தேர்தல்;அதிகார மாற்றம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
மார்ச் 30ம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணை அமலுக்கு வந்தது.
அதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.இந்த நிலையில் பொறுப்பு டிஜிபியாக இருந்து வந்த வெங்கட்ராமனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிவிட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தத்திற்கு தமிழகத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தயார் நிலை குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் புதிய டிஜிபியை நியமனம் செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
அதன்படி 1992 ஆம் ஆண்டு பிரிவு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர் காவல்துறை டிஜிபியாக நியமிக்கப்படுகிறார். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வர வேண்டும்.
மேலும் இந்த உத்தரவின் அடிப்படையில் பணியில் இருந்து மாற்றம் செய்யப்படும் அதிகாரிக்கு தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணியும் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோர் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார். தேசிய பேரிடர் மேலாண்மை படையில் பணியாற்றியுள்ளார்.
இவர் 1998 ஆம் ஆண்டு கோவை நகர துணை காவல் ஆணையராக இருந்தபோது கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குற்றவாளிகளை வேட்டையாடி கைது செய்தார். அதே ஆண்டில் டெல்லி திகார் சிறையின் கமெண்டிங் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
திகார் சிறையில் செல்போன் நடமாட்டத்தை முதன்முறையாக கட்டுப்படுத்தியதில் அவரது பங்கு முக்கியமானதாகும்.
சிறப்பு காவல் படையில் பங்கேற்று சிறப்பான பணிக்காக பதக்கம் வென்றுள்ளார்.
2003ஆம் ஆண்டு சிபிசிஐடி சூப்பிரண்டாக பணியாற்றிய போது முத்திரைத்தாள் மோசடி வழக்கை திறம்பட விசாரித்தார்.
2005 ஆம் ஆண்டு இவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோதுதான் அந்த மாவட்ட காவல்துறைக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்தது. கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழித்ததில் இவரின் பங்கு முக்கியமானதாகும்.
அதன்படி தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் 1997 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான சஞ்சய் குமார் தாம்பரம் காவல் ஆணையராகவும், 2006 ஆம் ஆண்டு பிரிவு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அபிஷேக் தீக்ஷித் மதுரை காவல் ஆணையராகவும், 2008 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரம்யா பாரதி மேற்கு மண்டல ஐஜி (கோவை) நியமிக்கப்படுகின்றனர்.
இந்த உத்தரவின் மூலம் பணியிலிருந்து மாற்றம் செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணியும் வழங்கப்படக் கூடாது என கூறப்பட்டது.
இதே போல சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக விஷ்ணு மகாராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவுகளை செயல்படுத்தப்பட்டது குறித்து இன்று காலை 11 மணிக்கு தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும் என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சந்தீப் ராய் ரத்தோர் தமிழகத்தின் புதிய டிஜிபி ஆக நேற்று இரவு 8 மணி அளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்றைய தலைப்புச் செய்திகள்..
தமிழ்நாட்டில் உள்ளதால் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் பாஜக, வடமாநிலங்களில் தமிழர்களை இழிவுபடுத்திப் பேசுவதாகவும் கண்டனம்.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீதி வீதியாகச் சென்று உதயநிதி ஸ்டாலின் பரப்புரை. அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என உறுதி.விஜய் வாகனத்தை பின் தொடர்ந்துவந்த கார் மோதி காவலர் படுகாயம். காயமடைந்த காவலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இழுபறி.பா.ஜ.க,உட்கட்சி பூசலால் தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டு அரசியலில் விஜய் ஒரு நீர்க்குமிழி என பெ.சண்முகம் விமர்சனம். தேர்தலுக்குப் பிறகு விஜய் காணாமல் போய் விடுவார் என்றும் பேச்சு.
அதிமுக ஆட்சியை காப்பாற்றித் தந்த தனக்கே சீட் தரப்படவில்லை என முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல். விருப்ப மனு அளித்தபோதும், போட்டியிட விருப்பமா? இல்லையா என்று கேட்கப்படவில்லை என பரபரப்பு பேட்டி.600 கோடி ரூபாய் மோசடி புகாரில் வாணியம்பாடி த.வெ.க. வேட்பாளர்சையது புர்ஹானுதீனுக்கு சம்மன்.
ஊழல் ஒழிப்பு விஜய்க்கு முதல் வெற்றி?
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முதல் முழுமையாக இயங்கும் என அறிவிப்பு. எழும்பூர் நடைமேடைப் பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டதால் மீண்டும் வழக்கமான சேவை.அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது. சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் பரிந்துரையை நிராகரித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
அமெரிக்காவுடன் உடனடியாக ஒப்பந்தம் செய்யாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும். மிக உயரமான பாலத்தை தகர்த்தபின் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.
தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் பேசினார். நாம் கடும் எதிர்ப்பு தெரிவிக்க அங்கேயே மன்னிப்பு கேட்டார்
ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை பாஜகவினர் எப்படியெல்லாம் விளம்பரங்கள் மூலம் இழிவு செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
பூரி ஜெகநாதர் கோயில் கருவூலச் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது, என தமிழர்களை திருடர்களாக சித்தரித்தார்கள்
தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என ஒன்றிய அமைச்சர் சோபா பேசி, பிறகு பிரச்னை ஆனதும் மன்னிப்பு கேட்டார்
மக்கள் தொகை போதாது என கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை நிராகரித்துவிட்டு, உ.பி.யின் ஆக்ரா நகரில் ஆளில்லாமல் மெட்ரோவை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்
-கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
*"அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை; அவர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்.
"நீண்ட காலம் சிறையில் இருப்போரை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு











