மாற்றம் ஒன்றே மாறாதது!
தேர்தல் நிலவரம்
மாற்றம் வேண்டும்.அதற்காக இளம் வாக்காளர் மடக்கு ஊதி சின்னத்திற்கு வாக்களிக்கிறோம்.
ரொம்ப சரி.
என்ன மாற்றத்தை விரும்புகிறீர்கள்?
கல்வி,வேலை,சுகாதாரம் அடைத்தும் இந்திய மாநிலங்களைவிட தமிழ்நாடு ஒருபடி முன்னே முதலிடம்.
உ.பி,பீகார் என மற்ற மாநிலமக்கள் வேலை வாய்ப்பு,மருத்துவசிகிச்சைக்கு தமிழ்நாடு வருகின்றனர்.
இங்கு தரமான மருத்துவத்தை இலவசமாகப் பெற்றுச்செல்கின்றனர்.
தொழில்,வேலை வாய்ப்பு தாராளம்.
நீங்கள் தேடும் மாற்றம் கல்வியறிவற்று காலில் செருப்பு அணியாமல் துண்டை தோளில் போடாமல் இடுப்பில் கட்டும் 1950 ஆண்டுகள் செல்லும் மாற்றம்?
அல்லது நூறு ரூபாய் சினிமா டிக்கட்டை ஆயிரத்துக்கு வாங்கி ஆட்டம் போடும் சுதந்திரமா?கட்அவுட் மேலேறி கீழே விழுந்து சாகும் உரிமை,தாய்,தந்தை,மனைவி,குழந்தைகளை வெளியே தள்ளி கூத்தியாளுடன் ஆட்டம் போடும் மாற்றமா?
அரசியலை வாழ்வியல் முன்னேறத்துக்கான வழியாகப்பாருங்கள்.
சீரழிவுக்கானவழியாகப் பார்க்காதீர்.
நாம் நம் முன்னோர் ஐம்பதாண்டு அனுபவித்த அவலங்களை விட்டு ஒழித்த தலைவர்கள் ஆற்றிய பணகளை அசைபோட்டுப்பார்த்து புதிய படிகளில் முன்னேறப் பார்ப்போம்.
நூறு ரூபாய் டிக்கட்டை ஆயிரம ரூபாய்க்கு கொள்ளையடிக்கும் நடிகன்,தன் கூட்டத்திற்கு வந்து நசுங்கி செத்த தன்ரசிகர்களுகளைக்கண்டு கொள்ளாத,அனுதாபம் கூட தெரிவிக காத, ஏன் தன் தாய்,தந்தை,மனைவி,மகன்,மகள் ஆகியோரைக் கூட கவனிக்காமல் வேறு பெண்ணுங்களுடன் கூத்தடிக்கும் தற்குறிபளைக்கண்டுமயங்காமல் ஏமாறாமல் இருப்போம்.
உண்மைத் தலைவர்களை இனங்கண்டுகொள்வோம்.
இது ஒரு சாதாரண கணக்கு... உதாரணத்துக்கு, போன 2021 தேர்தலில் மொத்தம் 100 பேர் பட்டியலில் இருக்கிறது அதில், 70 பேர் வாக்களித்திருந்தால், அது 70% சதவீதம்.. SIR மூலம் இறந்தவர்கள் பெயர்கள், டூப்ளிகேட் பெயர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்த பெயர்கள்.... இவற்றையெல்லாம் நீக்கியப்பின், 2026 இல் மொத்தம் 80 பேர் பட்டியலில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அதில் அதே 70 பேர் ஓட்டு போட்டால், ஓட்டு சதவீதம் 87.5%... அதாவது 17.5% சதவீத படி அதிகம்.. ஆனால் ஓட்டு போட்டது அதே 70 பேர் தான்... இதுதான் இப்போது நடக்கிறது...




