தொடர்ந்து இரண்டாமாண்டு!

திராவிட மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது நம் தமிழ்நாடு.


இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது.


இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி" என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மேலும் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்; "தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!

திராவிட மாடல் தனித்துவமான மாடல்! சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!

முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.

சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!

இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல;

தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!"

- எனவும் தெரிவித்துள்ளார்.



இனி செல்லாதுங்க உங்க ஜவாப்பு!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடைய அதிகரித்து வரும் பதற்றங்கள், உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்துய வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக பேசியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், “அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களால் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. 

ஒவ்வொரு கடற்கரை நாட்டையும் மட்டுமல்லாது, நிலத்தால் சூழப்பட்ட நாட்டையும் இது பாதிக்கிறது. உலக அளவில் அதிகரித்து வரும் பிளவுகள் நம்பிக்கையை அரித்து, சர்வதேச சட்டத்துக்கு சவால் விடுத்து கூட்டுப் பாதுகாப்பின் அடித்தளங்களை சிதைக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் அது நிச்சயமற்றதாக இருப்பதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் 2.8% உயர்ந்து ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 109 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது. 

ஹார்முஸ் ஜலசந்தி பெரும்பாலும் கடக்க முடியாத நிலையில் உள்ளதால் இந்து பகுதியில் அசாவதாரண சூழலே நிலவி வருவதாக புளூம்பெர்க் செய்திவெளியிட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் முதல் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. 

உலகில் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் இந்த கடற் பாதை முடக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

 எனவே, மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகள் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.


எலும்பு கூடுடன்  வந்தவர்!

ஒடிசா மாநிலம் கெந்துஜார் மாவட்டத்தில் உள்ள ஒடிசா கிராமின் வங்கி கிளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 தியனாலி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது பழங்குடியின நபர் ஜித்து முண்டா, உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 20,000 பணத்தை எடுக்கப் பல நாட்களாக வங்கிக்கு அலைந்துள்ளார். 

ஆனால், வங்கி அதிகாரிகள் முறையான ஆவணங்கள் கேட்டதோடு, பணம் வேண்டுமென்றால் கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வாருங்கள் என கூறியுள்ளனர்.இதனால், ஜித்து முண்டா, வங்கி அதிகாரிகளின் வார்த்தைகளை அப்படியே நம்பி, 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த தனது சகோதரி கல்ரா முண்டாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி, அவரது எலும்புக்கூட்டை ஒரு சாக்குப்பையில் கட்டிச் சுமார் 3 கி.மீ தூரம் சுமந்து கொண்டு வங்கிக்கு வந்துள்ளார்.

வங்கியின் வாசலில் எலும்புக்கூட்டை வைத்து ஜித்து முண்டா நின்றதைக் கண்ட மற்ற வாடிக்கையாளர்களும், அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 இறந்து போனவரை எப்படி அழைத்து வர முடியும்?

இதோ அழைத்து வந்துவிட்டேன், இப்போது என் பணத்தைக் கொடுங்கள் என அவர் முறையிட்டது அங்கிருந்தோரை அதிர்ச்சி அடைய வைத்தது.


தகவலறிந்து வந்த போலீசார், ஜித்து முண்டாவிற்குச் சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கிச் சமாதானப்படுத்தினர். வங்கி அதிகாரிகள் தகுந்த வழிகாட்டுதல் வழங்காததே இந்த விபரீதத்திற்குப் பின்னணி என்பது விசாரணையில் தெரியவந்தது. 

இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்த வங்கி அதிகாரிகள், உடனடியாகத் தேவையான சான்றிதழ் ஆவணங்களைச்

 சரிபார்த்துப் பணத்தை வழங்கச ஒப்புக்கொண்டனர்.

போலீசார் உதவியுடன் அவரது சகோதரியின் எலும்புக்கூடு மீண்டும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

மக்களிடம் கனிவாக நடக்காமல், அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி அலட்சியப்படுத்திய வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய