக்கையில் அவர்களின் முதன்மைக் கட்சியை இணைக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடாது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மக்களவை சபாநாயகர், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அத்தனை பேரும் நேரடிக் கட்சிக்காரர்கள் போலவே செயல்படுபவதையும் செயல்பட வைக்கப்படுபவதையும் தொடர்ந்து பார்க்க முடிகிறது.


7 எம்.பிக்கள் கட்சித் தாவிய விவகாரத்தில் குடியரசு துணைத் தலைவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதைப் பொறுத்து, பா.ஜ.க.வின் பர்சேஸ் பாலிடிக்ஸ் அம்பலமாகும்.


 யார் அந்தத் தற்குறிகள்?

2026 சட்டமன்றத் தேர்தலில் சமூக வலைத்தளங்களில் அதிகம் புழங்கிய வார்த்தை, ‘தற்குறி’. ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்களின் தொடர் செயல்பாடுகள், தேர்தல் அரசியலுக்கு முற்றிலும் மாறுபாடாக இருந்ததுடன், தேர்தல் நடத்தை விதிகள் என்றாலே என்ன என்று தெரியாத வகையிலும், எஸ்.ஐ.ஆர். (SIR)நடவடிக்கையால் தங்களுடைய வாக்குரிமை பாதுகாக்கப்பட்டதா என்பதைக் கூட தெரிந்துகொள்ளாமலும், மத்திய அரசின் அதிகாரங்கள் என்ன, மாநில அரசின் அதிகாரங்கள் என்ன என்ற தெளிவில்லாமலும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, கட்சியின் தலைவரே பேச்சும் அறிக்கைகளுமே அதே லெவலில் இருந்ததால், ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சியினரை விமர்சிக்க ‘தற்குறி’ என்ற சொல் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டது.


ஒரு தரப்பினரை மட்டும் அப்படிச் சொல்லலாமா? மற்ற கட்சியினர் எல்லாம் அறிவாளிகளா? என்ற கேள்வியுடன், குறிப்பிட்ட கட்சியினரைத் தற்குறிகள் என்று சொன்னால், நானும் தற்குறிதான் என்று குறுக்கே வந்து விழுந்த தற்குறிகளையும் இந்த முறை காண முடிந்தது.


குறிப்பிட்ட அந்தக் கட்சியை ஆதரிக்கிறேன் என்பதால் என்னையும் தற்குறி என்கிறார்கள் என்று கதறிய மேதாவிகளையும் தேர்தல் களம் பார்த்தது. படித்தவர்கள், உயர்ந்த வேலைகளில் இருப்பவர்கள், பாமரர்கள் என்று எல்லா நிலைகளிலும் தற்குறிகள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டதைக் கண் கூடாகப் பார்க்க முடிந்தது.

உண்மைகளையும் நடைமுறைகளையும் அறியாமல் தனக்குத் தெரிந்தது மட்டுமே உண்மை என்று நம்பி, அதன்படி செயல்படுகிறவர்கள்தான் ‘தற்குறி’கள் எனப்படுகிறார்கள். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்துவிடாது.


தங்களுக்குத் தெரியாதவற்றைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்பவர்கள் அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள். தனக்குத் தெரிந்தது மட்டுமே உலகளாவிய உண்மை என்று நினைத்து வாழ்பவர்கள் தற்குறியாகி விடுகிறார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், அறிவுப்பூர்வமாக சிந்தித்து உருவாக்கப்பட்டவை ஸ்மார்ட் போன்கள்.


ஆனால், அதன் மூலமாக கிடைக்கக்கூடிய வசதிகளான வாட்ஸ்ஆப், சோஷியல் மீடியா பதிவுகள், பலதரப்பட்ட வீடியோக்கள் இவை மட்டுமே முழுமையான உலகம் என நம்பி வாழ்கின்ற தற்குறிகளை எல்லாப் பகுதிகளிலும் காண முடியும்.

தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரை, சினிமாவின் பங்கு தவிர்க்க முடியாதது. அரசியல் தலைவர்களுக்கு சினிமா நடிகர்-நடிகைகள் பிரச்சாரம் செய்வது வழக்கம். சினிமா கலைஞர்களுக்கு கூட்டம் கூடுவதும் அதிகமாக இருக்கும். காரணம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் சினிமாதான் ஆக்கிரமித்திருக்கிறது.


முன்பு திரையரங்குக்கு சென்று சினிமா பார்க்க வேண்டியிருந்தது. தற்போது வீட்டுக் கூடத்திற்கே சினிமா வந்துவிட்டது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்ற முன்னறிவிப்புடன், குறிப்பிட்ட நடிகரின் திரைப்படத்தை விடுமுறை நாட்களில் தொடர்ந்து வெளியிடும்போது, வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருக்கும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஈர்க்கப்படுகிறார்கள்.


நடிகரின் ரசிகர்களாகிறார்கள். திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தவர்கள், சின்னத்திரை தொடர்களில் நல்ல வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அந்தப் படத்தில நடிச்ச நடிகர்தானே, நடிகைதானே என்று வீட்டுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கும் ரசிகர்கள் அடையாளம் கண்டு ரசிக்கிறார்கள்.


காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை சின்னத்திரைத் தொடர்களுக்கு ஓய்வில்லை.


குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் டி.வி. பார்த்துக்கொண்டே இருக்க, இளம் வயதினர் மொபைல் போனில் தங்களுக்கான விர்ச்சுவல் உலகத்தில் வாழ்க்கிறார்கள். இரு தரப்பினரின் பெரும்பாலான நேரங்கள் சினிமாக்காரர்கள் தொடர்புடையதாகவே உள்ளது.


இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல், கல்வியில் ஏற்பட்ட மாற்றம், டி.வி.யும் மொபைலுமாக இருக்கும் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள சமூக-பொருளாதார வளர்ச்சி இவை போன்ற எதுவும் அந்தக் குடும்பத்தினருக்கே தெரியாது. தப்பித் தவறிக்கூட அரசியல் பேசும் வாய்ப்பு குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கிடையாது.


அரசியல் (Politics) என்பது மோசமானது என்றும், அரசியல் தலைவர்கள் நாட்டை சீரழிப்பவர்கள் என்றும் அதே சினிமா ஹீரோ நடிக்கும் படம் ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்படும். உள்ளங்கையளவு கைப்பேசித் திரை, டி.வி.யின் சின்னத்திரை, தியேட்டர்களில் உள்ள பெரியதிரை இவற்றைத் தவிர வேறு எதிலும் கவனம் திரும்பாத-கவனம் செலுத்த விரும்பாத தலைமுறையினர், சினிமா ஹீரோ அல்லது ஹீரோயின் பேசும் பஞ்ச் டயலாக்குகளை அப்படியே நம்புகிறார்கள்.


பொதுவாழ்க்கை அனுபவமோ, அரசியல் கட்சிக்கான கட்டமைப்போ இல்லாத ஹீரோ புதுக்கட்சி தொடங்கினால், சமூக வலைத்தளங்கள் மூலமாகவே அதற்கான ஆதரவைத் திரட்ட முடிகிறது.


கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுக்கூடத்திலும், மொபைல் போன் திரைகளிலும் மூழ்கிக் கிடந்தவர்கள் தேர்தல் நேரத்தில் தற்குறிகளாக வெளிப்பட்டிருக்கிறார்கள்.


தற்குறிகளின் எண்ணிக்கையைக் கண்டு

மிரளாமல், தற்குறிகளாக அவர்கள் உருவானதற்கானக் காரணங்களையும், அதற்கு காரணமானவர்களையும் புரிந்துகொண்டால்தான் உண்மையான நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும்.


ஆயிரம் கோடி அமெரிக்கா இழப்பு!

ஈரான் தாக்குதலில் 7 வளைகுடா நாடுகளில் சேதம் அடைந்த ராணுவ முகாம்களைச் சரி செய்ய பல ஆயிரம் கோடி செலவாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட மறுத்ததால், ஈரான் மீது அமெரிக்க - இஸ்​ரேலிய படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தாக்​குதல் நடத்​தின. ஈரானும் பதிலடி​யாக 7 வளை​குடா நாடு​களில் உள்ள அமெ ரிக்க ராணுவ முகாம்​களைக் குறி வைத்து ஏவு​கணை, மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் அமெரிக்க வீரர்​கள் சிலர் இறந்​தனர். அமெரிக்க ராணுவ முகாம்​களில் உள்ள ரேடார், தகவல் தொடர்பு மையங்​கள் போர் விமானங்​கள், ஓடு தளங்​கள் ஆகியவை பலத்த சேதமடைந்​தன.

அமெரிக்​கா​வின் வான் பாதுகாப்​பை​யும் மீறி ஈரானின் பழமை​யான எப்-5 ரக போர் விமானம், அமெரிக்க ராணுவ முகா​முக்​குள் தாக்​குதல் நடத்​தி​யது. ஈரான் தாக்​குதலில் அமெரிக்க ராணுவ முகாம்​களில் ஏற்பட்ட சேத விவரங்களை பென்​டகன் முழு​மையாக பகிர​வில்​லை. இந்த விஷ​யத்​தில் வெளிப்​படைத்​தன்மை இல்​லாத​தால், அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசுக் கட்சி எம்​.பி.க்​களே கோபம் அடைந்​துள்​ளனர்.

சேத விவரங்​களைத் தெரிவிக்க வேண்​டும் என அமெரிக்க எம்​.பி.க்​கள் கோரிக்கை விடுத்து பல வாரங்​கள் ஆகி​யும், அது பற்றி எதை​யும் கூறாமல் கூடு​தலாக 200 பில்​லியன் டாலர் நிதி ஒதுக்க வேண்​டும் என பென்​டகன் கோரிக்கை விடுத்​துள்​ளது. இந்​தாண்டு ராணுவ பட்​ஜெட்​டுக்கு ஏற்கெனவே அமெரிக்க நாடாளு​மன்​றம் 838.5 பில்​லியன் டாலர் அனு​மதி அளித்​திருந்​தது.

ஈரான் போர் தொடங்​கிய ஒரு வாரத்​துக்​குள் 11 பில்​லியன் டாலர் செல​வான​தாக அமெரிக்கா தெரி​வித்​திருந்​தது. இந்நிலை​யில் அமெரிக்க அதி​காரி​கள் சிலர் கூறுகை​யில், ‘‘ஈ​ரான் தாக்​குதலால் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​களில் ஏற்​பட்ட சேதம் ஏற்கெனவே தெரிவிக்​கப்​பட்​டதை​விட மிக அதி​க​மாக உள்ளது. இவற்றை சரிசெய்​ய பல ஆயிரம் கோடி​ செலவாகும்’’ என்​றனர்​.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய