ஒரு பழமையான.........!

ஒரு பழமையான நூலகம்!

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மெர்டன் கல்லூரி நூலகம், உலகின் மிகவும் பழமையான நூலகங்களில் ஒன்றாகும்.

 இது ஆஸ்டெக் பேரரசை விடவும் பழமையானது.பல நூற்றாண்டுகளாக, 14ஆம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர் ஜே.ஆர்.ஆர்.டோல்கீன் உள்படப் பல புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நூலகத்தின் 750ஆம் ஆண்டு நிறைவை கண்டுள்ளது.

மெர்டன் கல்லூரி வளாகத்திற்குள், ஒரு பழமையான மரப்பெட்டி உள்ளது. இடைக்காலத்தில், தனித்தனியே சாவிகளை வைத்திருக்கும் மூன்று வெவ்வேறு நபர்கள் ஒன்றாகக் கூடினால்தான் அந்தப் பெட்டியைத் திறக்க முடியும் என்ற நிலை இருந்தது. 

அப்படிப்பட்ட பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் இருந்தது தங்கமோ நகைகளோ இல்லை, அவை புத்தகங்கள்.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு புத்தகமும் கையாலேயே எழுதப்பட வேண்டியிருந்தது.

அதற்குப் பெருமளவு நேரமும் உழைப்பும் தேவைப்பட்டது. சில நேரங்களில் பல மாதங்கள் கூட ஆனது. இதனால், புத்தகங்கள் மிகவும் அரிதானவையாகவும் அதிக விலை கொண்டவையாகவும் இருந்தன. 

அதனால்தான், இன்றைய பல்கலைக்கழகங்கள் முன்னாள் மாணவர்களிடம் நிதியுதவி கோருவதைப் போலவே, 13ஆம் நூற்றாண்டில் மெர்டன் கல்லூரி தனது உறுப்பினர்களிடம் புத்தகங்களை நன்கொடையாக அளிக்குமாறு கோரியது.

இந்த விதிமுறை 1276ஆம் ஆண்டில் பேராயர் கேன்டர்பரியால் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. 

இதுவே மெர்டன் கல்லூரி நூலகத்தின் தொடக்கமாக அமைந்தது. 

அன்று முதல் இன்று வரை இந்த நூலகம் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.

 பிளேக் நோயால் ஏற்பட்ட பெருமளவிலான இறப்புகளைக் குறிக்கும் ‘பிளாக் டெத்’ போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிகழ்வதற்கு முன்பே இது தொடங்கப்பட்டது.

 பின்னர் கோவிட்-19 பெருந்தொற்றுப் பேரிடர்க் காலம் உள்பட நவீன காலம் வரையிலும் இது தொடர்ந்து இயங்கி வருகிறது. 

 பல்லாண்டுக் காலத்தில், தொடக்க கால அறிஞர்கள் முதல் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரை பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்த மாதத்துடன், இந்த நூலகம் தனது 750ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. 

இதுவொரு மிக முக்கியமான மைல்கல். விக்டோரியன் காலத்தில்கூட, மக்கள் இந்த நூலகத்தின் பழமையையும் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்திருந்தனர். அந்தக் காலகட்டத்தில், இது பெரும்பாலும், ‘இங்கிலாந்தின் மிகப் பழமையான நூலகம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இந்த நூலகத்தின் நற்பெயர் பெருகியபோது, சிலர் இதன் பழமையைப் பற்றி மிகைப்படுத்திக் கூறத் தொடங்கினர். ஆக்ஸ்ஃபோர்டை சேர்ந்த சில ஆர்வமிக்க மாணவர்கள் மற்றும் அறிஞர்கள், இது ‘உலகிலேயே மிகப் பழமையான நூலகம்’ என்றுகூட உரிமை கோரத் தொடங்கினர்.

ஆரம்பக் காலத்தில், மெர்டன் கல்லூரி நூலகம் நவீன நூலகங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. அங்கு நூலகர் இல்லை, மக்கள் சுற்றி வந்து புத்தகங்களைத் தேர்வு செய்வதற்கான அலமாரிகளும் இருக்கவில்லை.

 பெட்டியில் இருந்து புத்தகங்களைக் கடன் வாங்குவதற்கும் திருப்பிக் கொடுப்பதற்கும் ஒரு முறை இருந்தது. ‘

விரைவில், நூலகம் மாறத் தொடங்கி, இன்று நாம் அறிந்த நூலகங்களைப் போல் ஆனது. புத்தகங்களைச் சேகரிக்கும் விதி அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, சில புத்தகங்கள் முதன்முறையாகப் பெட்டிக்கு வெளியே வைக்கப்பட்டன. 

மக்கள் விரும்பும் போதெல்லாம் படிப்பதற்காக, இந்தப் புத்தகங்கள் ஒரு மேசையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்தன.

 எளிதாகக் கூறுவதெனில், சில புத்தகங்களைக் கடன் வாங்கவும், மற்றவற்றை நூலகத்தில் மட்டுமே படிக்கவும் முடியும் என்ற கொள்கையின் ஆரம்பக்கால உதாரணமாக இது இருந்தது.

கடந்த 1370களில் நூலகம் மற்றொரு பெரிய படியை எடுத்து வைத்தது. பெருகிவரும் புத்தகங்களைச் சேமிப்பதற்காக ஒரு சிறப்பு அறை கட்டப்பட்டது. 

இது அதை ஒரு முறையான நூலகம் போல மாற்றியது.

புத்தகங்களை நேராக வைப்பதற்காக கிடைமட்டமாக அலமாரிகள் நிறுவப்பட்டன.

சுவாரஸ்யமாக, புத்தகங்கள் இன்று நாம் பார்க்கும் விதத்தில் அடுக்கப்படவில்லை. அவை அவற்றின் முதுகுப் பகுதிகள் உள்நோக்கி இருக்கும்படி வைக்கப்பட்டிருந்தன.

 மேலும் தலைப்புகள் பக்கங்களின் வெளி விளிம்பில் எழுதப்பட்டிருந்தன.

 இதற்குக் காரணம், புத்தகங்கள் அப்போதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததே ஆகும். 

அந்தச் சங்கிலிகள் புத்தகத்தின் முன்பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்தன.

அதாவது, புத்தகங்களை சங்கிலியால் பிணைப்பது அவை தொலைந்து போவதையோ அல்லது திருடப்படுவதையோ தடுக்க உதவியது.

இன்று, நூலகத்தில் உள்ள ஒரு சில புத்தகங்கள் மட்டுமே இன்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. 

அதுவும் காட்சிக்கு வைப்பதற்கு மட்டுமே. பெரும்பாலான புத்தகங்கள் இப்போது அவற்றின் முதுகுப் பகுதிகள் வெளிப்புறமாக இருக்கும்படி நவீன முறையில் அடுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அந்தப் பழைய இடைக்கால நூலக அறையின் பெரும்பகுதி இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது.

  நுழைவாயிலுக்கு அருகில், பார்வையாளர்கள் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசல் பெட்டியை இன்றும் காணலாம். 

விக்டோரியன் காலத்தில், நூலகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் தொடங்கியது, 

பார்வையாளர்கள் அதன் அழகான வண்ணக் கண்ணாடி ஜன்னல்களையும் அரிய புத்தகங்களையும் கண்டு வியந்தனர்.

 அங்குள்ள மிகவும் பிரபலமான புத்தகங்களில் ஒன்று, ‘தி கேன்டர்பரி டேல்ஸ்’ நூலின் 15ஆம் நூற்றாண்டு பதிப்பாகும். 

இது இங்கிலாந்தில் அச்சிடப்பட்ட ஆரம்பக்கால புத்தகங்களில் ஒன்று. மெர்டனின் பிரதியில் உள்ள தனித்துவம், கையால் அலங்கரிக்கப்பட்ட அதன் முனைகள்தான்.

இந்தக் காலகட்டத்தில், புத்தகங்களும் பத்திரிகைகளும் நூலகத்தை மிகவும் உயர்வான வார்த்தைகளில் விவரிக்கத் தொடங்கின. 

1878ஆம் ஆண்டின் ஆக்ஸ்ட்ஃபோர்ட் வழிகாட்டி ஒன்று, அதை “தற்போது இங்கிலாந்தில் உள்ள மிகவும் பழமையான நூலகம்” என்று குறிப்பிட்டது.

 1885ஆம் ஆண்டின் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பதிப்பு, அதை “இங்கிலாந்தில் தற்போதுள்ள மிகப் பழமையான நூலகம்” என்றது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில், சில உணவு விடுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் போல வடிவமைக்கப்பட்ட அறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று மெர்டன் கல்லூரி நூலகத்தை அடிப்படையாகக் கொண்டது.எல்லா பழைய நூலகங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. எடுத்துக்காட்டாக, உறுப்பினர் ஆவதற்குப் பணம் செலுத்த வேண்டியிருந்த தனியார் நூலகங்களில் இருந்து, மடாலய நூலகங்கள் முற்றிலும் மாறுபட்ட முறையில் செயல்பட்டு வந்தன.

2016இல் மொராக்கோவில் உள்ள அல்-கராவிய்யின் நூலகம் புதுப்பிக்கப்பட்டபோது, பல ஊடக செய்திகள் அதை “உலகின் மிகப் பழமையான நூலகம்” என்று குறிப்பிட்டன.

 ஆனால, கின்னஸ் உலக சாதனைகள், எகிப்தில் உள்ள புனித கேத்தரின் மடாலயத்தில் இருக்கும் நூலகமே  தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருக்கும் மிகப் பழமையான நூலகம் என்று அது கூறுகிறது.

புனித கேத்தரின் மடாலயத்தைப் பொறுத்தவரை, அந்தக் கட்டடம் 6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 

ஆனால், அங்குள்ள புத்தகங்களின் தொகுப்பு இன்னும் பழமையானதாக, ஒருவேளை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தையனவாக இருக்கலாம் என்று சில மிகப் பழமையான எழுத்துகள் குறிப்பிடுகின்றன.

மெர்டன் நூலகத்தின் 750 ஆண்டுக்கால வரலாற்றை நாம் பார்க்கையில், டிஜிட்டல் வடிவங்களுக்கு மாறும் இந்த நகர்வு, அதன் நீண்ட பயணத்தில் மற்றுமொரு படியாகவே தெரிகிறது. 

முன்னதாக, புத்தகங்கள் பூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டன. பின்னர் மேசைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டன. 

அதன் பிறகு அலமாரிகளில் வைக்கப்பட்டன. இப்போது அவை டிஜிட்டல் உலகிற்குள் நகர்கின்றன.

இறுதியில், புத்தகங்கள் என்பவை மிக நீண்ட காலம் நிலைத்து இருக்கக்கூடிய, ஆற்றல்மிக்க ஒரு கருவூலம் என்பதை இது உணர்த்துகிறது. 

அவை பழைய காகிதங்களில் கையால் எழுதப்பட்டு ஒரு மரப்பெட்டியில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தாலும் சரி, அல்லது இணையத்தில் டிஜிட்டல் கோப்புகளாக பகிரப்பட்டாலும் சரி, காலங்களைக் கடந்தும் நூல்களின் மதிப்பு தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வாசிகண்டனூர் பகுதியில் திமுகவுக்கு வாக்கு சேகரித்ததால் பெண்ணை கொடூரமாகத் தாக்கிய இருவர் கைது

கடந்த 22ம் தேதி நடந்த இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், லோகநாதன் மற்றும் பாரி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 7 பேருக்கு போலீசார் வலை.
தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில்தான் உள்ளன - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை





பழைமையான கட்டடம்!

புதுக்கோட்டைக்கு எப்போதும் ஒரு தனித்துவமான வரலாறு உண்டு. அந்த மண்ணின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் கல்வெட்டுகளைவிடவும், இன்று அதன் மார்பின் மேல் உயர்ந்து நிற்கும் ‘பப்ளிக் ஆபீஸ்’ கட்டடம் என்று அழைக்கப்படும் தற்போதைய மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பொலிவு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 ஆண்டுகளுக்கு முன்னால் புதுக்கோட்டை மன்னரின் காலத்தில் கட்டப்பட்டு, காலத்தால் சிதிலமடைந்த கட்டடம் அதன் மரபு சிதையாமல் மீண்டும் கட்டி எழுப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நீதிமன்றக் கட்டடம்புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நவீனச் சிற்பி எனப் போற்றப்படும் திவான் சேஷைய்யா சாஸ்திரியின் தொலைநோக்குப் பார்வையில் 1878-1883 காலகட்டத்தில் உருவானதுதான் இந்தக் கட்டிடம்.

 ‘வருவாய் மற்றும் நீதித்துறை என நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே கூரையின் கீழ் இயங்க வேண்டும்’ என்ற அவரது லட்சியத்தை, உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ராபர்ட் சிஷோம் இந்தோ-சாரசெனிக் பாணியில் கட்டினர். சுமார் 12 ஏக்கர் வளாகத்தில், 1,00,143 சதுர அடி பரப்பளவில் இந்த பிரமாண்டம் விரிந்து கிடக்கிறது. சதுர வடிவிலான இந்தக் கட்டடத்தின் மையத்தில் 63 மீட்டர் நீளமுள்ள ‘வானம் பார்த்த முற்றம்’ அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரமாண்ட கோபுரங்கள், 25 சிகரங்கள் மற்றும் ‘ரூக்’ (Rook) வகை சுருள் படிக்கட்டுகள் இதன் தனிச்சிறப்பாக இருக்கின்றன.

சுமார் 140 ஆண்டுகள் கடந்த நிலையில், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமலும் இயற்கையின் சீற்றத்தாலும் சுவர்களில் ஆலமரங்கள் வேர்விட்டு, மேற்கூரைகள் நலிந்து கட்டடம் சிதிலமடையத் தொடங்கியது.

 இக்குரலுக்கு செவிசாய்த்த தமிழ்நாடு அரசு ரூ.14.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித்துறையின் மரபுக் கட்டடங்கள் கோட்டம், சென்னை வசம் இப்பணியை ஒப்படைத்தது. 

பிப்ரவரி 03, 2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, ஏப்ரல் 25, 2026 அன்று பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழா கண்டுள்ளது இந்த நீதிமன்றக் கட்டடம். இப்போது இந்த வளாகம் 14 நீதிமன்ற அறைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு முழுமையான நீதிபரிபாலன தலமாக புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

‘இதுல முதல் சவாலே  கட்டுமானப் பொருள்கள்தான். 

இந்தக் கட்டடம் முழுசாவே சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்ற பொருட்களைக் கொண்டுதான் அப்போ கட்டப்பட்டிருக்கு. இப்போ காலப்போக்குல நாம சிமென்ட், ஸ்டீல்னு மாறிட்டோம். அதனால, பழைய முறைப்படி வேலை செய்யத் தெரிஞ்ச ஆட்களைப் பிடிக்கிறதுதான் எங்களுக்கு ரொம்ப சவாலா இருந்தது.

 ஏன்னா, சிமென்ட் பூசுறது ரொம்ப சுலபமான வேலை. ஆனா, இந்தப் பழைய கட்டுமானத்தோட சிமென்ட் ஒட்டாது. அதோட தன்மையே வேற. 

அதனால பழைய முறையிலேயே சுண்ணாம்பு கலவையைத் தயார் செஞ்சோம். 

இந்த கடுக்காய், கருப்பட்டி இதையெல்லாம் இப்போ மக்கள் சும்மா சாதாரணமா வச்சிருக்காங்க. ஆனா, நாம பல இடங்கள்ல இருந்து அதைத் தேடிப்பிடிச்சு சேகரிச்சோம். இதுதான் இந்தத் திட்டத்தோட முக்கியமான விஷயம். கிட்டத்தட்ட 15 டன் கடுக்காய் , 20 டன் கருப்பட்டி, 180 டன் சுண்ணாம்பு இதுல பயன்படுத்தியிருக்கோம். சிமென்ட் ஒரு துளி கூட இதில் கலக்கப்படலை.

புதுக்கோட்டை நீதிமன்றக் கட்டடம்
 கடுக்காய்,கருப்பட்டியை அந்தக் காலத்துல மாடுகளை வச்சு செக்குல ஆட்டித்தான் இந்தக் கலவையைத் தயாரிப்பாங்க. ஆனா இப்போ கால தாமதத்தைத் தவிர்க்க, பெரிய கிரைண்டர்களைப் பயன்படுத்தி சுண்ணாம்பு, சுத்தமான ஆற்று மணல், கடுக்காய், கருப்பட்டி ஆகியவற்றை அரைச்சு எடுத்தோம். இந்தக் கலவையை நாம உடனே பயன்படுத்த முடியாது. 15 நாளைக்கு முன்னாடியே ஊற வச்சு, ஒரு வாரத்துக்கு ஒருமுறைன்னு நாலு தடவை அரைச்சுப் பக்குவப்படுத்தணும். அப்புறம் கடுக்காய் தண்ணி, கருப்பட்டி தண்ணியையும் அதோடு சேர்த்துப் புளிக்க வச்சுத்தான் பயன்படுத்தணும்.
 இந்த வேலை தெரிஞ்ச ஆட்களைத் தேடி கோவில்பட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம் பக்கமிருந்து ஆட்களைக் கொண்டு வந்தோம்.

அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம். முக்கியமா செட்டிநாடு (காரைக்குடி) பகுதியில நிறைய பேர் இருக்காங்க. ‘காரை’ அப்படின்னாலே சுண்ணாம்புன்னு ஒரு அர்த்தம் உண்டு. அந்தப் பகுதியில சுண்ணாம்பு வீடுகள் அதிகமா இருக்கிறதாலதான் அந்த ஊருக்கே ‘காரைக்குடி’ன்னு பேரு வந்ததாவே ஒரு தகவல் இருக்கு. 

இப்படிப் பழைமை மாறாம செஞ்சாதான் இந்த பாரம்பரியக் கட்டடம் இன்னும் பல வருஷங்களுக்கு உறுதியா இருக்கும். அதை சிறப்பாகச் செய்து முடித்திருக்கோம்.

ஒரு பழைமையான வரலாற்றுப் பாரம்பரிய கட்டடத்தை மீட்புப் பணியில் இறங்கும்போது அந்தக் காலத்து மனிதர்களின் சமூகவியல், வரலாறு,உணர்வுகள்,ரசனைகள் இவற்றை எல்லாம் முதலில் தேடி படிச்சுப்பார்க்கனும்னு எங்களுக்கு டிபார்மென்ட்டில் பாடமே நடத்தியிருக்காங்க. 

அதன்படி இந்தக் கட்டடம் கட்டப்பட்ட காலத்தில் இருந்த புதுக்கோட்டையின் வரலாற்றுப் புத்தகங்களை தேடி படிச்சுப் பார்த்திட்டுத்தான் அந்தக் கால மனிதர்களின் உணர்வோடதான் இந்த வேலையை ஆரம்பிச்சோம்…” என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் இந்த ய குழுவினர்.

“தொழில்நுட்பங்கள் எவ்வளவுதான் விண்ணைத் தொட்டாலும், நம் பாட்டன் பூட்டன் பயன்படுத்திய அதே ‘பாரம்பரிய அறிவு’ தான் இன்றும் இந்த பிரமாண்டத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அதற்கு செயல்வடிவம் கொடுத்து இந்தப் பணியில் ஆர்வமுடன் களமிறங்கியுள்ள பொதுப்பணித்துறையின் சென்னை, மரபு கட்டடங்கள் கோட்டத்தின் பணி போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது.

 இந்தத் துறையின் மூலம் சிதிலமடைந்த நிலையில் உள்ள நம் மரபு சார்ந்த பழைய கட்டிடங்களை பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ” என்கிறார்கள்  தொல்லியல் துறை ஆர்வலர்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய