பட்டாசு லாபவெறி பலிகள்!

 தமிழ்நாட்டில் நாளை மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை. வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம்.பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தேர்தல் நடத்தை விதிமீறல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.மோடி வேண்டுமா, ஸ்டாலின் வேண்டுமா என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் ஸ்டாலின் பின்னால் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி.திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்ய சென்னை வந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. 24 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்.தேர்தல் நடத்தை விதி மீறல் 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது நடவடிக்கை.மோடிகிட்ட சொல்லி மசோதாவ கொண்டு வர சொன்னதே நாங்கதான்! எடப்பாடி ஒப்புதல்.தமிழகத்தின் தன்மானத்தை மோடியின் காலில் வைத்த தகுதியில்லாத அடிமை, சினிமா கும்பல் வேணுமா: கல்வி கொடுத்து, மொழி மற்றும் இனம் மானத்தைக் காப்பாற்றிய நம்ம திராவிட மாடல் வேண்டுமா? மக்களுக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி.தமிழ்நாடு மிரட்டல் எப்படி இருக்கும்னு காட்டிவிட்டோம்; வடவர் படையெடுப்பை முறியடிப்போம்! கமல் சூளுரை.தோல்வி உறுதி என ரகசிய சர்வே ரிப்போர்ட்டால் நடிகர் விஜய் அதிர்ச்சி; திருச்சி கிழக்கில் மவுன விரதத்துடன் ரோடுஷோ.கோவில்,கோவிலாக வேண்டுதல்.



பட்டாசு ஆலை பலிகள்!

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கைக்குழந்தை உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

பலர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா விரைந்தார்.


விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ளது வனஜா பட்டாசு ஆலை. இந்த ஆலையில் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில், திடீரென்று ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தகவல்.பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்பட உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். மீட்புப் பணியில் சாத்தூர், விருதுநகர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.


முதற்கட்ட தகவலின்படி, பட்டாசு தயாரிக்கும் மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், ஞாயிற்றுக் கிழமையன்று விடுமுறை நாளாக இருந்தும் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.


இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.


பட்டாசு ஆலை நடத்தும் முதலாளிகள் லாப வெறிக்கு அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கப்படுகின்றன.

விடுமுறை நாளில் நடந்த இந்த விபத்திற்கு ஆலை உரிமையாளர்,கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது இந்த பலிகளை கொலை வழக்காகப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும்.

வெற்றிக்காக கோவில்,கோவிலாக வேண்டுதல்

தில்லியைச் சூழும் தொழிலாளர் எழுச்சி

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிசக்தி சந்தையில் ஏற் பட்டுள்ள அதிர்வுகள், இன்று தில்லியின் எல்லைப் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் அடுப்படியை நேரடியாகப் பாதித்துள்ளன.

 குறிப்பாக, சமையல் எரிவாயு விலையின் அதீத உயர்வு, ஏற்கனவே மிகக் குறைந்த ஊதியத்தில் நசுங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை வீதிக்குக் கொண்டு வந்துள் ளது.உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவின் தொழிற்சாலை மண்டலங்களில் வெடித்துள்ள இந்தப் போராட்டங்கள், ஊதிய உயர்வுக்கான கோரிக்கை மட்டுமல்ல; அது கண்ணியமான வாழ்விற்கான ஒரு பெரும் போராட்டமாகும்.

நொய்டா மற்றும் மானேசர் பகுதிகளில் உள்ள முன்னணி கார் உற்பத்தி மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்கள், தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச ஊதியமாக 20,000 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 சமையல் எரிவாயு வின் விலை 600% வரை உயர்ந்துள்ள நிலை யில், தங்களின் சொற்ப வருமானத்தில் பெரும் பகுதியை எரிபொருளுக்கும், உயர்ந்து வரும் வீட்டு வாடகைக்குமே செலவிட வேண்டிய அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ள னர்.

 தொழிலாளர்களின் இந்த நியாயமான குமுறல்களைச் செவிமடுத்துத் தீர்ப்பதற்குப் பதி லாக, தொழிற்சாலை நிர்வாகங்களும் உ.பி., மற்றும் ஹரியானா பாஜக அரசுகளின் காவல் துறையும் அடக்குமுறையைக் கையாள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சிஐடியு தொழிலாளர் சங்கத் தலைவர்க ளைக் காரணமின்றி வீட்டுக் காவலில் வைப்ப தும், அமைதியாகப் போராடும் தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்து வதும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். 

ஹரியானா அரசு அண் மையில் அறிவித்துள்ள ஊதிய உயர்வு என்பது “யானைப் பசிக்குச் சோளப் பொறி” போல மிகக் குறைவாக இருப்பதே போராட்டங்கள் தீவிரம் அடைய முதன்மைக் காரணமாக உள்ளது.

தொழிலாளர்கள் வெறும் இயந்திரங்கள் அல்ல; அவர்கள் சமூகத்தின் முதுகெலும்புகள். அவர்களுக்கு முறையான மருத்துவ வசதி களோ, உரிய பாதுகாப்பு உபகரணங்களோ வழங் கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில், இப்போராட்டம் ஒரு புதிய பரி மாணத்தை எட்டியுள்ளது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இந்த விவ காரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். 

 தொழிற்சங்கங்களுடன் நேர்மையான முறை யில் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப் பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிப்ப தோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பையும் மருத்துவத் தேவையையும் உறுதி செய்திட வேண்டும்.

 உழைப்பவர்களின் வயிற்றில் அடித்து ஒரு தேசம் ஒருபோதும் வளர்ச்சியை எட்டிவிட முடியாது. தொழிலாளர்களின் போராட்டக் குரல் என்பது வெறும் சத்தம் அல்ல; அது சமூக நீதிக்கான அறைகூவல்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை