தேர்தல் ஆணையரை மாற்ற நோட்டீஸ்

 தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற எதிர்கட்சிகள் நோட்டீஸ்இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை கொண்டு வர எதிர்கட்சிகள் தரப்பு மீண்டும் நோட்டீஸ் அளிக்க திட்டதிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே அளிக்கப்பட்ட நோட்டீஸ் இரு அவைகளிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், புதிய நோட்டீஸ் தயாரிப்பது தொடர்பாக, தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் பரப்புரை செய்த தேஜஸ்வி யாதவ்

சட்டசபை தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ள ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. தேர்தலுக்கு மத்தியிலும் பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பெருமிதமாக பேசியுள்ளார்12 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழே உள்ள 12 மாற்று அடையாள ஆவணங்களை காட்டி வாக்கு செலுத்தலாம்.இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

HGQ3sPxa4AAb1lz

ஆட்டோவில் சென்று உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை தொகுதியில் ஆட்டோவில் சென்று பரப்புரையில் ஈடுபட்டார் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5 அதிமுக, 1 பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காவல்துறையை கண்டால் குற்றவாளிகளுக்கு பயமில்லை. குற்றவாளிகளுக்கு தி.மு.க.வினர் துணை நிற்கின்றனர். வறுமை இல்லையென்றால் எதற்காக கிட்னியை விற்கின்றனர். ஆளுக்கு தகுந்தாற்போல கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டனர். கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
ஒசூரில் இன்று மாலை நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பெலகொண்டப்பள்ளியில் உள்ள தால் நிறுவனத்தின் விமானத் தளத்திற்குச் சென்றடைந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கோபசந்திரத்திற்கு செல்கிறார்.

தமிழகத்தை அடிமையாக்க பாஜக முயற்சி: ராமநாதபுரத்தில் கே.சி. வேணுகோபால் M.P.ஆவேசம்.2026 மார்ச் 15-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, தற்போது நடைபெற்று வரும் தேர்தல்களில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் இணையதள முகவரிகள் (URLs) கண்டறியப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை நீக்குதல், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தல் மற்றும் தவறான தகவல்களுக்கு விளக்கமளித்து மறுப்பு தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகள் அடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியினர் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டனர். அரசியலில் பெண்களுக்கான இடத்தை கொடுக்க தி.மு.க காங்கிரஸ் விடவில்லை, வரும் தேர்தலில் திமுக கூட்டணியை பெண்கள் வீழ்த்த வேண்டும் என பியூஷ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறையின் புதிய ஐஜி யாக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னைக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை ‘சென்னை சூப்பர் 6’ என்ற பெயரில் 6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சென்னையில் 1,000 மினி பேருந்துகள் இயக்கப்படும், மழை நீர் வடிகால் அமைப்புகள் 2028-க்குள் முழுமையாக நிறைவேற்றப்படும். மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும். பாதாள சாக்கடை திட்டம் 2027-க்குள் முடிக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.



ஈரானுக்கு ஆயுத உதவியா?

ரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி அமெரிக்கா தனது 2 போர் கப்பல்கள், போர் விமானங்களை நிறுத்தி உள்ளது.

ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் தான் சீனாவுக்கு சொந்தமான 4 சரக்கு விமானங்கள் ரகசியமாக ஈரானில் தரையிறங்கி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் கடந்த 7 ம் தேதி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இருநாடுகள் இடையே பாகிஸ்தானில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் அனைத்து கோரிக்கைகளையும் ஈரான் ஏற்கவில்லை. சில விஷயங்களில் இருநாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டாலும் முழு பேச்சுவார்த்தையும் வெற்றி பெறவில்லை.


இருப்பினும் எதிரெதிர் துருவங்களாக இருந்த இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கான டேபிளில் அமர்ந்தது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. அதோடு இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தது. ஆனால் அமெரிக்கா மோதல் மீண்டும் வலுத்துள்ளது. திறக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளது.


ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் அதில் உள்ள வீரர்கள், போர் விமானங்களை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும் என்று ஈரான் கூறியது.


அதனை ஏற்காததால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையே தான் ஈரானில் திடீரென்று சீனாவின் 4 சரக்கு விமானங்கள் தரையிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபற்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் மரியோ நவ்பல் முக்கிய விஷயத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.


4 இந்திய கப்பல்களை விரட்டிய ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் திக்திக்.. திடீர் யூடர்ன் - பெரும் பதற்றம்

அதில், ''சீனாவின் 4 சரக்கு விமானங்கள் ரகசியமாக ஈரானில் தரையிறங்கி உள்ளன. இந்த விமானங்கள் தரையிறங்குவதற்கு முன் தங்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை யாரும் கண்காணிக்காமல் இருக்க ட்ரான்ஸ்பாண்டர்களை 'ஆஃப்' செய்துள்ளது'' என்றார்.


மேலும் 4 சீன சரக்கு விமானங்களும் டிரான்ஸ்பாண்டர்களை ஆஃப் செய்து ஈரானில் தரையிறங்கி உள்ளது. 'டிரான்ஸ்பாண்டர்கள்' என்பது ஒரு விமானத்தின் இருப்பிடத்தை கண்காணிக்க உதவும்.


இதன்மூலம் விமானங்கள் வானில் மோதிக்கொள்வது தவிர்க்கப்படும். வானில் பறக்கும்போது அனைத்து விமானங்களும் இந்த 'டிரான்ஸ்பாண்டர்களை' ஆன் செய்து வைத்திருக்கும்.


ஆனால் சீனா, அதனை 'ஆஃப்' செய்து ஈரானில் தனது 4 சரக்கு விமானங்களை ரகசியமாக தரையிறக்கி உள்ளது.


இதனால் தான் ஏதோ மர்மம் இருப்பதாக வல்லுநர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர். மேலும் ஒரே நேரத்தில் 4 விமானங்களின் 'டிரான்ஸ்பாண்டர்களும்' செயல்படவில்லை என்பதால் அதன் பின்னணியில் தொழில்நுட்ப கோளாறு இருக்க வாய்ப்பில்லஎன்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


எனவே தான் சீனாவில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்கள் சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் சீனாவும், ஈரானும் நல்ல நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் தான் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.இருப்பினும் தற்போது வரை இதுபற்றி ஈரான் அல்லது சீனா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.


நீங்க தானே அனுமதி கொடுத்தீங்க.. பதைபதைப்புடன் இந்திய கப்பலில் இருந்து ஈரானுக்கு போன கால்.. வெளியான ஆடியோ


முன்னதாக ஈரானுக்கு, சீனா உதவிகள் செய்வதாக பல செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் கோபமான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு சீனா உதவினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று வார்னிங் செய்திருந்தார்.


இதுபற்றிசீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கடந்த 22ம் தேதி மறுத்து இருந்தார்.

அதுமட்டுமின்றி ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்தார்.


ஆனால் அவர் கூறிய அடுத்த நாளிலேயே ஈரானில் அந்த நாட்டின் 4 சரக்கு விமானங்கள் ரகசியமாக தரையிறங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளதாக பரபரப்பு உண்டாகி உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை