தொண்டர்களின் மைன்ட் வாய்ஸ் ?
தமிழ்நாட்டில் விடுமுறைக்குப் பிறகு இன்று 3வது நாளாக வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது; இன்றும் வரும் திங்கள் கிழமையும் மட்டுமே அவகாசம் உள்ளது
பழனிசாமி சொன்னதையும் செய்யமாட்டார், சொந்தமாகவும் செய்ய மாட்டார் என மக்கள் விமர்சிப்பதாக நெல்லை கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு
அதிமுக ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஜோலார்பேட்டை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
அமெரிக்காவின் F35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில், மாயமான விமானியை தேடும் பணியில் அமெரிக்கா இறங்கியுள்ளது
புதுச்சேரி தேர்தல்; காரைக்காலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடக்கம்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் ஒரு சதி.ஐந்து மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன் என ப.சிதம்பரம் கேள்வி.
இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் 
ஏகாதிபத்தியத்தின் இருள்
சர்வதேச அரசியலில் கியூபா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, அது அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஒரு போராட்டத்தின் அடையாளம்.
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா மீது ஏவிவிட்டுள்ள “எரிசக்திப் போர்” அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மிக மோசமாகச் சிதைத்து வருகிறது.
கியூபாவின் தினசரி எரி பொருள் தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே அந்த நாட்டினால் உற்பத்தி செய்ய முடிகிறது.
மீத முள்ள தேவையைப் பூர்த்தி செய்ய அண்டை நாடுகளை நம்பியிருந்த சூழலில், வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியும், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு வரி விதிப்பு மிரட்டல்களை விடுத்தும் கியூபாவுக்குச் செல்லும் எரிபொருள் விநியோகச் சங்கிலியை அமெரிக்கா திட்ட மிட்டுத் துண்டித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், கியூபாவைத் துயரத்தில் தனித்து விடமாட்டோம், தவிக்கவிட மாட்டோம் என்று முழங்கியபடி ரஷ்யா நீட்டியி ருக்கும் உதவிக்கரம் உலக அரங்கில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த மூன்று மாதங்களாக ஒரு சொட்டு எண்ணெய் வரத்து கூட இன்றித் தவித்த கியூபாவின் மாடன்சாஸ் துறைமுகத்திற்கு, அமெரிக்காவின் தடைக ளைத் தகர்த்தெறிந்து ரஷ்யாவின் ‘அனடோலி கொலோட்கின்’ கப்பல் 7,30,000 பேரல் எண்ணெய் யைச் சுமந்து வந்திருப்பது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.
இது சுமார் 1,80,000 பேரல் டீசலை உற்பத்தி செய்யப் போதுமானது. “கியூபா ஒரு முழு மையான முற்றுகைக்குள் தள்ளப்பட்டிருக்கி றது; ஒரு ரஷ்யக் கப்பல் அந்த முற்றுகையை உடைத்துள்ளது.
இரண்டாவது கப்பலும் தற் போது தயாராகிறது” என்று ரஷ்ய எரிசக்தி அமைச்சர் செர்ஜி சிவிலியோவ் கசான் நகரில் கூறியுள்ள வார்த்தைகள், ஓர் உண்மையான தோழமையின் வெளிப்பாடே!
அமெரிக்காவின் இரக்கமற்ற பொருளாதா ரத் தடைகளால் மின்சாரம் இன்றி, உணவு மற்றும் மருந்துகள் இன்றி கியூப மக்கள் தவித்தா லும், அவர்களின் போராட்ட வீரியம் குறைய வில்லை.
தலைநகர் ஹவானாவின் வீதிகளில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் சைக்கிள்க ளிலும், மின்சார ஸ்கூட்டர்களிலும் அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் அணிவகுத்து நின்று, “கியூபா வாழ்க! முற்றுகை ஒழிக!” என்று கர்ஜிப் பது அசாத்தியமானது.
“இங்கே யார் பயப்படுகி றார்கள்? இங்கே யார் சரணடையப் போகிறார் கள்?” என்ற அந்த மக்களின் முழக்கம், பசியைக் காட்டி ஒரு தேசத்தை அடிபணிய வைக்க முடி யாது என்பதை உலகுக்கு உரக்கச் சொல்கிறது.
சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கியூபாவின் இருளைப் போக்க முன்வந்துள்ள ரஷ்யாவின் செயல் பாராட்டுக்குரியது.
உலக வர லாற்றில், அடக்குமுறைகளை விட அறமும் தோழமையுமே இறுதியாக வெல்லும் என்ப தற்கு கியூபாவின் இந்தத் தற்போதைய நிலை ஒரு சிறந்த சான்று. மக்களின் அடிப்படைத் தேவை களான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவத்தை முடக்குவது மனிதத்தன்மையல்ல, அது மனிதா பிமானத்திற்கு எதிரான கொடும் குற்றம்.
எம்ஜிஆர் தொண்டர்களின் மைன்ட் வாய்ஸ் ?
“கண்களை இமை காப்பது போல, தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களை அதிமுக பாதுகாக்கும்” என்று நெக்குருகி நீட்டி முழக்கியிருக்கிறார் முன்னாள் முதல்வர், இந்நாளைய எதிர்க்கட்சித் தலைவர், ஐயா எடப்பாடி பழனிச்சாமி.(மாலை முரசு 31.03.2026).
கூட்டணி என்கிற பெயரில் ஒட்டுமொத்த அதிமுக கட்சியையும் ஆர்எஸ்எஸ்-பாஜக விடம் அடகுவைத்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, வாக்குக் கேட்டு மக்களிடம் வரும்போது மட்டும் வாய்ச்சொல் வீரராகத் தன்னைக் காட்டிக்கொள்ள, என்னவெல்லாமோ பேசிப் பார்த்துக் கொள்கிறார்.
தென்காசி வாக்காளர்களே, உஷார்! சிறுபான்மை மக்களைக் காப்பது பற்றி எங்கே பேசியிருக்கிறார் என்று பார்த்தால், தேர்தல் பரப்புரைக்காகத் தென்காசி போனபோது தான், மண்டபத்தில் எழுதிக் கொடுத்த டயலாக்கை எடுத்து விட்டிருக்கிறார்.
இதே தென்காசியில் தான் சில வருடங் களுக்கு முன்பு, இந்துத்துவா கூட்டத்தினர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு முன்பாகத் தாங்களே குண்டுவைத்துவிட்டு, இஸ்லாமியர் மீது பழிசுமத்தி, மிகப்பெரிய மத மோதலுக்குத் திட்டம் தீட்டியதையும், தமிழக காவல் துறையின் உடனடியான நடவடிக்கைகள் மூலம் உண்மை ஓரிரு நாட்களிலேயே வெளிச்சத்துக்கு வந்ததையும், கலவரத்தைப் பற்றவைக்கும் தங்களது சதித்திட்டம் புஸ்வாணமாகிப் போனதால், பாஜக தலைமை முக்காடு போட்டுக்கொண்டு முடங்கிப் போனதையும் தமிழக மக்கள், குறிப்பாகத் தென்காசி வாக்காளர்கள், மிக நன்றாகவே அறிவார்கள்.
சப்பைக் கட்டு கட்டிய எடப்பாடி கடந்த நூறு வருடங்களாக, சிறுபான்மை மக்கள் மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது, வெறுப்பை உமிழ்ந்து வன் முறையைத் தூண்டுவதையே தனது முழுமுதற் கடமையாகச் செய்து வருகிற ஆர்எஸ்எஸ்-இன் நய வஞ்சகக் கூடாரத்துக்குள்ளே நின்று கொண்டுதான் நல்லவர் வேடமிட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இஸ்லாமிய மக்களுக்கு இன்னல் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற தீய நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சிஏஏ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக மாநிலங்களவையிலே வாக்களித்தது ஏன் என்று கேட்டால் “கூட்டணி தர்மம்” என்று சப்பைக்கட்டு கட்டிச் சமாளிக்க முயன்றவர் தான் எடப்பாடி. குன்றத்தில் மவுன விரதம்!
இப்போதும் நம் தென் தமிழகத்தின் திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்துக் கொண்டு, எப்படியாவது ஒரு கலவரத்தை நடத்தியே தீருவது என்று ஆர்எஸ்எஸ்/பாஜக அமைப்பினர் கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் நிலையிலும், “கூட்டணி தர்மத்தை” முழுமையாகக் கடைப்பிடித்து மவுனவிரதம் காக்கிறார் எடப்பாடியார்.
திருப்பரங்குன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த நான்காண்டுகள் உள்பட, இத்தனை காலமும் எங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதோ, அதே இடத்தில் இந்த வருடமும் தீபம் ஏற்றப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்து மகிழ்ந்திருக்க, பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் மட்டும், சிக்கந்தர் தர்காவுக்குப் பக்கத்தில், தாங்கள் சொல்லுகிற இடத்தில் தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் பிரச்சனை ஏற்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே.
“திருப்பரங்குன்றத்தைத் தமிழகத்து அயோத்தியாக மாற்றுவோம்” என்று எச். ராஜா கூப்பாடு போட, “அயோத்தியாக மாறினால் என்ன தப்பு?” என்று நயினார் நாகேந்திரன் வழிமொழிய, இவர்களின் இந்தக் கலவர மோகத்திற்கு வலிமை சேர்க்க, பிரதமர் மோடியையும் போன மாதம் அங்கே வரவழைத்தார்கள்.
ஆனால் நல்வாய்ப்பாக, திருப்பரங் குன்றம் மக்களும், ஏன் ஒட்டுமொத்தத் தமி ழகமும், இவர்களுடைய வன்முறைத் தூண்ட லுக்குக் கிஞ்சிற்றும் இடம் தராது, இங்குள்ள மத நல்லிணக்கச் சூழலைப் பாதுகாத்து வரு கிறார்கள்.
ஆனால் இதுகுறித்தெல்லாம் எடப்பாடி யும், அதிமுக-வும் எந்தவொரு வார்த்தையும் வாய் திறந்து பேசாமல், தீவிர மவுனத்தைக் கடைப்பிடித்து, “கூட்டணி தர்மத்தைப்” பாதுகாத்து வருகிறார்கள்.
மைக்கேல்பட்டியில் கிழிந்து தொங்கிய கோரமுகம் இரண்டாண்டுகளுக்கு முன்னால் தஞ்சை அருகே மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றத் தூண்டுதலே காரணம் என்று வடிகட்டின பொய்யை பாஜக/ஆர்எஸ்எஸ் கும்பல் கட்ட விழ்த்துவிட்டதும், தற்போது வழக்கை விசா ரித்த சிபிஐ-யே, மதமாற்றக் குற்றச்சாட்டை முழுவதுமாக நிராகரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருப்பதும், பாஜக-வின் வஞ்சகம் நிறைந்த கோர முகத்தையும், கீழ்த்தரமான அரசியலையும் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.
இவ்வாறு சிறுபான்மை சமூகத்தவருக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டிருப்ப தையும், மத மோதல்களையும், வெறுப்புப் பேச்சுகளையும் தூண்டிவிட்டு, கலவரங் களுக்காகக் காத்துக் கிடப்பதையுமே வாடிக்கையாகக் கொண்ட பாஜக-வுடன் கூட்டணி என்கிற போர்வையில் கூடா நட்பு வைத்துக்கொண்டு, “சிறுபான்மையினர் நலன்” என்றெல்லாம் எடப்பாடி பேசுவது எங்கு போனாலும் எடுபடப்போவதில்லை.
“கண்களை இமை காக்கும் வசனத்தையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் கொடுங்கரங்களிடமிருந்து அதிமுக-வை எப்படிப் பாதுகாப்பது?” என்கிற எம்ஜிஆர் தொண்டர்களின் மைன்ட் வாய்ஸை யாராவது எடப்பாடியாருக்குப் புரிய வைத்தால் நல்லது.
- க. மன்னன்







