அரசுக்கு ஒருபைசா நட்டமில்லை

 
மின்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் இருந்த சமயத்தில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இது சமபந்தமாக இன்று சென்னை உயர்அரசுக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில், இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ள

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.இது சம்பந்தமாக அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் தவறுகள் நடந்துள்ளது என்று ஒரு அமைப்பு புகார் தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு துவங்கிய நடைமுறை தான் இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து பல ஆண்டுகளாக டெண்டரில் மின்மாற்றிகள் வாங்குவது குறித்தான விளக்கத்தினையும் அளித்தார் செந்தில் பாலாஜி.

அதன்பின்னர் பேசியவர் 1987 ஆம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறையை தான் மின்சார வாரியம் பின்பற்றி வருகிறது. ஆட்சி மாறினால் கூட இந்த நடைமுறை மட்டுமே உள்ளது. 2021 ஆண்டில் மட்டும் புகார் அளிகப்பபட்டுள்ளது. 

டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார் செந்தில் பாலாஜி. டிரான்ஸ்பார்மர் கொள்முதல் வெளிப்படையாகவே நடந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் மீதான புகாரில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் கூறியுள்ளார். எந்த விதமான முறைகேடும் மின்மாற்றிகள் விஷயத்தில் நடக்கவில்லை.

 அரசுக்கு ஒரு பைசா கூட நஷ்டம் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடைபெறவில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். என்மீது வழக்கு தொடர்ந்துள்ள அமைப்பு இந்த ஐந்து ஆண்டுகள் நடந்ததை பற்றி தான் பேசியுள்ளனர். 

அதற்கு முன்னதாக நடந்தவை குறித்து எதுவும் சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

அதோடு பொதுவெளியில், மக்கள் மன்றத்தில் என்னை வீழ்த்த முடியாதவர்கள் நீதிமன்றத்துக்கு போறாங்க. வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் குற்றவாளி என்ற தோன்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி. 

கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மின் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ. 397 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தில் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக சிபிஐ விசாரவைக்கு உத்தரவிடுமாறு அதிமுக வழக்கறிஞர் அணி சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது..

இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக புதிதாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு இரண்டு வாரங்களில் இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை சிபிஐ வசனம் ஒப்படைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி இந்த முறை கரூரில் இருந்து கோவை தெற்கில் தொகுதி மாறி போட்டியிட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தும் விதமாக அவரை தொகுதி மாறி போட்டியிட அறிவுறுத்தியுள்ளது திமுக தலைமை. அதன்படி, அதிமுக வேட்பாளரான அம்மன் அர்ஜுனனை எதிர்த்து கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட்டுள்ளார். 

இந்த முறை கோவையில் பத்து தொகுதிகளை திமுக கைப்பற்றும் என அவர் தொடர்ந்து நம்பிக்கையுடன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேகாலயா தேனிலவு
 கொலை வழக்கு

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி.

இவருக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு 9 ஜுன் மாதம் சோனம் என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, தேனிலவுக்காக மேகாலாயா மாநிலத்திற்கு சென்றிருந்தனர். 

அப்போது இந்த புதுமண தம்பதி காணமல் நீண்ட நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் காணாமல் போனதாககாவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கினர்.

சுமார் 16 நாட்கள் கழித்து கணவர் ராஜா ரகுவன்ஷி உடல் மட்டும் மேகாலாயாவில் உள்ள அருவியின் அடிப்பகுதியில் கிடைத்தது. பின்னர் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அப்போது ராஜா ரகுவன்ஷி இறப்பதற்கு முன் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டது பிரேதப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந் து காவல்துறையினர் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி மனைவி சோனம் ரகுவன்சிங் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதிமுக செஞ்சதை கூட திமுக MLA D Velu செய்யல! மூன்று ஆண்டுகளாக போராடுறோம்!

ஆனால், சோனத்தின் உடல் எங்கு தேடியும் கிடைக்காததால் புதுமணத் தம்பதிகள் தங்கியிருந்த விடுதியில் விசாரணை நடத்தினர்.அப்போது சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை மேற்க்கொண்டனர்.

இந்த வழக்கில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சோனம், தனது கணவர் ராஜா ரகுவன்சியை இதற்கு முன்பே மூன்று முறை கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் குவஹாத்தியில் அவரை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டார்.ஆனால் சில காரணங்களால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

 அதன்பிறகுமேகாலயாவின் சோஹ்ரா பகுதியில் இரண்டு முறை மீண்டும் கணவரை கொல்ல முயன்றார்.அந்த முயற்சிகளும் வெற்றியடையவில்லை.

இறுதியாக நான்காவது முயற்சியில் வெய்சாடோங் அருவி அருகே தனது திட்டத்தை செயல்படுத்தி கணவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சோனம் அழைத்ததன் பேரில் மூன்று பேர் மேகாலயாவுக்கு வந்துள்ளனர். 

அவர்களில் இருவர் இந்தூரைச் சேர்ந்தவர்கள் ஒருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்த மூவரும் சேர்ந்து ராஜாவை கொலை செய்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளத

கலையைக் மறைக்க அருவியில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தது போல ராஜாவின் உடலை அமைத்துள்ளனர

இதையடுத்து உத்தரப் பிரதேசத்தின் நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சோனம் இன்று சரணடைந்துள்ளார்.இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கொலை வழக்கில் இருந்து சோனம் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இதனைத் தொடர்ந்து சோனத்திற்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த நிலையில் அதற்கான காரணம் என்னும் தெரியவில்லை.

வழக்கு தொடர உத்திரவிடவில்லை!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. 

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுறை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவற்றின் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் “ அமலாக்கத்துறை கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

அப்போது நீதிபதிகள் “ நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாராங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால் அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்..

இந்த நிலையில் உடனே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும் வழக்குப்பதியவில்லை என இன்பதுரை அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது புகார் மீது மட்டுமே வழக்குப் பதிய உத்தரவிட்டோம், குறிப்பாக நேரு மீது  தொடர உத்தரவிடவில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமைவழக்கு தெளிவுபடுத்தியது.

 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஜூன் 4வது வாரத்துக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை