கணிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல். அதிகபட்சமாக 169 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் கணிப்பு.
புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கணிப்பு. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவு என கருத்துக் கணிப்பு. ஆட்சியைப் பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 234 பார்வையாளர்கள் நியமனம். வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
கருத்தும் கணிப்புகளும்!
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை வெளியானது.
இதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒவ்வொரு கூட்டணி மற்றும் கட்சிகள் பெறும் இடங்கள் மாற்று வாக்கு சதவிகிதம் பற்றிய கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.பல்வேறு அமைப்புகள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை அல்ல, கடந்த காலங்களில் முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகும்
வாக்குப்பதிவுக்கு/தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை `Exit poll’ என்று குறிப்பிடுவது வழக்கம். Exit என்றால் `வெளியேறுதல்’ என்று பொருள். அந்த வார்த்தையே அந்த கருத்துக்கணிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை கூறிவிடுகிறது.
ஒரு வாக்காளர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர்களிடம் எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார் என்பதை கேட்பார்கள்.
அவர்கள் சொல்ல விரும்பும் பட்சத்தில் அவரின் கருத்து பதிவு செய்யப்படும். இதனை தான் கருத்துக்கணிப்பு என்று அழைக்கிறோம்.
கருத்துக்கணிப்பு நடத்தும் முகமைகள் தங்கள் ஊழியர்களை வாக்குச் சாவடிக்கு வெளியே நிற்க வைக்கின்றன. வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம், `யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்கப்படுகிறது.
பொதுவாக, ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியேறும் ஒவ்வொரு பத்தாவது வாக்காளரிடமும் அல்லது வாக்குச்சாவடி பெரியதாக இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு இருபதாவது வாக்காளரிடமும் கேள்விகள் கேட்கப்படும்.
வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சி வோட்டர், ஆக்சிஸ் மை இந்தியா, சி.என்.எக்ஸ் ஆகியவை இந்தியாவில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் சில முக்கிய முகமைகள் ஆகும்.
தேர்தல் நேரத்தில் பல புதிய நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகள் செய்கின்றன. அவை தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951இன் பிரிவு 126A இன் கீழ் கருத்துக் கணிப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கருத்துக்கணிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின் முக்கிய நோக்கம், தேர்தலில் கருத்துக்கணிப்புகள் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கக் கூடாது என்பதே.
தேர்தல் ஆணையம் அவ்வப்போது கருத்துக்கணிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது. கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான நடைமுறையை இது விளக்குகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகளை வாக்குப்பதிவு நாளில் வெளியிடக் கூடாது என்பது பொதுவான விதி.
தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது முதல் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்து அரை மணிநேரம் ஆகும் வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது.
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
, “2004 தேர்தலில.வாஜ்பேயி அரசு மீண்டும் அமையும் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் கூறப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கருத்துக் கணிப்புகள் பொய்யாயின.
கருத்துக்கணிப்பு செய்யும் முகமைகள் வெவ்வேறு மாதிரி (sampling) அல்லது களப்பணிகளை வெவ்வேறு வழிகளில் செய்வதே இதற்குக் காரணம்.
சில ஏஜென்சிகள் தொலைபேசி வழியாக தரவுகளைச் சேகரிக்கின்றன, மற்றவர்கள் தங்கள் ஊழியர்களை களத்திற்கு அனுப்புகிறார்கள். அதனால் முடிவுகள் மாறுபடலாம்.
1957 இல் இந்தியாவில் இரண்டாவது பொதுத் தேர்தலின் போது, `இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் ஒபினியன்’ தனது முதல் தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது.
அதன் தலைவர் எரிக் டி’கோஸ்டா ஒரு தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தலைமை தாங்கினர், ஆனால் அதை முழுமையாக `எக்ஸிட் போல்’ என்று கூற முடியாது.
அதன்பிறகு, 1980ல், டாக்டர் பிரணாய் ராய் முதல் முறையாக கருத்துக் கணிப்பு நடத்தினார். அவர் 1984 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு நடத்தினார்.
`தூர்தர்ஷன்’ 1996 இல்கருத்துக்கணிப்பை நடத்தியது. இது பத்திரிகையாளர் நளினி சிங் என்பவரால் நடத்தப்பட்டது, ஆனால் களப்பணியாற்றி தரவுகளை சேகரிக்கும் பணியை CSDS ஆய்வு மையம் மேற்கொண்டது.
இதனையடுத்து ஒவ்வொரு தேர்தலின் போதும் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளும் போக்கு தொடர்ந்தது.
ஆனால் முன்பு ஒன்று அல்லது இரண்டு கருத்துக் கணிப்பு முகமைகள் மட்டுமே இருந்தன.
தற்போது டஜன்கணக்கான `எக்ஸிட் போல்’ முடிவுகள் வெளியாகின்றன.
அதில் சில தனது விருப்பத்தை அல்லது பணத்தைப் வாங்கிக்கொண்டு கணிப்பை (?)அறையில் உட்கார்ந்தே வெளியிடுகின்றன.
உச்சத்தில் மின்தேவை!
தமிழகத்தின் தினசரி மின்சார தேவை சரசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின் தேவை அதிகரிகரிக்கும்.
இந்த ஆண்டு கோடைகாலத்துக்கு முன்பாக தமிழகத்தில் அதிகபட்ச மின் தேவை கடந்த 2024ம் ஆண்டு மே 2ம் தேதி 20,830 மெகாவாட்டாகவும், அதிகபட்சம் மின் நுகர்வு 2024ம் ஆண்டு ஏப்.30-ம் தேதி 454.32 மில்லியன் யூனிட்கள் பதிவானது.
தமிழகத்தில் கத்திரி வெயில் வரும் மே 4-ம் தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி பின் இந்த ஏப்ரல் மாதத்திலேயே 3 முறை அதிகபட்ச மின் தேவை மற்றும் மின் நுகர்வு பதிவாகியிருக்கிறது.









