வாக்களியுங்கள்!

  சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை,புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் கணக்குப் புத்தகங்கள், ஓட்டுநர் உரிமம் ,பாஸ்போர்ட்,புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாளமாகக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்த ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 'இசிஐநெட்' இணையதளம் மூலம், வாக்காளர் அடை யாள அட்டை எண்ணை பதிவு செய்தோ அல்லது பதிவு செய் யப்பட்ட செல்போன் எண்ணை வைத்தோ புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தன்னுரிமை காக்க!

தமிழகத்தின் தன்னுரிமை காக்க!

2026 ஏப்ரல் 23 - தமிழகத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்திய ஜனநாய கத்தின் உயிர்நாடியைத் தீர்மானிக்கப் போகும் நாள். மாநில உரிமைகளைப் பறிக்கும் ‘ஒற்றை ஆட்சி’ அதிகாரத்திற்கும், கூட்டாட்சித் தத்து வத்தைப் போற்றும் ‘மக்களாட்சி’ மாண்பிற்கும் இடையிலான போர்.

தமிழகம் மத உணர்வுகளை மதிக்கும் மண், ஆனால் மதவெறியை மிதிக்கும் மண். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாகப் பாதுகாத்து வந்துள்ளது. மதச்சார்பின்மை என்பது இங்கே வெறும் சொல்லல்ல; அது செயல். புல்டோசர் கலாச்சாரமோ, பசுக் குண்டர்களின் அராஜக மோ தமிழ் மண்ணில் நுழையாதவாறு தடுத்தது இக்கூட்டணியின் கருத்தியல் பலமே. ஆனால் பாஜக எனும் மதவாத சக்தியோடு கரம் கோர்த்துள்ள அதிமுகவின் சந்தர்ப்பவாத அர சியல், தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கத் துடிக்கிறது.

ஒன்றிய அரசு மாநிலங்களின் அதிகா ரத்தைப் பறிக்கும் ‘எதேச்சதிகார மையமாக’ மாறி விட்டது. தமிழகம் 1 ரூபாய் வரியாகக் கொடுத் தால், பதிலுக்குக் கிடைப்பதோ வெறும் 29 பைசா. ஆனால் வட மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுக் கிறது. ‘நீட்’ முதல் தேசிய கல்விக் கொள்கை வரை தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகளை யும், கல்விச் சுதந்திரத்தையும் ஒன்றிய அரசு நசுக்குகிறது. கல்வி நிதியை நிறுத்தி வைக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல் பட விடாமல், ஆளுநர் மாளிகை ‘போட்டி அர சாங்கம்’ போலச் செயல்படுகிறது. அதை அதி முக எதிர்க்கவில்லை — ஏற்றுக்கொள்கிறது. விமர்சிக்கவில்லை — விழுந்து கும்பிடுகிறது!

திமுக ஆட்சியில் மகளிருக்குக் கிடைத்த உரிமைத் தொகை, விடியல் பயணத்தில் கட்டண மில்லா பேருந்து வசதி, மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் போன்றவை வெறும் அறிவிப்புகள் அல்ல; அவை எளிய மக்களின் பொருளாதாரத் தூண்கள். தமிழகத்தின் பண் பாட்டைச் சிதைக்கத் துடிக்கும் ‘இந்தித் திணிப்பு’, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற சர்வாதிகார நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடர் போராட்டம் தேவை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி இயக்கங்களின் சமரசமற்ற போராட்டக் குணமும், திமுகவின் ஆளுமைத் திறனும் இணைந்த இந்தக் கூட்டணி மக்களை பாது காக்கும் கேடயமாக விளங்குகிறது. 

உழவர்க ளின் விளைபொருளுக்கு உரிய விலை தராத, தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்கிற ஒன்றிய அரசின் போக்கைத் தடுத்து நிறுத்த ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ க்கு வாக்களிப்பது காலத்தின் தேவை.அதுமட்டுமல்ல காலத்தின் கட்டாயம்!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை