தேர்தல் நிகலவரம்.
தேர்தல் நிகலவரம்.
தமிழகத்தில் ஏப்.23-ந் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக வேலை பார்த்து வருகின்றனர். 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேர்தலை ஒட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
21-ம் தேதி காலை 10 மணி முதல் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை மீறி மது விற்பனை செய்வது கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 33 சதவீதம் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தற்போது நிறைவேற்றுகின்ற அருமையான தருணம்; அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.தேர்தல் தோல்வி பயத்தில் இப்படிப்பட்ட கருத்தை கூறி இருக்கிறார் -
தொகுதி மறுவரையறையால் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் நடக்கும் என முதலமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரையைக் காணத் திரண்டிருந்தவர்களில், சூலூர் தொகுதி தவெக வேட்பாளர் சுகுமார் உட்பட 10 பேர் திடீரென மயக்கமடைந்தனர்.தற்போது வரை 15 பேர் மயக்கமடைந்து ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
மக்களிடையே பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு பெருகி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், சுமார் 200 தொகுதிகளில் (200 seats) நாங்கள் வெற்றி பெறுவோம்.நயினார் நாகேந்திரன் நம்பிக்கை.
இருமுனை போட்டிதான் இங்கு நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும், சங்பரிவார் அரசியலை பேசும் சக்திகளுக்கும் இடையே நடக்கும் மக்கள் யுத்தமாக இந்த தேர்தல் களத்தை பார்க்கிறோம். திமுகவை எதிர்க்கிறோம் என்கிற பெயரில், அதிமுக - பாஜக அணிக்கு சாதகமான வேலைகளை செய்கிறார் விஜய்.- விசிக தலைவர் திருமாவளவன்
இது மிகவும் சுவாரசியமான ஒரு தேர்தல். இந்த முறை தேர்தல் களத்தில் பல புதியவர்கள் நுழைந்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் கீழ், ஹிந்துத்துவா சக்திகள் யாராலும் வெல்ல முடியாத இந்தத் திராவிட மண்ணிற்குள் நுழைய முயற்சி செய்கின்றன. ஆனால், அவர்கள் மிகப்பெரிய தோல்வியையே தழுவுவார்கள்.இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தனித்தே ஆட்சியமைக்கும். அவர்கள் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.திருச்சியில் வைகோ பேட்டி
- சென்னையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
தேர்தல் காலம்தான்.. இவர்கள் கவனம் தேர்தலில்தான் இருக்கும், டெல்லியில் நாம் சைலண்டாக தமிழ்நாடு தொகுதி மறுவரையறையை பண்ணிடலாம் என்று நினைக்கவே நினைக்காதீர்கள்; நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை பார்க்க வேண்டியிருக்கும்.முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக அவர் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை வருகிறார். தொடர்ந்து ஏப்ரல் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். கெஜ்ரிவாலின் இந்த வருகை திமுக கூட்டணிக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் ஆட்சி அமைந்த ஓராண்டிற்குள் நிறைவேற்றப்படும். தோல்வி உறுதி என்ற விரக்தியில் அ.தி.மு.க கொச்சையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது என கோவை தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா, இந்த காலத்தில் அப்பா - மகன் எல்லாம் சும்மார். ராமதாஸ் மனதை புண்படுத்தும் அன்புமணி எப்படி மக்களுக்கு நல்லது செய்வார். மக்களுக்கு நல்லது செய்வதற்கு தனி மனது வேண்டும் என்றார்.தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வருவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். மேலும், கார்கே, பிரியங்கா காந்தி, தெலங்கானா, கர்நாடக முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் என அனைவரும் வந்து பரப்புரை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மதுரை மத்திய தொகுதி என்.டி.ஏ வேட்பாளர் சுந்தர்.சி மீது எஸ்.எஸ்.கலானி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 12-ஆம் தேதி தேவாலயத்தில் கட்சி சின்னத்துடன் சென்று வழிபாட்டில் பங்கேற்றதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு வேலூரிலும் இரவு 7 மணிக்கு திருப்பத்தூரிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆண்டிப்பட்டியில் மதியம் 3 மணிக்கும் மதுரையில் மாலை 5 மணிக்கும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க இன்று வெளியிடுகிறது. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று தேர்தல் அறிக்கையை சென்னையில் வெளியிட உள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள்மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் நேரடிப் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
ஏப்ரல் 21-ம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடத்திடம் பிரச்சார தேதிகள் கோரப்பட்டும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். இவர்களின் வருகை இல்லாதது வெளிப்படையாகத் தெரிவதோடு, மற்ற கட்சிகள் மாநிலம் முழுவதும் தங்களது களப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இதை விளக்குவது கடினமாக இருப்பதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.
கடந்த வாரம் வரை இதுகுறித்த கேள்விகளும் பின்தொடர்தல்களும் இருந்தன. இப்போது அந்தக் கேள்விகள் கூட நின்றுவிட்டன” என்று ஒரு மூத்த காங்கிரஸ் நிர்வாகி, தேர்தலின் முக்கியமான கட்டத்தில் டெல்லியிலிருந்து வரும் "மந்தமான பதிலை" விவரிக்கிறார்.
. நான்கு எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள பா.ஜ.க, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிடுகிறது. இக்கட்சி தனது பிரச்சாரத்திற்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு சிறப்பு விமானத்தைப் பயன்படுத்துகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அந்த விமானத்தைப் பயன்படுத்துகிறார், அதே நேரத்தில் குஷ்பு சுந்தர், முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போன்ற தலைவர்கள் தொகுதிகளுக்கு இடையே வேகமாகச் செல்ல ஹெலிகாப்டர்களைப்பயன்படுத்துகின்றனர்
வேட்புமனுத் தாக்கலின் போது தேசியத் தலைவர்களும் நேரில் வந்து தங்களது பிரச்சாரத்தின் தீவிரத்தை உறுதிப்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் இதுவரை இல்லாத வருகை, வரும் நாட்களில் திட்டமிடப்பட்டுள்ள இரண்டு முக்கியப் பேரணிகள் மூலம் ஈடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் கட்சி குறைந்த அளவிலான மத்தியத் தலைவர்களின் ஈடுபாட்டையே கண்டுள்ளது. இதுவரை பிரச்சாரத்திற்கு வந்த ஒரே உயர்மட்டத் தலைவர் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மட்டுமே. அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகையை ஆதரிக்க வந்து சென்றார். இது கட்சித் திட்டத்தை விட தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் அமைந்த பயணம் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஏப்ரல் 20-ம் தேதி சென்னையில் தி.மு.கவின் ரோடுஷோவில் பங்கேற்பார் என்று தெரிகிறது.
காங்கிரஸில் உள்ள பலருக்கு இந்தச் சூழலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 7-ம் தேதியுடன் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 8 முதல் மத்தியத் தலைவர்கள் தமிழகத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வாரம் கடந்தும் இன்னும் முறையான திட்டம் ஏதும் இல்லை. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் இந்நேரம் மாநிலத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று ஒரு மூத்த காங்கிரஸ் நிர்வாகி கூறுகிறார்.
இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளும்போது இவர்களின் வருகை இல்லாதது வியப்பை அளிக்கிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன - இது பா.ஜ.க அதன் கூட்டணியில் பெற்ற இடங்களை விட ஒன்று அதிகம். மேலும் காங்கிரஸிடம் 18 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர், ஆனால் பா.ஜ.க-விடம் நான்கு பேர் மட்டுமே உள்ளனர்.
இருப்பினும், தங்களின் செல்வாக்கிற்கு ஏற்றவாறு பிரச்சாரத்தின் அளவு இல்லை என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய ராகுல் காந்தி வரவேண்டிய அவசியமில்லை. தி.மு.க.விடம் சொந்த செல்வாக்கு உள்ளது. ஆனால் திமுக விடம் தேவையற்ற மோதல் போக்கை கடைபிடித்து அவர்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ள காங்கிரஸ் புதுச்சேரியிலும் திமுக கூட்டணி கட்சிகளிடம் கோபத்தை உண்டாக்கி இந்தியா கூட்டணியையே சிதைத்து விட்டது.
காங்கிரஸ் தனது சொந்த இடத்திற்காக தீவிரமாகப் போராடுகிறதா என்பதே கேள்வி. 2024 தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராகுல் காந்தி மாநில கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க வராதது ,தி.மு.கவை மதிக்காத்து. வருத்தமளிக்கிறது என்றனர்.


















