விபத்துகள் தொடர்கதை!
புது நீர் வழிப்பாதையை அறிவித்த ஈரான்
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து மூடப்பட்ட ஹார்மஸ் நீர்வழிப்பாதையை திறக்க முடியாது என, மாற்று வழியை ஈரான் அறிவித்துள்ளது.
முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்மஸ் நீரிணை பகுதியில் உள்ள கடல் கண்ணி வெடிகளை கருத்தில் கொண்டு, கப்பல்களுக்கான மாற்று வழியை பயன்படுத்தும்படி ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா உடனான நிலையற்ற இரண்டு கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றதன் விளைவாக, தற்காலிகமாக ஹார்மஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் அறிவித்தது.
இந்நிலையில் தான் மாற்று வழிப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட அறிக்கை என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆவணத்தில், “ கடல்சார் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும், கடல் கண்ணிவெடிகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், ஹார்மஸ் நீரிணையை கடக்க விரும்பும் அனைத்துக் கப்பல்களும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும், நீர்வழிப்பாதையில் பயணிக்கும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய மாற்றுப்பாதைகளை ஈரான் அறிவித்துள்ளது.
நீர்வழிப்பாதையை கடக்க முயலும்போது கப்பல்கள் தங்கள் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை அறிவுறுத்தியுள்ளது. மாற்று வழித்தடங்களாக முன்மொழிவின்படி, “கப்பல்கள் ஓமான் கடலில் இருந்து லராக் தீவின் வடக்குப் பகுதி வழியாக நுழைந்து, பின்னர் வளைகுடாவிற்குள் தொடர்ந்து பயணித்து, லராக் தீவின் தெற்கே கடந்து ஓமான் கடலை நோக்கிச் செல்வதன் மூலம் வளைகுடாவிலிருந்து வெளியேறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உடனான இரண்டு வார போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்மஸ் நீரிணையை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது.
ஆனால், ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதற்கு பதிலடி தரும் விதமாக, ஹார்மஸ் நீர்வழிப்பாதையை மூடிவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதோடு, வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் மீதான தாக்குதல் இடம்பெறவில்லை எனவும், ஹார்மஸை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அமெரிக்கா சொன்னாலும் ஈரான் அதை கேட்பதாக இல்லை.
தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் இந்த நீரிணை ஒரு முக்கிய அழுத்தப் புள்ளியாகத் உருவெடுத்துள்ளது. இதன் மீதான தனது கட்டுப்பாட்டை ஒரு பேச்சுவார்த்தைக்கான சக்தியாக ஈரான் பயன்படுத்தி வருகிறது.
(வி)பத்தோடு பதினான்று?நடிகர் விஜய் கூட்டங்களுக்கு செய்தி சேகரிகச் சென்றால் விஜய் பேசுவதை குறிப்பதைவிட அன்றைய பலி,படுகாயமடைந்தோர் பற்றி குறிப்பெடுப்பதே பெரிய வேலையாக,கவலையாக உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக சென்னை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், இன்று (08-04-26) தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக பரப்புரை வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தவெக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் கூச்சலிட்டபடி விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது
.இதில் ஏராளமான தொண்டர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
ஆனாலும் விஜய் இதைக் கண்டுகொள்ளாமல் அவரின் வாகனம் பரப்புரை நடக்கும் இடத்தை நோக்கிச் சென்றார்.
அதனை தொடர்ந்து திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்த பின்பு தூத்துக்குடி பிரச்சாரம் செய்வதற்காக நெல்லை தாழையூத்து பகுதியிலிருந்து தச்சநல்லூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு வர இருக்கிறார்.
புறவழிச்சாலை வழியாக பிரச்சார வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருந்த போது ஆபத்தை உணராமல் தலைக்கவசம் இல்லாமல் ஏராளமான தவெக தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை தங்களது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.
இதனால் அங்கு கடும் போக்குவரத்து நிலவியது. போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற நிலையில், சாலையை கடக்க முயன்ற ஒரு தவெக தொண்டர் அரசு பேருந்தினுடைய சக்கரத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் அந்த நபர் படுகாயமடைந்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரை செய்வதற்காக பிரச்சார வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருந்த போது தற்போது வரை 5 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அரசு பேருந்தில் சிக்கி காயமடைந்த தொண்டர் உள்ளிட்ட 16 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.




