மதுரையை மணிப்பூராக்க...?

 தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை  5 மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் வழிகாட்டி கையேடு: படிக்க முடியாமல் திணறும் வாக்காளர்கள்.குடகு மலையில் டிரக்கிங் சென்று மாயமான கேரள பெண் சரண்யா 4 நாள் தேடுதலுக்கு பின் மீட்புபெயர்கள் நீக்கப்பட்டதற்கு பழிவாங்கும் விதத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும்: மம்தா பானர்ஜி வேண்டுகோள்.அரியானாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ க்கள் இடைநீக்கம்.காலில் விழுந்து பதவி வாங்கி தமிழ்நாட்டுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி: கனிமொழி தாக்கு.காங்கயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஈரோடு மணி, நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்துவிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் அலுவலகப் பணியாளர்களுக்கு ரூ2500/-இனிப்பு வாங்க கையூட்டு கொடுத்தார்.பணியாளர்களும் தேர்தல்,அரசு ஊழியர்கள் விதிமுறைகளை மீறி வாங்பிக் கொண்டனர்.நடவடிக்கை உண்டா?





 “மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கிறது என்.டி.ஏ.”

முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

மதுரையில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

 மதுரையை தென் தமிழகத்தின் முக்கிய வளர்ச்சி மையமாக மாற்றுவது தான் திமுக அரசின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். “திராவிட மாடல் ஆட்சி என்பது வளர்ச்சி, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதனால் தான் மதுரையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “அவர்கள் கொண்டு வர விரும்புவது வளர்ச்சியை பாதிக்கும் மாடல். மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், மக்களைப் பிரிப்பதற்குமான அரசியலையும் தான் முன்னிறுத்துகிறார்கள்.


இன்னும் தெளிவாகச் சொன்னால், மதுரையை மணிப்பூரைப் போன்ற வன்முறை நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.


“என்.டி.ஏ.வின் கட்டுப்பாட்டில் அதிமுக செயல்படுகிறது. அதன் காரணமாக அந்தக் கட்சி தனது தனித்துவத்தை இழந்து விட்டது” என்று தெரிவித்தார்.மதுரை எய்ம்ஸ் குறித்து பேசும்போது, மு.க. ஸ்டாலின், “2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் திட்டத்திற்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு பல தேர்தல்கள் கடந்துவிட்டன.


ஆனால், இன்றளவும் அந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை” என விமர்சித்தார். இதனுடன், திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திறக்கப்பட்ட மருத்துவமனைகள், பள்ளிகள், நூலகங்கள் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் பட்டியலிட்டார்.


ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்த கருத்துகளுக்கும் அவர் பதிலளித்தார். “தமிழ்நாட்டில் எந்தத் திட்டங்களும் செயல்படவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது.


இந்தியாவில் அதிகளவில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது சரியல்ல” என்று கூறினார்.

மேலும், “நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களின் பெயர்களை மாற்றி வெளியிடும் அதிமுக தலைவர்கள், முதலில் உண்மை தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பெரிய அளவில் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். 

'நிக்கோபார் மெகா திட்டம்'

 ஒரு கார்ப்பரேட் வேட்டை

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுமார் 92,000 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய மோடி அரசு முன்னெடுத்துள்ள “கிரேட் நிக்கோபார் தீவு” (GNI) மெகா உள்கட்டமைப்புத் திட்டம், அந்த மண்ணின் பூர்வகுடி மக்களின் வாழ்வா தாரத்தையும், தனித்துவமான சூழலியலை யும் நசுக்கும் ஒரு பேரழிவுத் திட்டமாக உருவெடுத்துள்ளது.

 ‘வளர்ச்சி’ என்ற பெயரில் பழங்குடியின மக்களை அவர்களின் மூதாதையர் நிலங்களிலிருந்து அந்நியப் படுத்தும் இந்த நடவடிக்கை, மோடி அரசின் கார்ப்பரேட் விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


இந்தத் திட்டத்திற்காக நிக்கோபார் பழங்குடியின மக்களை இடமாற்றம் செய்வது தொடர்பான வரைவு அறிக்கை, அம்மக்க ளிடையே கடும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 2004 சுனாமிக்குப் பிறகு முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள், தங்களின் பூர்வீக நிலங்களுக்குத் திரும்ப அனுமதி வரும் நிலையில், அரசு அவர்களை மீண்டும் வேறு இடங்களுக்கு மாற்ற முற்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

 பழங்குடியினரின் வன உரிமைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் ஒப்புதல் இன்றி இத்திட்டத்தை முன்னெடுப்பது சட்டவிரோதமானது.

குறிப்பாக, பழங்குடியினருக்கு வழங்கப் பட்ட வரைவு அறிக்கை தெளிவற்ற நிலை யில் இருப்பதும், அவர்கள் கோரிய மொழி பெயர்ப்பு வழங்கப்படாமல் அவசரகதியில் கையெழுத்து வாங்க மாவட்ட நிர்வாகம் முயல்வதும் சதிச் செயலாகும். “மக்களை இடம்பெயரச் செய்ய மாட்டோம்” என்று நீதிமன்றத்தில் ஒரு முகத்தைக் காட்டும் மோடி அரசு, களத்தில் மக்களை வெளியேற்று வதற்கான வரைவு அறிக்கைகளைத் தயார் செய்வது அதன் இரட்டை வேடத்தைத் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இந்தத் திட்டத்திற்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதும், அரிய வகை ஆமைகள் மற்றும் உயிரினங்களின் புகலி டங்கள் அழிக்கப்படுவதும் ஈடுகட்ட முடியாத இயற்கை இழப்பாகும். 

‘சுற்றுச்சூழல் அனுமதி’ என்பது வெறும் காகித அளவிலேயே வழங்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை விட, கார்ப்பரேட் நிறுவ னங்களின் லாபமே மோடி அரசுக்கு முக்கியமாகத் தெரிகிறது. 

 பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வாழ்விடங்களை அழித்து உருவாக்கப்படும் எந்த ஒரு வளர்ச்சியும் உண்மையான வளர்ச்சி ஆகாது. 

பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமையை அடகு வைத்து, இயற்கை வளங்களைச் சூறையாடும் மோடி அரசின் இந்த அதிகார மிரட்டலுக்கு எதிராகக் குரல் எழுப்புவது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை